Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவானந்த போதம் குருஞான சம்பந்த சுவாமிகள் சொக்கநாத ...
முதல் பக்கம் » பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு
அனுபூதி நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2015
04:12

1. உள்ளங் கரைய வடல்கரைய ஆனந்த
வெள்ளங் கரைபுரண்டு மேலாகக்-கள்ளமலம்
பொய்யாக என்னுட் புகுந்தவா றென்கொலோ
ஐயா தியாகவினோ தா!

2. ஏதேது செய்தாலும் ஏதேது சொன்னாலும்
ஏதேது சிந்தித் திருந்தாலும் மாதேவா!
நின்செயலே என்று நினதருளா லேயுணரில்
என்செயலே காண்கிலே னே.

3. மாயைமலம் எங்கே மறைந்ததோ! மாயைதனில்
ஆயசகம் எங்கே அழிந்ததோ - காயமதில்
தங்கும் புருடனெங்கோ! சச்சிதா னந்தவெள்ளம்
எங்கு மிகக்கோத்த தே!

4. நானுஞ் சுகவடிவாய் நண்ணினேன் நின்னருளால்
வானுஞ் சுகவடிவாய் மன்னிற்றே:- வானுஞ்
சுகரூப மன்றுமணந் தோற்றநிலம் போலுன்
அகரூப மட்டே அது.

5. ஈசன் அடியில் இருக்கையிலே எங்கெங்கும்
ஈசனடி தேடி இளைத்தேனே! பேசரிய
பொற்பதத்தன் செங்கமலப் பொற்பாதன் றன்னுடைய
நற்பதத்தைக் காணாமுன் நான்.

6. நற்பதஞ்சேர் ஆரூரின் ஞானபிர காச னெந்தை
தற்பரனோர் ஞானவாட்டந்தானே சொற்பனத்தும்
காரார் மறலியயன் கண்ணனுக்கும் அஞ்சேனை
யாராலு மென்னசெய்ய லாம்?

7. வெறும்பாழிற் பேரின்ப வெட்டவெளி தன்னிற்
குறும்பாளர் காணாக் குடலின் உறும்பாசம்
ஒட்டியெனை வைத்தனனே யுற்றபிர பஞ்சமெல்லாம்
ஆட்டியஞா னப்பிரகா சன்.

8. என்றுஞ் சிவத்தோ டிணைபிரியா தேயறிவாய்
நின்றபடி தன்னை நிகழ்த்தினான் மன்றில்
நடமாடும் ஆரூரன் ஞானபிர காசன்
திடமாக என்னுள்ளத் தில்.

9. நாதனார் தென்கமலை நாயகனார் எவ்வுயிர்க்கும்
போதனார் செங்கமலப் பொற் பாதர் - போதமற
ஒன்றிரண்டு தானறவே உண்மையிலே கூட்டியெனை
இன்றறவே வைத்துவிட்டா ரே!

10. நன்னெஞ்சே! நீகேட்ட நன்மையெல்லாஞ் சொல்லுதற்குக்
கன்னெஞ்ச மாலயனுங் காணாதோன் வன்னெஞ்சர்
இன்னகுறை யுண்டென்னா ஈசன் எதிர்வந்தான்
என்னகுறை சொல்லாய் இனி.

11. இட்டசனம் எங்கே? இதமகிதந் தாமெங்கே?
துட்டசனம் எங்கே? தொழிலெங்கே? சிட்டருடன்
கூடியிருந்ததெங்கே குன்றாச் சிவானந்தம்
நாடியது வாயிருந்த நாள்?

12. வாக்குமனக் காயத்தான் வந்தபொருள் அத்தனையும்
வாக்குமனக் காயமுடன் மாயுமே வாக்குமனக்
காய முடனிழந்து காண்ஞா திருஞான
ஞேயம் இழந்தநிலை

13. பசிப்போஞ் சிவபோகம் பூரணமாய் எங்கும்
வசிப்போம் உலகில் வசியோம் முசிப்பின்றி
வாழ்வோஞ் சிவத்தையுணர் மாதவர்தம் பொன்னடிக்கீழ்
தாழ்வோம்: எமக்கார் சரி?

