பதிவு செய்த நாள்
22
டிச
2015
11:12
ஈரோடு: மாதங்களில் இறைவன் மார்கழியாக உள்ளார் என பகவத்கீதை சொல்கிறது. அதே சமயம் மார்கழியில் வரும் வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட முக்கோடி ஏகாதசி என்று அழைக்கப்படுகின்றது. இந்த தினத்தில் பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதன் வழியாகச் சென்று பெருமாளை தரிசித்தால் தீவினைகள் அகலும். கஷ்டங்களுக்கு நிவர்த்தி கிடைத்து, மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில், ஈரோடு மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று முன்தினம் அதிகாலை, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்காதர் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசல் வழியாக தேவி பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள் வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதே போல் ஈரோடு மாவட்டத்தில் டி.என்.பாளையம், நன்செய் புளியம்பட்டி கரிவரதராஜப் பெருமாள் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சத்தியமங்கலம் மணிகூண்டு அருகேயுள்ளது பெரியகோவில் எனப்படும் வேணுகோபால் சுவாமி கோவில், அந்தியூர் பேட்டைபெருமாள், தவிட்டுப்பாளையம் சீனிவாச பெருமாள், வரதராஜ பெருமாள், பருவாச்சி புரசக்காட்டூர் கரியப்பெருமாள் கோவில்கள், புன்செய் புளியம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவில், சென்னிமலை மேலப்பாளையத்தில் ஆதிநாராயண பெருமாள் கோவில், கே.ஜி.வலசு வடுகபாளையம் அணிரங்க பெருமாள் கோவில், வெள்ளோடு ஆலவாய் தண்ணீர் பந்தல் கிருஷ்ணப்பெருமாள் கோவில்களில், சொர்க்க வாசல் திறப்பு வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.