பதிவு செய்த நாள்
22
டிச
2015
04:12
நேரிசை வெண்பா
1. ஆடரவ்ஞ் சூழ்மதுரை அம்மானே! அன்பருடன்
கூடவிளை யாடிவருங் கோமானே!-நீடுபுகழ்
மென்மேலு மென்றனக்கு மேவியிடப் பொல்லாத
என்மேல் வினைகெடுப்பா யே.
2. புண் கட்டு தோலைப் புதுக்கி மயக்கமுறக்
கண் கட்டு வித்தைபோற் காட்டுவாய்-பண் கட்டுப்
பூணுவேன் றன்னையின்பப் பூரணத்திற் பூணவருள்
தாணுவே! சொக்கநா தா!
3. ஏடாரும் நாரியரை ஐயோ! யமன் பிடிக்கும்
மாடா வதியென்று பாராமற்-கேடாரப்
பூண்டஆ பாதனென்று போடா தெனையருளில்
ஆண்டவா! சொக்கநா தா!
4. காக்கைநரி ஞானி கழுகுபருந் துக்கிரையாம்
ஆக்கையினை யானென் றலையாமல் வாக்கு மனம்
எட்டாத வீட்டி லெனைக்காட்டு துட்டருளந்
தட்டாத சொக்கநா தா!
5. பஞ்சமா பாதகனை யாண்டபுகழ் பார்மீதிற்
கொஞ்சமா வீறுபுகழ் கூறுமே வஞ்சமே
பூண்டளவில் பாதகஞ் செய் பொல்லாத நாயேனை
ஆண்டளவிற் சொக்கநா தா!
6. வறிஞர் தமையொக்க வைக்கு மன்னர் போல
அறிஞர் தமையாள்வ தன்றிப் பொறிபுலனால்
வெம்புவேன் றன்னை விடுத்தாள்வ தேபாரஞ்
சம்புவே! சொக்கநா தா!
7. என்னால் உனையடைய வல்லேன் எனிலிடரில்
இந்நாள் அளவு மிருப்பேனோ? - பன்னாகம்
பூண்டவா! வேணிப் புனிதா! மதுரைநகர்
ஆண்டவா! சொக்கநா தா!
8. எல்லாமும் வல்லசித்தர் என்றக்கால் என்னுடைய
பொல்லாக் கருத்தகற்றப் போகாதோ?- அல்லாடும்
பொங்கரா வேணிப் புனிதா! மதுரை நகர்ச்
சங்கரா! சொக்கநா தா!
9. பேசானு பூதி பிறக்க எனதுளத்தில்
ஆசா பசாசை அகற்றுவாய் தேசாருஞ்
சிற்பரா னந்தா திருவால வாயுறையுந்
தற்பரா! சொக்கநா தா!
10. இறந்தும் பிறந்தும் இளைத்தேன்: இனியான்
மறந்தும் பிறவா வரந்தா சிறந்த புகழ்
ஞாலவா யாமுடிக்கு நாட்டுசூ ளாமணியாம்
ஆலவாய்ச் சொக்கநா தா!
11. உலக வெறுப்பும் உடல் வெறுப்பும் உள்ளத்
திலகு மலவெறுப்பும் எல்லாம் அலகிறந்த
நந்தாத இன்பசுக நாட்டின் விருப்பமுறத்
தந்தாள்வை சொக்கநா தா!
12. எப்போது மும்மலம்விட் டேறுவேன்? பூரணமாய்
எப்போதுன் இன்பசுகத் தெய்துவேன்? - எப்போதும்
நித்தியா! சுத்தா! நிராமயா! சொற்றவறாச்
சத்தியா! சொக்கநா தா!
13. காயமோ காலன் கருத்தோ மகாகாலன்
ஞாயமோ சற்றும் நடப்பதில்லை பேயனேன்
மாளுவனோ தென்மதுரை மாமணியே! என்னையுகந்
தாளுவையோ சொக்கநா தா!
14. எரிசுடுவ தல்லால் இரும்பு சுடுமோ?
அரியயற்கும் வாசவற்கும் யார்க்கும் பெரியவர்க்கும்
பூணுமே தத்தொழினின் பொன்னருளாற் றென்மதுரைத்
தாணுவே சொக்கநா தா!