6. உபாய  நிலை

1. அறிவுநீ என்ன அறிந்தறிந்து மாயைச்
செறிவுநா னென்றென்று சேர்ந்தால் அறிவு
தெரிந்திடுமோ, இன்பசுகஞ் சேர்ந்திடுமோ, நின்னைப்
பிரிந்திடுமோ சென்மப் பிணி?

2. அரணங்கள் தாமெரித்த அத்தரே! என்னுட்
கரணங்க ளோட்டும் வகை காட்டீர் -கரணங்கள்
நீயதுவாய் நில்லாமல் நின்னறிவைக் கண்டருளிற்
போயதுவாய் நின்றுவிடப் போம்.

3. தானல்லா தத்தனையுந் தானென் றுழலாமல்
தானெல்லா மாயதனுட் டாக்காமற்-றானெல்லாம்
ஆனோம் எனும்போத தாக்காமல் ஈசனிடத்
தானோனே யாயினவ னாம்.

4. தேகநாம் என்னென்று செப்புவீர் ஈதில்வரும்
போகநா மென்று புலம்புவீர் நோக
வருந்துவீர் தீவினையின் மாறாத இன்பம்
பொருந்துவீ ரெப்படிநீர் போம்?

5. தன்னை இழந்திடத்தே தானே சுகவடிவாய்
இன்னபடி என்றறியா எங்கோனும் பின்னமற
நின்றநிலை தானுந் தெரியாதே நின்றவர்கட்
கன்றோ பிறப்பறுக்க லாம்?

6. உன்னாதே பற்றா துரையாதே ஒன்றியதில்
நின்னாம மில்லை நிகழாதே பன்னாட்
பறையிறந்து நிற்கும் பயனணைந்தார் நெஞ்சிற்
நிறையிறந்து நிற்குஞ் சிவம்.

7. அருளறிந்து தானாம் அறிவறிந்தே ஆங்குட்
பொருளறிந்து தானடங்கிப் போகா இருளகல
விம்மா திருந்து விகற்பமற ஒன்றாகிச்
சும்மா இருக்கை சுகம்.

8. சேறியுந் தனுவாதி சேர்ந்தறிந்து நின்ற
அறிவை அறிவால் அறிந்தே-அறிவிழந்து
நின்றாற் சுகானந்த நீடுநிலை வேறு
சென்றால் சுகங்கிடையாதே.

9. தத்துவத்தை விட்டருளிற் றான்கலந்து தன்னிழப்பின்
மெத்துஞ் சுகத்தின் மிகவழுந்திச் சுத்தமாய்
ஒன்றாகி நின்ற உணர்வும் ஒழிந்தக் கால்
அன்றோ சிவபோகமாம்?

10. சுட்டறிவு கெட்ட சுகாதீத உண்மையிலே
விட்டகலா தென்றும் விரவுவோர் இட்டமுடன்
யோக சமாதிகளும் உட்புறம்பாம் பூசைகளும்
ஆக நினையார் அவர்.

11. நின்னறிவில் யானொளித்து நீயாகி நின்றதுபோம்
என்னறிவில் நீயொளித்தே யானாகி எந்நாளும்
நிற்கவில்லை யாமாகில் நின்சனனம் போக்குதற்குக்
கற்கவல்ல தேதுமில்லை காண்.

12. இன்பசுகத் துள்ளே இருக்கலாம் எப்போதுந்
துன்பவினை யுன்னைத் தொடராது வன்பா
மருட்டேக மாயடங்கி மாயாமல் நெஞ்சே!
அருட்டேக மாயடக்கு வாய்.

