பதிவு செய்த நாள்
21
டிச
2015
12:12
கும்மிடிப்பூண்டி : புதுகும்மிடிப்பூண்டி அய்யப்பன் கோவிலில், நேற்று, மண்டல பூஜை பூர்த்தி ஹோமம் நடைபெற்றது. புதுகும்மிடிப்பூண்டியில், 1000 ஆண்டுகள் பழமை வாயந்த பார்வதி உடனுறை பாலீஸ்வரர் கோவில் உள்ளது. அந்த கோவில் வளாகத்தில், புதிதாக நிறுவப்பட்ட அய்யப்பன் சன்னிக்கு, கடந்த நவம்பர் 2ம் தேதி, கும்பாபிஷேகம், நடைபெற்றது. அதை தொடர்ந்து, நேற்று, மண்டல பூஜை பூர்த்தி ஹோமம் நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் துவங்கி, கலச பூஜை, அஷ்டாபிஷேகம், கலச அபிஷேகம், நடைபெற்றது. அதை தொடர்ந்து, நேற்று மாலை, சிறப்பு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்த அய்யப்பனை வழிபட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.