15. ஆரிடத்தில் வந்தும் அடியேன் உளத்திருந்தும்
ஓரிடத்தி லுற்பவித்து முள்ளபடி - பாரிடத்தில்
நாயே னுளமகிழ நன்றா வுணர்த்திடுவாய்
தாயேநீ சொக்கநா தா!
16. நித்தம் எழுந்தருளி நின்மலனே! என்றனக்குப்
புத்தி மிகமிகவும் போதித்துச் சித்தமயல்
போக்குவாய் இன்பசுக பூரணத்தி ரண்டறவே
ஆக்குவாய் சொக்கநா தா!
17. மறையா கமவிதியும் வந்தவுட றன்னின்
நிறையூழ் விதிமுன்னா னின்றான் மறைவிதிக்கே
ஏற்கவே செய்வே னிசைந்தாலூழ் வேறதனோ
யார்க்கா வேன் சொக்கநா தா!
18. மலம் விளைக்கு மன்பதத்தி னாளவைப்ப தல்லால்
மலம்விளைக்குஞ் சோறருந்த வைத்தாய் - சலம் விளைக்கும்
சென்னியா! மாமதுரைச் செல்வா! எல் லாம்வல்ல
தன்னியா! சொக்கநா தா!
19. ஆர்வந்தென் ஆர்போயென் ஐயாவுன் ஆனந்தச்
சீருளத்தே யென்றுஞ் செறிந்திலதேற் காரிருண்ட
கண்டனே! ஓர்புருடன் காதல் கொண்டாள் போன்மதுரை
அண்டனே! சொக்கநா தா!
20. கான்றசோ றாயுலகங் காணவில்லை இன்பவெள்ளத்
தூன்ற அடியே னுறங்கவில்லை ஏன்ற
இருள்சகல நீங்கவில்லை ஏழையேற் குன்றன்
அருளுறுமோ சொக்கநா தா!
21. நீயே பரமசிவ னானக்கால் நின்மலனே!
நாயே னுளமகிழ நன்றாகப் பேயேன்
கருத்தடங்க நின்கருணை காட்டியின்ப வெள்ளம்
அருத்திடுவை சொக்கநா தா!
22. விதிமார்க்க மெப்பொழுதும் வேவறியே னூழின்
விதிமார்க்க மல்லாது மெய்யாங் கதிமார்க்கங்
காட்டு வாய் நாயேன் கரையேற எவ்வுலகும்
ஆட்டுவாய் சொக்கநா தா!
23. அருவருப்பே மெத்தியிடும் ஆகத்தைச் சற்றும்
அருவருக்கத் தோற்றுதில்லை ஐயோ!-அருவருக்கத்
தோற்றியிடா தென்னவினை துய்ப்பித் தறுப்பதற்கோ
சாற்றியிடாய் சொக்கநா தா!
24.தவமோ சிறிதறியேன்: தாரணிமேற் செய்யும்
அவமோ அளவில்லை; ஆனாற்-சிவமோ
பெறுமா றென் கூடற் பிரானே! முப் பாசம்
அறுமா றென் சொக்கநா தா!
25. அனைத்துயிர்க்கும் பாசம் அறுத்துமுத்தி கூட்ட
மனத்துயரஞ் செய்தல் மருந்தோ? மனத்துயரஞ்
செய்யாமற் றீர் மருந்து சித்தா! அறிந்திலையோ
ஐயாவென சொக்கநா தா!
26. உணர்த்தில் உணர்வேன் உணர்த்தாயேல் நாயேன்
கணத்தும் உணரும்வகை காணேன் உணர்த்தியென் னுட்
பூண்டமல மாயைகன்மம் போக்கிச் சிவானந்தத்
தாண்டருள்வை சொக்கநா தா!
27. பிறிந்தேன் மலத்துனது பேரருளி னாலே
அறிந்தேன் உனைநன்றா ஐயா! செறிந்தவின்பப்
பூரணா! செங்கமலப் பொற்பாதா! கூடலில் வாழ்
ஆரணா! சொக்கநா தா!
28. கெடுங்காலம் வந்தாற் கெடுப்பை; கதியில்
விடுங்காலம் வந்தால் விடுவை; கொடுந்தவங்கள்
பண்ணிடினும் பாவம் பயிற்றிடினு மாரேனும்
அண்ணலே! சொக்கநா தா!