13. தேகம் மறந்து திருவருளாய் நின்றசிவ
போகம் விளையப் புணர்நெஞ்சே!- நோக
வருந்தாமற் றீவினையில் வாடாமற் றுன்பம்
அருந்தாமல் நீ பிறவாமல்

14. பூகாதி பாசமன்றோ பூரணா னந்தமன்றோ
பேதமற நம்முட் பிரானன்றோ வாதனைகள்
விட்டாற் சுகமன்றோ என்றுணர்வில் வேண்டுவதுங்
கேட்டாற் பிறப்பும் கெடும்.

15. அழுந்தாதே பாசத் தனுதினமும் ஐயோ!
விழுந்தால் எழுந்திருக்க வேண்டுஞ் செழும்பாகை
மீறித் தருமிரத வீட்டின்ப மாமலை மேல்
ஏறித் திரும்பலா மே.

16.என்றுஞ் சனனத் திடர்க்கடலி லேமூழ்கிப்
பொன்றுமன மேயுனக்கோர் புத்திகோள் : நன்று
தனிச்சங்கஞ் சேராமற் றற்பரனைச் சேரில்
இனிச்சங்கஞ் சேரா திரு.

7. பணியறுத்தல்

1. அவரவருக்குள்ளபடி ஈசனரு ளாலே
அவரவரைக் கொண்டியற்று மானால் - அவரவரை
நல்லார்பொல் லாரென்று நாடுவதென் னெஞ்சமே!
எல்லாஞ் சிவன்செயலென் றெண்.

2. எங்கே நடத்துமோ எங்கே கிடத்துமோ
எங்கே இருத்துமோ என்றறியேன்! கங்கைமதி
சூடினான் தில்லையிலே தொந்தோந்தோம் என்று நடம்
ஆடினா னெங்கோன் அருள்.

3. போகம் புவனம் பொருந்துமிடம் எங்கெங்குந்
தேகங் கரணந் திரியுமேஆகிலது
தன்னை நீ என்று தவியாதே நெஞ்சமே!
நின்னையே கண்டருளில் நில்.

4. ஏதேது செய்திடினும் ஏதேது பேசிடினும்
ஏதேது சிந்தித் திருந்திடினும் மாதேவன்
காட்டிடுவ தானவருட கண்ணைவிட்டு நீங்காது
நாட்டம் அதுவாய் நட.

5. எடுத்தவுடற் கேய்ந்தகன்மாம் எப்போது மூட்டும்
விடுத்துவிட்டோ மென்பர் விழலர்: விடுத்த
ததுவன்றே யைந்துமலம் ஆறாறும் நீத்த
இதுவன்றே யாந்துறவென் பேம்?

6. எவ்வுயிருங் காக்கவோர் ஈசனுண்டோ? இல்லையோ?
அவ்வுயிரில் நாமொருவர் அல்லவோ? வவ்விப்
பொருகுவதும் நெஞ்சே! புழுங்குவதும் வேண்டா
வருகுவதும் தானே வரும்.

7. முப்பதுசென் றால்விடியும் முப்பதுசென் றாலிருளும்?
அப்படியே ஏதும் அறிநெஞ்சே! எப்பொழுதும்
ஆங்காலம் எவ்வினையும் ஆகும்: அது தொலைந்து
போங்காலம் எவ்வினையும் போம்.

8. ஆவலுற்றி டுஞ்சகலத் தாவதுவும் ஆங்கவரே
கேவலத்தின் மூழ்கிக் கிடப்பதுவும் நாவரற்றல்
இல்லாத சத்தத் திருப்பதுவும் இம்மூன்றும்
இல்லான் செயலென் றிரு.

9. பாசஞ் சடமுயிரோ தானாகப் பற்றறியா
ஈசனிரண்டு மிணைத்தாட்டிப் பூசலென்றுஞ்
செய்பவனே தானே திரும்பியருள் செய்யாமல்
உய்பவர்க ளுண்டோ? உரை.

10. முற்றின்ப மாமருளில் மூழ்குவதும் மோகமிகு
சிற்றின்ப மாமருளிற் சேர்குவதும் உற்றிங்
கறிந்தால்நஞ் னெஞ்சே! அகிலாண்ட மெங்குஞ்
செறிந்தான் செயலே தெளி.

