பதிவு செய்த நாள்
04
ஆக
2011
11:08
ஆத்தூர்: ஆத்தூர் அருகே கீரிப்பட்டி, மாரியம்மன், திரவுபதியம்மன் மற்றும் விநாயகர் கோவில்களில் மகா கும்பாபிஷே விழா இன்று நடக்கிறது.ஆத்தூர் அருகே கீரிப்பட்டி பேரூராட்சி பகுதியில், பழமை வாய்ந்த மாரியம்மன், திரவுபதியம்மன், விநாயகர் உள்ளிட்ட கோவில்கள், பொதுமக்கள் சார்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.தொடர்ந்து, நேற்று 3ம் தேதி இரவு 7 மணியளவில், பாலாயினம், வாஸ்துசாந்தி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சுதர்சனம், அஷ்ட பந்தனம், நாடி சந்தானம், பூர்ணாஹுதி யாக வேள்வி பூஜைகள் நடந்தது.இன்று 4ம் தேதி, அதிகாலை 4.30 மணியளவில், கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், சரஸ்வதி, சுதர்சன ஆயுள், ம்ருத்யங்க, தன்வந்திரி, குபேரன் நவகிரக ஹோமங்கள் நடக்கிறது.தொடர்ந்து, காலை 8 மணியளவில், விநாயகர், மாரியம்மன் மற்றும் திரவுபதியம்மன் ஸ்வாமிகளுக்கு மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.