பதிவு செய்த நாள்
21
டிச
2015
11:12
நாமக்கல்: நாமக்கல் நகரின் மையத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வந்து, ஸ்வாமியை வழிபட்டு செல்கின்றனர். ஒவ்வொரு விசேஷ தினத்தன்று, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன்படி, நேற்று, மார்கழி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, காலை, 10 மணிக்கு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். பக்தர்களுக்கு, நீர் மோர் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.