11. என்னிடத்தில் நின்செயலே இல்லையென்றால் யாதுறினும்
நின்னிடத்தில் யான்வேண்டல் நிச்சயமே என்னிடத்தில்
இன்மை யுயிர்க்குயிர்நீ இன்மை யிருந்தியற்றில்
நன்மைதின்மைக் கேதுவா நான்?

12. நாம்பெரிய ரென்னுமதை நாடா தடக்குமவர்
தாம்பெரிய ரென்றுமறை சாற்றியிடும் நாம்பெரியம்
என்பார் சிறியர்: இவரலால் இவ்வுலகில்
துன்பார் சுமப்பார்கள்? சொல்.

13. கட்டமாங் காயங் கலையனைத்துங் கற்றாலும்
அட்டமா சித்தி அடைந்தாலும் இட்டம்
பரம சுகமே பதியாத போது
திரம சுகமே தெளி.

14. மனவாக்குக் காயமுயிர் மண்ணிசைப் பானும்
அனமாதி போகமளிப் பானும் நனவாகி
கூட்டிவிடு வானுமுத்தி கூட்டுவா னும்பிறப்பில்
ஆட்டிவிடு வானும் அரன்.

15. முன்னைவினைக் கீடா முதல்வன் அருணமைக்கொண்
டென்னவினை செய்ய இயற்றுமோ! இன்னவினை
செய்வோந் தவிர்வோந் திரிவோ மிருப்போமிங்
குய்வோ மெனும்வகையே தோது.

16. ஊட்டும் வினையிருந்தால் உன்னாணை உன்பதத்தைப்
பூட்டிப்பிடித்துப் புசிப்பிக்குங் கேட்டுத்
திரியாதே வந்துதில்லைத் தெய்வமே என்றென்
றெரியாத நெஞ்சே! இரு.

17. என்னதன்று நின்செயலே என்றறிருந்தால் யான்விரும்பி
என்னவென்று வாய்திறப்பேன் ஈசனே! இன்னமின்னம்
எப்படியோ நாயேனை ஈடேற்ற வேண்டுமுனக்
கப்படியே செய்தருளு வாய்.

18. வன்மைபுரி காய மரப்பாவை தன்னையரன்
கன்மமெனுஞ் சூத்திரத்தாற் கட்டியே நன்மைதின்மை
ஆட்டுவதும் நாடா தறிவிலார் தஞ்செயலாய்
நாட்டுதல்போ லுண்டோ நகை?

19. ஆறாறு தத்துவமும் ஆணவமும் நீங்கியுயிர்
பேறாக ஆனந்தம் பெற்றாலும் வேறாகப்
பார்த்திருப்ப தன்றியே பாழான கன்மத்தை
நீத்திருக்க லாமோ நிலத்து?

20. ஆனசுக துக்கத் தழுந்துகினும் ஞானிகடாம்
யானெனதென் றெண்ணி இயைந்திடினுந்-தானதற்கு
வேறென் றருளால் விரளமாய்க் காணிலென்றும்
ஏறுமோ கன்ம மிலை.

21. சத்துருவுந் மித்துருவும் தாரணியில் வேறில்லை
சத்துருவும் மித்துவுருந் தன்னெஞ்சே! பெத்தமலம்
வீட்டும் படிக்கு வுனைக்கீ டுனைத்தனுவோ
டாட்டுஞ் சிவனென் றறி.

22. இன்னவினை இன்னதலத் தின்னபொழுது இன்னபடி
இன்னதனால் எய்தும் எனவறிந்தே அன்னவினை
அன்ன தலத் தன்னபொழுதன்னபடி அன்னதனாற்
பின்னமறக் கூட்டும் பிரான்.

23. அன்றே அநாதி அமைத்தபடி அல்லாதொன்
றின்றே புதிதா யியையுமோ? என்றுஞ்
சலியா தியற்றுவான் றன்னையே நோக்கி
மெலியா திருந்து விடு.