29. என்னவினை நாயேற் கிருக்கிறதோ இக்காயத்
தென்னவினை நின்றா ளியற்றுமோ! என்னவினை
வந்திடுமோ என்றறியேன்! வந்தாலும் நின்னருளே
தந்திடுவாய் சொக்கநா தா!
30. ஆறாறு தத்துவத்தும் ஆணவத்துங் கன்மத்தும்
மாறாதெந் நாளும் மயங்காமற் பேறாக
நித்தனே! நின்மலனே! நின்பதத்தில் ஆள்மதுரை
அத்தனே சொக்கநா தா!
31. அடியேன் உன்னைவேண்ட அப்படியே என்றுங்
கொடியேன் கருத்திசையக் கூறி-அடியேனை
மீண்டுபிற வாதுன் விரை மலர்த்தாள் சூட்டியெனை
ஆண்டவனே சொக்கநா தா!
32. ஆசான் உளத்திருந்தும் ஆன்மா, உளத்திருந்தும்
ஆசார் மலத்தை அறுத்தருளி நேசா;
ஒளித்திருந்த இன்பவெள்ளம் ஒன்றவுயிர்க் கென்றும்
அளிப்பவன் சொக்கநா தா!
33. ஆற்றையணி வேணி அமலனே! மெய்யதினில்
நீற்றைப் புனையும் நிமலனே!- கூற்றைக்
குமைத்தவனே! என்சிரத்துன் கோகனதத் தாளை
அமைத்தவனே! சொக்கநா தா!
34.கால வசமோ கடியேன் வினைவசமோ
ஞாலவச மோவருளை நாடியே கோலமறச்
சிற்பரா னந்தவெள்ளஞ் சேர்ந்தறிந்துஞ் சேர்கிலேன்
தற்பரா! சொக்கநா தா!
35. நீணாட் பிறந்திறந்து நின்றதுயர் நீயறிவை;
வீணாட் கழித்து விடாமலே பூணவருள்
நண்ணரிய பேரின்ப நாடி அதுவாக
அண்ணலே! சொக்கநா தா!
36. ஆறாறு தத்துவத்தும் ஆணவத்துஞ் சாராமல்
மாறாத பேரின்ப வாரிதியே பேறாகச்
சார்ந்திருக்க வல்ல சதுரர் உள்ளத்ததுவாய்
ஆர்ந்திருக்குஞ் சொக்கநா தா!
37. காடோ வனமோ கனகிரியோ காசினியோ
நாடோ சகலகலை ஞானமோ வாடி
ஒடுங்குவதோ மெய்வீ டுயிர்க் களித்தல் போதம்
அடங்குவதோ சொக்கநா தா!
38. துன்றுபர மானந்தச் சோதியிலி ரண்டற்று
நின்றுவிட என்னை நிறுத்துவாய் அன்று
கமலனே காண்பரிய கண்ணுதலே! கூடல்
அமலனே! சொக்கநா தா!
39. எக்காலம் இக்காயம் இற்றிடுமோ! என்வினைகள்
எக்காலம் மும்மலங்க ளிற்றிடுமோ! எக்காலம்
ஆனந்த சாகரத்தில் ஆடிடுமோ என்னுளந்தான்
ஆனந்தா! சொக்கநா தா!
40. எக்காலம் மெய்க்கே இரையிடுதல் இற்றிடுமோ!
எக்காலம் இக்கரணம் இற்றிடுமோ! எக்காலம்
பேசானு பூதி பிறந்திடுமோ என்னுளத்தில்
ஆசானே! சொக்கநா தா!
41. வாக்கிலுரை பொய்யே மனநினைப்ப துவங்கவடே
ஆக்கைதினஞ் செய்வ தகிர்த்தியமே; நோக்கில்
திரிவிதமு மிப்படி நீ செய்வித்தால் முத்தி
தருவிதமென் சொக்கநா தா!
42. இக்காலத் தின்னவினை என்றமைப்பை அப்படியே
அக்காலத் தவ்வூ ழறுத்திடுவை; இக்காலந்
தப்புவா ருண்டோ தமியேற்குந் தப்பரிதேன்
அப்பனே! சொக்கநா தா!
43. மோகாபி மானமின்னும் முற்றும் மறக்கவில்லை
தேகாபி மானஞ் சிதையவில்லை- ஓகோ!
உனையடைந்தும் பாசம் ஒழியவில்லை கூடல்
தனையடைந்த சொக்கநா தா!
