புதுார்: வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில், எளிமையாக கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுமாறு மதுரை ரோமன் கத்தோலிக்க ஆர்ச் பிஷப் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை நிறைவேற்றி வருகிறோம். பிரச்னைகளை களைந்து தீர்வு காண்பதில் அக்கறை காட்டி வருகிறோம். சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சென்னை, கடலுார், திருவள்ளூர் மற்றும் புதுச்சேரியில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யும் வகையில், மதுரை உயர் மறை மாவட்டத்தில் உள்ள 69 பங்குகளை சேர்ந்த மக்களுக்கு தெரிவித்தோம்.இதை ஏற்று ஏராளமானோர் பணம்,பொருளுதவி அளித்து வருகின்றனர். பாதிக்கப் பட்டவர்களுக்கு நேரடியாக வழங்கி வருகிறோம். பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் கிறிஸ்துமஸ் விழாவை எளிமையாக கொண் டாட அறிவுறுத்தி உள்ளோம், என்றார்.