24. ஆர்பெரியர் ஆர்சிறியர் ஆருறவர் ஆர்பகைஞர்
சீர்பெரியர் ஆனந்த சிற்சொருபர் பேர்பெரியர்
எங்கெங்குந் தாமா யிருந்துசட சித்தனைத்தும்
அங்கங் கியற்றுவதா னால்?

25. நன் கருத்தே தென்கமலை ஞானபிர காசனே!
என் கருத்தே உன் கருத்தென் றெண்ணாமல் உன்கருத்தே
என் கருத்தென் றெண்ணியே யான்பட்ட துன்பமெல்லாம்
உன்கருத்தே தீரவெறி யும்.

26. அமைத்தவினைக் கீடா அனுதினமுஞ் செய்வ
திமைப்பொழுதும் வீண்செயலொன் றில்லை உமைக்குரியான்
எல்லாம் அறிந்தெங் கியற்றுவதுந் தன்னடிமை
வல்லார் தமக்குணர்த்து வான்.

27. கள்ள அரசனே! கருணையுடன் என்னறிவில்
உள்ளசுகந் தந்துவிட ஒண்ணாதோ? மெள்ள
வருத்துவதுந் தீவினையில் வாட்டுவதும் ஞானம்
பொருத்துவதம் ஏன்றான்? புகல்.

28. கேளா தெனைமலத்திற் கிட்டியெடுத் தாளாக்கி
மீளா தளித்தபர வீட்டிலெனை ஆள
உனக்குப் பொறியோ? உனைத்தொடர்ந்தாள் என்ன
எனக்குப் பொறியோ இனி?

29. சும்மா தனுவருமோ? சும்மா பிணிவருமோ?
சும்மா வருமோ சுகதுக்கம்? நம்மான் முன்
செய்தவினைக் கீடாச் சிவனருள் செய் விப்பதென்றால்
எய்தவனை நாடி இரு!

30. பொல்லாத தீ வினையிற் போகார்கள் போனாலும்
எல்லாஞ் சிவன்செயலே என்றிருப்பார் நல்லார்கள்
நத்துங் கமலையில்வாழ் ஞான பிர காசனருள்
சற்றும் பிரியா தவர்.

31. கூட்டுவதுங் கூட்டிப் பிரிப்பது வும் ஒன்றொன்றை
ஆட்டுவதும் ஆட்டி அடக்குவதுங் காட்டுவதும்
காட்டி மறைப்பதுவுங் கண்ணுதலோன் முன்னமைத்த
ஏட்டின் படியென் றிரு.

32. உள்ளதுதான் போமோ? மற் றில்லா ததுவருமோ?
பள்ளமே வெள்ளம் பரவாதோ? கள்ளமாய்ப்
பித்துப்போ லேபிதற்றும் பேதைமட நெஞ்சமே!
செத்துப்போ னானோ சிவன்?

33. ஈசன் பலவீனன் என்றக்கால் ஆலயத்தின்
மோசம்வந்த தென்று மொழியலாம்ஈசனே
ஆக்குவதும் ஆக்கி அழிப்பதுவுந் தானானால்
நோக்குவதென் யாம்பிறரை நொந்து?

34. தேசஞ் சிவாலயங்கள் சேர அலையவொரு
மோசம்வந்த தையோ முதல்வனே! தேசத்து
மன்னைவெறுப் பேனோ வருவினையை யூட்டுவிக்கும்
உன்னைவெறுப் பேனோ? உரை.

8. துறவின் பகுதி

1. துரத்தியுன்னை ஆசை தொடராமல் என்றும்
விரத்தியினால் ஆங்கவத்தை விட்டுப் பரத்திலன்பு
செய்யடா செய்யடா சேரப்ர பஞ்சமெல்லாம்
பொய்யடா பொய்யடா பொய்.

2. அனைத்துலகும் நம்பால் அனுக்கிரகம் பெற்றென்?
அனைத்துலகும் நம்வசமாய் ஆயென்?- அனைத்துலகுங்
கொண்டாடி லென்னை? வினைக் கொத்தறுத்துப் பேரின்பங்
கண்டாடில் அன்றோ கதி!

