பதிவு செய்த நாள்
04
ஆக
2011
11:08
அவிநாசி : அவிநாசியிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு கூட்டு வழிபாடு நடந்தது.அவிநாசி ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்த பேரவை சார்பில், மழை வளம், அமைதி, சகோதரத்துவம், கல்வி மேம்பாடு மற்றும் திருப்பணி விரைவாக நடக்க வேண்டியும், ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவிலில் மூலமந்த்ர ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்ற கூட்டு பிரார்த்தனை வழிபாடு நடந்தது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. எம்.எல்.ஏ., கருப்பசாமி, செயல் அலுவலர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.