44. பத்திமெத்தச் சித்தம் பதியவில்லை; அட்டமா
சித்தி அவாவெறுக்கச் செய்யவில்லை; முத்தியுளங்
கூடவில்லை எந்நாளுங் கூடலிலே மாறி நடம்
ஆடவல்ல சொக்கநா தா!
45. என்னைவளை பாசவரண் இன்னமுநீ கொள்ளவில்லை
அன்னையனை நீபதன மானாலும் முன்னைமலம்
ஓடவே எவ்வுயிர்க்கு மோட்டு மருட்சேனை
சாடியிடுஞ் சொக்கநா தா!
46. சேகரத்தி னுச்சியின்மேற் செந்தேனுக் கிச்சித்தே
போகவச மாகுமோ போகாதார் - தாகம்
மிகவறவே யுள்ளத்தில் வேண்டிலுன்றாட் செந்தேன்
அகமுறுமோ சொக்கநா தா!
47. அடியார் பரிபாக மெல்லாம் அறிந்து
படிகீழ்ப் பதமேற் பதத்திற்கொடுபோய்
இருத்திடுவை சேர இனிமேலாம் போகம்
அருந்திடுவை சொக்கநா தா!
48. வாழைம் மலத்தால் வருந்தி மிகவுடைந்த
ஏழையனுக் கையோ இரங்குவாய் கோழையனாய்ப்
போனேன் புலப்பகையாற் பொன்னடியை நின்னருளால்
தானேதா சொக்கநா தா!
49. எக்காலந் தாகங்கள் இற்றிடுமோ!- காயங்கள்
எக்காலம் ஆசைசினம் இற்றிடுமோ; எக்காலம்
நல்லார் குணம்வருமோ; நாதாவெல் லாமுமாய்
அல்லானே! சொக்கநா தா!
50. உள்ளமுனை அல்லால்ஒன் றுள்ளவில்லை; நின்றொளிக்குங்
கள்ளமற நீயுங் கருதவில்லை; எள்ளளவும்
நற்றவமோ செய்யவில்லை நாயேன் உனையடைதற்
கற்றதென்ன சொக்கநா தா!
51. ஆர்க்குக் கிடைக்கும் அடியேன்முன் வந்துமறைக்
கேற்கக் கருத்துக் கிசையவே-யார்க்குந்
தெரிவரியா வேதசிகை சித்தர் வுரைத்தாய்
அரியறியாச் சொக்கநா தா!
52. எவ்விதையை மாக்கள்பயிர் இட்டார்கள் இட்டவரே
அவ்விதையின் போகம் அருந்துதல்போற் செவ்விதாய்த்
துன்மார்க்கஞ் செல்வார்க்குத் தோன்றும் பிறப்புமுத்தி
சன்மார்க்கஞ் சொக்கநா தா!
53. எல்லார் கருத்தும் இதமா வுரைக்கறியேன்
நல்லாங்கு தீங்கிதென நாடறியேன் எல்லாரும்
நீரூரும் வேணி நிமலா! மதுரையில்வாழ்
ஆரூரா! சொக்கநா தா!
54. உரையிறந்த பேரின்ப உல்லாச வீட்டிற்
றிரையிறந்து தூங்கித் திளையேன் வரைபெருகப்
பேசுவேன் யானென்றே பெற்றவர்தம் உள்ளத்துக்
காகவே சொக்கநா தா!
55. ஆறாறு தத்துவமும் அத்திலுறை மூர்த்திகளும்
பேறாம் வினையினையும் பொதித்து மாறாமல்
ஆட்டுவது நீயானால் ஆகா மியமென்பாற்
சாட்டுவதென் சொக்கநா தா!
56. முன்னளவில் மாக்களுக்கு முத்தி கொடுத்துவருள்
என்னளவிற் சும்மா இருபதேன்? முன்னளவிற்
சீர்பெற்றா ரேலுன் திருவருளொத் தாசையின்றி
ஆர்பெற்றார் சொக்கநா தா!
57. நோயால் வருந்தியுனை நூறுகுரற் கூப்பிட்டால்
நீயா ரெனாதிருக்கை நீதியோ! தாயாய்
அலை கொடுத்த கேழல் அருங்குழவிக் கன்று
முலைகொடுத்தாய் நீயலவோ முன்?