3. அறிவிழந்து நின்றசுக ஆனந்தத் துள்ளே
குறியிழந்து நின்று குலாவிப் பிறியா
திருந்தாற் பிறப்பறுமோ இச்சைமால் கொண்டு
திரிந்தாற் பிறப்பறுமோ? செப்பு.

4. எத்திசையும் எவ்வுலகும் எத்தொழிலும் எப்பயனும்
நித்தியமென் றெண்ணின் நிலையாதே!- புத்தியினாற்
கண்ணாடி யிற்றோன்றி மாய்ந்துவிடுங் காணிவற்றைக்
கண்ணாடி யிற்கனவிற் காண்.

5. எத்தனை தான் கற்றாலும் எத்தனை தான் கேட்டாலும்
எத்தனைசா தித்தாலும் இன்பறா:- சித்தமே!
மெய்யாகத் தோன்றி விடுமுலக வாழ்வனைத்தும்
பொய்யாகத் தோன்றாத போது.

6. மின்போலத் தோன்றி விடுமுலக வாழ்வனைத்தும்
என்போ லிகள்திரமென் றெண்ணுவார்:- தன் போகம்
இல்லார் சிவபோக மென்றும் அருந்தியிடும்
நல்லார் திரமிதுவென்னார்.

7. தேசமூர் பேர்காணி சீர்வரிசை சாதியெனும்
ஆசையால் நெஞ்சே! அலையாதே நேசப்
பொருப்பானை நின்னறிவிற் போக்கு வரவற்
றிருப்பானைப் பார்த்தே யிரு.

8. ஆகம் பகையாவ தன்றிப் பகையுண்டோ?
மோகந் தவிர்ந்த முனிவோர்க்கிங்கேகன்
இருவர் அறியாத ஈசனருள் அல்லால்
ஒருவர் துணை யுண்டோ? உரை.

9. அளவிலாச் செல்வத் தடைந்தாலும் ஆகத்
தளவிலாச் சித்திகளுண் டாயும் அளவில்லை
ஆய்ந்தாலும் என்னை, சுகர் அல்லர்? சிவானந்தம்
தோய்ந்தார்கள் அன்றோ சுகர்?

10. ஆகாத காரியஞ்செய் தாஞ்சுகமும் அங்கதனாற்
போகாத துக்கம் பொருந்துவதும் போகா
உரைக்கிலணு வுக்கும் உயர்ந்தமா மேரு
வரைக்கும் நிகரா மதி.

11. பொய்யில்வருந் துன்பம் புகுத்தறிந்தும் பூரணமே
மெய்யில்வரு மின்ப விளைவறிந்தும் ஐயோ!
தெளியாத தென்னநலந் தீங்குகண்டு சற்றுங்
களியாத தென்ன மயக்கம்?

12. ஆகஞ் சிறைச்சாலை அக்கரணங் காவலாள்
போகம் புவனம் பொருந்துமிடம் -ஓகோ
இதனுட் படுமுயிர்கட் கீழேற்றஞ் செய்வான்
அதனுக் கிறைவன் அரன்.

13. அதிட்டானம் ஈசன் அருளன்றி மற்றை
அதிட்டான் மெல்லாம் அநித்தம் அதிட்டானம்
பொய்யென் றறியாமற் பூதலத்து நெஞ்சமே!
மெய்யென் றுழல்வதெல்லாம் வீண்.

14. நின்னை மதிக்கின் நினக்கதிபர் செல்வம் நினை;
நின்னை வறிஞனென நீ நினையின் நின்னுந்
சிறியார் வறுமைநினை; சிந்தைபுக என்றுங்
குறியா இடும்பை துக்கங் கோள்.

9. அறிவோர்ப் புகழ்ச்சி

1. அனித்தியத்தை நித்தியமென் றாதரிக்கும் பொல்லா
மனித்தருடன் கூடி மருவார் தனித்திருந்து
மோனந்த மாஞ்சிவத்தின் மூழ்கி மலத்தையறுத்
தானந்த மாயழுந்து வார்.

