கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆனந்த பைரவி) (ஆதி தாளம்பல்லவி:கும்மியடி பெண்ணே கும்மியடி இருகொங்கை குலுங்கவே கும்மியடிஅனுபல்லவிநம்மை யாளு பொன் னம்பல வாணனைநாடிக் கும்மி யடியேடி பதம் பாடிக் கும்மி யடி யேடி!சரணங்கள்:1. காமம் அகற்றிய தூயனடி சிவகாம சவுந்தரி நேயனடி!மாமறை யோதுசெவ் வாயனடி மணிமன்றெனு ஞானவா காயனடி!2. ஆனந்தத் தாண்டவ ராசனடி நமைஆட்கொண் டருளிய தேசனடி!வானந்த மாமலை மங்கைமகிழ் வடிவாளன டிமண வாளனடி!3. கல்லைக் கனிவிக்குஞ் சித்தனடி முடிகங்கைக் கருளிய கர்த்தனடி!தில்லைச் சிதம்பர சித்தனடி தேவசிங்கம டியுயர் தங்கமடி!4.பெண்ணொரு பால் வைத்த மத்தனடி சிறுபிள்ளைக் கறிகொண்ட பித்தனடி!நண்ணி நமக்கருள் அத்தனடி மிகநல்லனடி யெல்லாம் வல்லனடி!5. அம்பலத் தாடல்செய் ஐயனடி - அன்பர்அன்புக் கெளிவரு மெய்யனடி!தும்பை முடிக்கணி தூயனடி! சுயச்சோதிய டிபரஞ் சோதியடி!