வைகுண்டவாச பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவ நிறைவு நாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2015 11:12
விழுப்புரம்: வைகுண்டவாச பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவத்தின் கடைசி நாளான நேற்று, மூலவர் பெருமாள் மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கடந்த 11ம் தேதி பகல் பத்து உற்சவம் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடந்த உற்சவ விழாவில், மூலவர் பெருமாளுக்கு காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆரா தனைகள் செய்யப்பட்டது. பின், பல்வேறு அலங்காரங்களில் உற்சவர் பெருமாள் அருள்பாலித்தார். தொடர்ந்து, நேற்று பத்தாம் நாள் உற்சவத்தையொட்டி, உற்சவர் பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின் கோவில் உட்பிரகாரம் வீதியுலா நடந்தது.