2. தாகம் மறந்து சதிர்மறந்து தான் மறந்து
தேகமறந் தட்டமா சித்திமறந் தாகத்தின்
வந்ததறி யாதிருந்து மாறாச் சிவானந்தஞ்
சந்ததம்வாழ் வார்க்கார் சரி.

3. உள்ளமலம் நீங்கி ஒழியாச் சிவானந்த
வெள்ளந் துளைந்து விளையாடும் பிள்ளைகாள்!
அத்துவித மானீர்நம் ஆகம் பிரிந்தோமென்
றித்துவித மெண்ணுவா னேன்?

4. அறிவாய் அறிவிழப்பில் ஆகின்ற இன்பச்
செறிவாய்ச் சுகமாய்த் தினமும் - பிறியா
திருந்தங் கதீதமாம் ஏய்ந்தசிவா னந்தம்
பொருந்துவார் முத்தரெல்லாம் போய்!

10. மடவோர்ப் பழிப்பு

1. தனையறியார் ஈசன் றனையறியார் பாச
வினையறியார் ஆனந்தம் மேவார்..... தனையறியுஞ்
சிட்டர்தமக் கில்லாத தீங்குரைப்பர் பொல்லாத
துட்டர்தமக் குள்ள தொழில்.

2. தன்னை அறியார் தலைவன் றனையறியார்
முன்னை வினையின் முடிவறியார் பின்னைக்
குருக்களென்றும் பேரிட்டுக் கொள்வார்கள் ஐயோ!
தெருக்கள் தமிலே சிலர்.

3. வாயுவெளி தானசையா வாற்றிருந்தாற் போலென்றும்
நீயதுவும் பூரணமாய் நிற்கவே காய்த்துக்
குள்ளுள்ளே தான்சிவமென் றுற்றுப்பார்ப் பாருசிப்
பொள்ளலால் வான்பார்ப்பார் போல.

4. கற்கவிடர்ப் பட்டு மிகக் கற்றவெல்லாம் கற்றவர்பால்
தர்க்கமிட்டு நாய்போலச் சள்ளெனவோ? நற்கருணை
வெள்ளம் அடங்கும் விரிசடையார்க் காளாகி
உள்ளம் அடங்கவல்ல வோ?

5. அறியார் கனவினிலும் ஆனந்த ரூபம்
அறிவார் தமையும் அடையார் அறிவார் கட்
கில்லாத திங்கே எடுத்துரைப்பார் இவ்வுலகிற்
பொல்லார் தலையிற் பொறி.

பொதுநிலை

1. நீதியிலா மன்னர் இராச்சியமும் நெற்றியிலே
பூதியிலார் செய்தவமும் பூரணமாஞ் சோதி
கழலறியா ஆசானுங் கற்பிலருஞ் சுத்த
விழலெனவே நீத்துவிடு.

2. ஐந்தறிவாற் கண்டாலும் ஆரேது சொன்னாலும்
எந்த விருப்புவெறுப் பேய்ந்தாலுஞ் சிந்தையே
பார விசாரத்தைப் பண்ணாதே ஏதொன்றுந்
தீர விசாரித்துச் செய்.

3. பரபரக்க வேண்டா பலகாலுஞ் சொன்னேன்
வரவரக்கண் டாராய் மனமே! ஒருவருக்கும்
தீங்கு நினையாதே செய்நன்றி குன்றாதே
ஏங்கி யிளையா திரு.

4. மிகுத்தகுலஞ் செல்வத்து மேவுவதும் அத்தைப்
பகுத்துப்பொய் யென்றுவிடும் பாங்குந்தொகுத்து
விரித்தால் நன் னெஞ்சே! மிகுவா ரணத்தை
உரித்தான் செயலென் றுணர்.

