மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், சிறப்பு தரிசன கட்டணம் ரூ.100லிருந்து ரூ.200 ஆகவும், ரூ.50லிருந்து ரூ.100 ஆகவும் உயர்த்த நிர்வாகம் திட்டமிட்டது.இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக, நேற்று கோயில் இணை கமிஷனர் நடராஜனிடம் இந்து முன்னணி அமைப்பாளர் பக்தவத்சலம், செயலாளர் சுடலைமணி தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என இணைகமிஷனர் உறுதி அளித்ததாக அமைப்பினர் தெரிவித்தனர்.இந்து ஆலய பாதுகாப்பு குழு நிர்வாகி சுந்தரவடிவேல், பரமசிவம், அழகர்சாமி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் உடனிருந்தன.