58. தாயார் மகவருத்தஞ் சற்றுந் தரியார்கள்
ஆயவினைக் கீடாய் அமைத்தாலுங் காயம்
பரிக்குந் துயரமெல்லாம் பார்க்கவுனக் கென்றுந்
தரிக்குமோ சொக்கநா தா!
59. தீவினையால் இன்னமின்னந் தேகமுறச் செய்வையோ
தீவினையற் றுன்மயமாய்ச் செயவையோ! தாவிதமாய்
இன்னபடி மேல்விளைவ தென்றறியேன் ஈதறிந்த
அன்னையே சொக்கநா தா!
60. என்னதியான் என்பதுவும் யான்பிறர்செய் தாரெனலும்
மன்னுமதி பாதகமேல் வாஞ்சைகளும் இன்னமின்னஞ்
சொல்லுகின்ற இச்செயல்நீ தூண்டுதலற் றென்செயலால்
அல்லவே சொக்கநா தா!
61. ஆலந் தரித்தலிங்கம் ஆலவாய்ச் சொக்கலிங்கம்
மூலமாய் எங்கும் முளைத்தலிங்கம் பாலொளியாம்
அத்தனே! கூடல் மதுரா புரியுமையாள்
அத்தனே! சொக்கநா தா!
62. எல்லா முனதுபதம் எல்லா முனதுசெயல்
எல்லா முனதருளே என்றிருந்தாற் பொல்லாத
மாதுயர நீங்கும் மருவு முனதடிக்கே
ஆதரவாய்ச் சொக்கநா தா!
63. தீதாம் அவாநந்தச் செய்மதுரை வாழ்வேந்தா!
நாதா! சிவாநந்தம் நல்குவாய் வேதச்
சிரகரா! நித்தா! திரபரா! சுத்தா!
அரகரா! சொக்கநா தா!
64. மற்றொருவர் தஞ்சமின்றி வந்தடைந்தக் காலெனைநீ
சற்றுமிரங் காதிருக்கை தன்மமோ? கொற்றவா!
பாவலர் கூடற் பரமா! பரதேசி
காவலனீ தானானக் கால்.
65. தன்னந் தனியே தமியேன் முறையிட்டால்
இன்னந் திருச்செவியி லேறாதோ? - மன்னவனே!
தென்மதுரை மேவித் திருந்தியசெங் கோல்செ லுத்துந்
தன்மதுரை நீயலவோ தான்?
66. என்போல் மலகடினர் எவ்விடத்துங் கண்டதுண்டோ?
இன்பே! மதுரைக் கிறைவரே! அன்பேதும்
இல்லா தெனையாண்ட எண்ணத்தாற் றேவரீர்
எல்லாமும் வல்லசித் தரே.
67. நீயே ஒளித்திருப்பை நீயென்றுங் காணாமல்
நீயே யொளித்தபடி நின்னருளால் நீயேதான்
காட்ட அன்னியமாய்க் கண்டேன்; உனதுவிளை
யாட்டதென்ன சொக்கநா தா!
68.பேரன்பன் அல்லேன்: பிழைசெய்யான் றானல்லேன்;
ஓரன்பு மில்லா உலுத்தனேன்; பேரன்பு
காட்டி யெனைக் காட்டியுனைக் காட்டியின்பத் தொட்டிலிலே
ஆட்டிவளர் சொக்கநா தா!
69. இட்ட சனத்தில் இரவுபகல் அற்றிடத்தில்
முட்டா திருக்கவருள் முற்றுந்தா - அட்டாங்க
யோகசுந்தா னீங்கி யொழியாச் சிவானந்த
ஆகந்தா சொக்கநா தா!
70. மோகங் கரைய முழுதும் மலங்கரைய
ஆகங் கரையவறி வானந்த-மோகமாய்ப்
பூரணமா யெங்கெங்கும் பொங்கி யெழவிழித்த
ஆரணனே! சொக்கநா தா!
71. ஊனது வான வுடலொடணு காமலருள்
ஆனசிவ போகமது வாயருள்வாய் ஞானக்
கரும்பொருளே! வாழ்மதுரைக் கண்ணுதலே! யாருக்கும்
அரும்பொருளே! சொக்கநா தா!
72. பூண்டமலம் மாண்டுவிடல் போந்தசிவா னந்தவெள்ளத்
தாண்டுமெனை மீண்டுவிடம் ஆகுமோ? நீண்டமால்
வீரென்பார் தாரா விமலா! எனைக்கண்டார்
ஆரென்பார் சொக்கநா தா!
73. முன்னை மலமகற்றி மூதறிவா னந்தமயந்
தன்னை யறிந்த தபோன் தருள் என்னையுநீ
ஆண்டுபரிச் சொக்கநா தாந்தமருள் கூடலிலே
தாண்டுபரிச் சொக்கநா தா!
74. கருணா நிதியே! கடவுளே அன்பர்
பொருளான பேரின்பப் பொற்பே! ஒருநாளும்
நீங்கா தெனதறிவில் நின்றசுகா னந்தமே!
ஆங்காணீ சொக்கநா தா!
75. நீரிலே மூழ்கிலுமென் நித்துமருச் சிக்கிலுமென்
பாரிலே சுற்றிப் பணியிலுமென் வேரிலே
உற்றிருந்தல் அன்றோ உயிர்க்குறுதி? ஒன்றிரண்டும்
அற்றவனே! சொக்கநா தா!
76. என்செயலே என்றென் றியற்றுவதும் என்செயலும்
உன்செயலே என்றென் றுணர்த்துவதும் நின்செயல
தாகுமே என்ன அடியேற் குணர்த்தலுநீ
ஆகுமே சொக்கநா தா!
77. ஈண்டுமெனை ஆண்டிலையேல் என்வினைக்கீ டாயானே
வேண்டும் பவங்களிளீ விட்டாலும் பூண்டருளால்
அங்கங்கே என்னோ டன்னியமாய் என்னுருவிற்
றங்கியருள் சொக்கநா தா!
78. உன்னைவிட நீங்குமுயிர் ஒன்றில்லை; ஆதலினால்
என்னைவிட நீங்குவது மில்லைநீ பொன்னைவிடப்
பூந்தேன் அலருடையாய்! பொங்குமது ராபுரியில்
வேந்தே! பிரியா விடை.
79. அன்பர்க் கருள்புரிவ தல்லாமற் றேவரீர்
வன்பர்க் கருள் புரிய மாட்டீரேல் உம்பர்தொழும்
நல்லார் புகழ்மதுரை நாதரே! தேவரீர்க
கெல்லாமும் வல்லசித்த ரேன்?
80. நரகம் இனிநாட நாடோம் உமையாள்
விரகர் தமிழ் மதுரை மேவித்-துரகம்நரி
ஆக்கினார் வைகையினீ ராடினோம் அவ்வெல்லைப்
போக்கலாம் யாந்திரிந்திப் போது.
81. நானோ தனுகரணம் நானோ மலமாயை
நானோ இவைகள் நடத்துவது நானோதான்
பூண்ட வினையறுப்போன் புண்ணியபா வம்புரிவோன்?
ஆண்டவனே! சொக்கநா தா!
82. அரும்பாச நன்மைதின்மை யாகம் அதன்மேல்
விரும்பாது நிட்டையி லேமேவித்-திரும்பாத
வானந்தா என்னறிவில் மாறாது பொங்கியெழும்
ஆனந்தா! சொக்கநா தா!
83. துஞ்சப் பிணமென்னச் சுற்றத்தா ரிட்டத்தார்
அஞ்சச் சலிக்க அருவருக்கக் கொஞ்சமுற
வந்த தனுவிருந்து வாழ்த்துநா னென்னவைத்து
தந்திரமென் சொக்கநா தா!
84. தனுவாதி யாக்கியுயிர் தன்னிலிசைத் தாட்டி
எனுமாக மங்கருணை என்றுந்-தினமுநீ
ஆச்சரியம் யானெனதென் றாட்டல்மறந் தொன்றுரைத்தல்
ஆச்சரியஞ் சொக்கநா தா!
85. தேகாதி யெல்லாஞ் செடம்பிணம்பொய் யென்றிருக்க
மோகாதி யெல்லாம் முடிந்திருக்க ஏகமாய்
எப்போது மின் வெள்ளத் தேயிருக்க வாழ்வையென்னுள்
அப்போதே சொக்கநா தா!
86. நின்பாடல் என்று நினைப்பாடல் அன்றியே
என்பாடல் எங்கே இறைவனே! நின்பாடல்
ஆமே தனுவாதி ஆகமநால் வாக்காதி
ஆமேநீ சொக்கநா தா!
87. நீயியற்ற ஓர்பொருளை நிச்சயித்த நாயேனும்
போயியற்றல் செய்யப் புரிகுவேன் நீயியற்றல்
ஆக்கா தணுவும் அசையுமே? அவ்விகற்பந்
தாக்காத சொக்கநா தா!
88. அன்றுமுதல் இன்றளவும் மேலும் அடியேனுக்
கென்றுநீ நன்மைசெய்வ தன்றிநான் ஒன்றேனுஞ்
செய்யுமா றெங்ஙன்? சிவனே! இனிநாயேன்
உய்யுமா றெங்ஙன்? உரை.
89. அறிவுபர மானந்தம் ஆகவில்லை! ஆகம்
பொறிகரணம் யானெனதும் போக நெறிதவஞ்சேர்
பேரன்போ இல்லை பினைநான் உனக்கடிமைக்
காரென்பேன் சொக்கநா தா!
90. நின்னளவில் ஆனந்தம் நின்கருணை சற்றேனும்
என்னளவிற் றோற்றா திருந்தக்கால் நின்னளவிற்
பூரணம்பொய் யானந்தம் பொய்கருணை பொய்யுரைத்த
ஆரணம்பொய் சொக்கநா தா!
91. தேவே! மதுரைநகர்ச் சிற்பரனே! எவ்வுயிர்க்குங்
கோவே! எனையாளுங் கோமானே! நாவே
உனைத்து திக்கச் சிந்தை உனை நினைக்க என்றுங்
கனத்தி லுனைவணங்கக் காண்.
92. உன்னைச்சிங் காரித் துனதழகு பாராமல்
என்னைச்சிங் காரித் திடர்ப்பட்டேன் பொன்னை
அரிவையரை யேநினையும் அன்பிலேற் குன்றாள்
தருவையோ சொக்கநா தா!
93. சொக்கநா தாவுனையே சொல்லுமடி யேனுடைய
பக்கமாய் நின்றுவினை யாற்றியே எக்காலும்
மீண்டுவா ராதகதி மேவுவிப்பாய் தென்மதுரைத்
தாண்டவனே! சொக்கநா தா!
94. ஆறுதலை இல்லை அடியேனுக் கன்பாகத்
தேறுதலை சொல்வார் சிலரில்லை வேறெனக்குத்
திக்காரு மில்லை சிவனே! பழிக்கஞ்சி
சொக்கே! நின் றாளே துணை.
95. புண்டரிகத் தாளைப் புகழ்ந்து புகழ்ந்து தினம்
அண்டமரர் கொண்டிறைஞ்சும் ஆதியே தொண்டுபடு
நாயேனை யாண்டுகந்து நன்னெறிகள் காட்டுவித்த
தாயே நீ சொக்கநா தா!
96. மிண்டு செய்யு மும்மலமு மிக்கவிணை நல்குரவும்
பண்டுபோ லென்னை வந்து பற்றாமல் கொண்டுபோய்
நின்னருளிற் சேர்க்க நினைகண்டாய் தென்மதுரை
மன்னவனே சொக்கநா தா!
97. கூரியவெம் பாசக் குளிர் நீங்க நின்னருளாஞ்
சூரியனெப் போதுவந்து தோன்றுமோ!-பாரறியக்
கொட்டமிட்ட சண்டனுயிர் கொள்ளையிட்ட மாமதுரை
இட்டமிட்ட சொக்கநா தா!
98. உனக்குப் பணிசெய்ய உன்றனையெந் நாளும்
நினைக்க வரமெனக்கு நீதா-மனக்கவலை
நீக்குகின்ற தென்மதுரை நின்மலனே! எவ்வுலகும்
ஆக்குகின்ற சொக்கநா தா!
99. சன்மார்க்கஞ் செய்யும் தபோதனரோ டென்னையுநீ
நன்மார்க்கஞ் செய்யவருள் நாடுமோ?- துன்மார்க்கஞ்
செய்கின்ற முப்புரத்தைத் தீயாக்கித் தென்மதுரை
வைகின்ற சொக்கநா தா!
100. வந்த பொருளாசை மண்ணாசை பெண்ணாசை
இந்தவகை ஆசையெலாம் என் மனத்தின் வந்தினிச்
சேராமல் வாழ நினைகண்டாய் தென்கூடற்
பேராத சொக்கநா தா!