5. ஆறாறு தத்துவமவைத் தத்திலுறை மூர்த்திகள் வைத்
தேறா மலபாக மேறவே மாறாமல்
உன்னை விடா தாள்வான் உனைக்கேட்டோ நெஞ்சமே!
என்ன விசாரம் எமக்கு?

6. தானோ அசத்தல்ல என்றிறிந்தாற் றாரணியில்
ஏனோ பிதற்றிடுவ தேழை நெஞ்சே! தானே
இறவா ததுதான் இறக்க அருளை
மறவா திரு சிவமா வை.

7. ஏற்றா தவையா யிருப்பதுவும் உன் மயக்கம்.
ஆற்றா துதிரென் றரற்றுவதந்-தோற்றாது
தோற்றுவதும் உன்னைச் சுகபூ ரணனென்று
தோற்றுவதும் ஈசன் செயல்.

8. அன்றே அரனணுக்கள் பாசங்கள் ஐந்தொழில்கள்
நன்றே சிவனும் நடுவனே சென்றருளில்
நிற்கச் சிலர்சிலர்கள் நீணரகிற் பூதலத்திற்
சொற்கத் திருப்பதென்னோ? சொல்.

9. ஆசையறாய் பாசம்விடாய் ஆனசிவ பூசைபண்ணாய்
நேசமுட னைந்தெழுத்தை நீ நினையாய் சீசி!
சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்
மனமே! உனக்கென்ன வாய்?

10. தில்லைவனங் காசி திருவாரூர் மாயூரம்
முல்லைவனங் கூடல் முதுகுன்றம் நெல்லைகளார்
காஞ்சிகழுக் குன்றமறைக் காடருணை காளத்தி
வாஞ்சியமென்: முத்தி வரும்.

தனிப்பாடல்        கட்டளைக் கலித்துறை

1. ஆய்வார் பதிபசு பாசத்தி னுண்மையை ஆய்ந்தறிந்து
காய்வார் பிரபஞ்ச வாழ்க்கையெல் லாங்கல்வி கேள்வியல்லல்
ஓய்வார் சிவானந்த வாரியுள் ளேயொன் றிரண்டுமறத்
தோய்வார் கமலையுள் ஞானப்ர காசன்மெய்த் தொண்டர்களே.

2. கனக்கும் பொதிக்கும் எருதுக்குந் தன்னிச்சை கண்டதுண்டோ?
எனக்குமு டற்கு மெனதிச்சை யோவிணங் கார்புரத்தைச்
சினக்குங் கமலையில் ஞானப்ர காச சிதம்பரவின்
றுனக்கிச்சை எப்படி அப்படியாக உரைத்தருளே.

3. எல்லா முனது செயலென் றறிந்து மெனதுளத்திற்
பொல்லாத சங்கற்ப மேன்வரு மோபுர மூன்றெரிக்க
வல்லாய்! கமலையில் ஞானப்ர காசவரத! இது
சொல்லாய் கரண மயக்கமன்றோ? என் தொழிலல்லவே!

கலி விருத்தம்

அவரவர் வினை வழி அவரவர் வந்தனர்;
அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்;
எவரெவர்க் குதவினர்? எவரெவர்க் குதவிலர்?
தவரவர் நினைவது தமையுணர் வதுவே.

நூல்: முப்பத்து மூன்று

 
மேலும் பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு »
temple news
நினைமின் மனனே! நினைமின் மனனேசிவபெரு மானைச் செம்பொனம் பலவனைநினைமின் மனனே! நினைமின் மனனே!அலகைத் தேரின் ... மேலும்
 
5. திருமால் பயந்த திசைமுகன் அமைத்துவரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்துமலைமகள் கோமான் மலர் அடி ... மேலும்
 

திரு ஏகம்ப மாலை நவம்பர் 06,2015

(திருக்கச்சி ஏகாம்பரநாதரைத் துதித்துப் பாடிய மாலை)1. அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் ... மேலும்
 

திருத் தில்லை நவம்பர் 06,2015

1. காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் ... மேலும்
 
temple news
1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar