கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கலி விருத்தம்1. தாயின் மேவிய தற்பர மே! முல்லைவாயில் மேவிய மாமணியே உன்றன்கோயில் மேவிநின் கோமலர்த் தாள்தொழாதேயில் மேவி இருந்தன னென்னையே!2. தில்லை வாய்ந்த செழுங்கனி யே! திருமுல்லை வாயில் முதற்சிவ மூர்த்தியே!தொல்லை யேனுன்றன் தூய்த்திருக் கோயிலின்எல்லை சேரவின் றெத்தவஞ் செய்ததே!3. வளங்கொ ளும்முல்லை வாயிலின் மேவியகுளங்கொ ளுங்கட் குருமணி யே! உனைஉளங்கொ ளும்படி உன்றிருக் கோயிலிக்களங்கொள் நெஞ்சினன் கண்டதுங் கண்டேத!4. மலைவி லாமுல்லை வாயிலின் மேவியவிலையி லாமணி யே! விளக் கேசற்றும்கொலையி லாதவர் கூடுநின் கோயிலின்தலைநி லாவத் தவமென்கொல் செய்ததே!5.சீர்சி றக்குந் திருமுல்லை வாயிலில்ஏர்சி றக்கும் இயல்மணியே! கொன்றைத்தார்சி றக்குஞ் சடைக்கனி யே! உன்றன்ஊர்சி றக்க உறுவதெவ் வண்ணமே?6. சேற்கொள் பொய்கைத் திருமுல்லை வாயிலிற்பாற்கொள் வண்ணப் பரஞ்சுட ரே! விடைமேற்கொள் சங்கர னே! விமலா! உன்றன்காற்கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ?7. வண்ண மாமுல்லை வாயிலின் மேவியஅண்ண லே! அமுதே! நுதற்கண்ணனே! உன்னைக் காணவந் தோர்க்கெலாம்நண்ண ருந்துயர் நல்குதல் நன்றதோ?8. மண்ணின் ஓங்கி வளர்முல்லை வாயில்வாழ்கண்ணுள் மாமணியே! கரும்பே உனைஎண்ணும் அன்பர் இழிவடைந் தாலதுபண்ணு நின்னருள் பாரிடை வாழ்கவே9. தீதி லாத திருமுல்லை வாயில் வாழ்கோதி லாத குணப்பெருங் குன்றமே!வாதி லாதுனை வாழ்த்தவந் தோர்தமைஏதி லாரென் றிருப்பதும் என்கொலோ?10. தேசு லாவியசீர் முல்லை வாயில்வாழ்மாசி லாமணி யே! மருந் தே! சற்றும்கூசி டாமனின் கோயில்வந் துன்புகழ்பேசி டாத பிழைபொறுத் தாள்வையே!