மதுரையின் மாண்பு
101. தண்டுவரும் குண்டுவரும் தானை வரும் ஆனைவரும்
வண்டில்வரும் ஆடுவரும் மாடுவரும் மிண்டிப்
பெருங்கோட்டை யுஞ்சுமையும் பின்வரும் கூடல்
அருங்கோட்டை வாசலிற்சென் றால்.
(குறிப்பு-95 முதல் 101 வரை உள்ள வெண்பாக்கள் சில பிரதிகளில் மட்டும் காணப்படுவன.)
நூல்: முப்பத்து நான்கு
அருணாசல குரு நிஜானந்த போதம்
குரு துதி: நேரிசை வெண்பா
சித்தவிசும் பிற்சத்தந் தேசலருஞ் சாசுவத
வத்துமயஞ் செய்தவன்றாள் வந்தித்து - நித்த
நிருமலப்பே ராரும் நிசானந்த போத
மருமமிசைப் பேனுள் மகிழ்ந்து
மகான்கள் வணக்கம்:
மனத்துறுசங் கற்ப மயமாயா லோகம்
அனைத்துமகண் டாகார மான-தனைத்தவிர
அன்னியமன் றாமெனக்கண் டாரவர்கள் தாள்துகள்நஞ்
சென்னிகொடு சீவிப்பம் சீர்.
சித்தர் வணக்கம்: பன்னிருசீர் விருத்தம்
சீரார்ந்த துணர்மலியு தளிகன் பண் பட்டவிதி திகழ்கின்ற பொதிகை முனிவர்.
திவ்யகுண போகர்நந் தீசர்புண் ணாக்கீசர் சீலகரு வூரெங்கும்
பேரார்ந்த சுந்தரா னந்தரா னந்தர்திரு பெருமைசேர் கொங்கண முனி
பிரமமுனி ரோமமுனி வாசமுனி யமலகுரு பிரமமுனி கமல முனிவர்
ஏரார்ந்த கோரக்கர் சட்டைமுனி மச்சமுனி இடைக்காடர் முதலியவர்களோ
டின்னமுயர் முத்தருயர் முத்தர்நவ நாதர்புவி யிவர்மரபி லுற்ற புனிதர்
காரார்ந்த சுந்தரக் கடவுளடி யார்மலர்க் கண்ணனடி யாரிவர்கடம்
கனமிகுந் திடுவனச பாதமல ரென்றும் கருத்திலஞ் சலி செய்குவாம்.
இராயவேலூர் அமுதசித்தர் வணக்கம்:
செய்யவே லூரமுத சித்தரே!-நாயடியேன்
உய்ய வொருதரநீ ரோதினால்-வையகத்தில்
பொய்யனைத்தும் பாழாகிப் புண்ணியத்துக் காதரவாய்
மெய்யனைத்தும் மேலாகு மே.
போளூர் பிரமம் ஸ்ரீஸம்பத்துகிரி அச்சுத தாசரவர்கள் இயற்றியது.
உருவரு வின்மை யாகி ஒருபொருட் டன்மை யாகித்
திருவரு ணன்மை யாகித் திகழ்நிசா னந்த போதம்
கருவருத் தங்கடந்து கனமுல குய்யச் சொற்றான்
குருவரு ணாச லன்றன் குறியுள்ள குணக்ஞன் மாதோ.
இராயவேலூர் முனிசிபல் ஆபீசு இரத்தின
முதலியாரவர்கள் இயற்றியது.
உலகிலோர் சரநூலின் உண்மையெல்லாம்
உணர்ந்ததன்மேல் நிசானந்த போதந் தன்னை
நலம்பெறவே யடைவரெனச் சித்தர் சொன்ன
நன்னூலையாராய்ந்து நயப்பி னோடு.
திலதமணி முகம்போலத் தெளிவா யார்க்குந்
தெரிந்திடவே வெளியிட்டான் திருத்த மாகப்
பலகலைகள் உணர்ந்தபண் டிதனா யிந்தப்
பாரிலரு ணாசலப்பேர் படைத்தா னன்றே
உருவாய அன்னமய மாதிபஞ்ச கோசம்
ஒன்றொன்றாய் நீங்கியதை யுணர்வறிவு தானாய்
இருவாதனைகணீங்கிச் சகலகே வலமும்
இராப்பகலில் லாதநிட்டை தனிலிருந்தெப் போதும்
பொருவில்லா நிரதிசயா øந்தமது மேவும்
புண்ணியர்க ளெச்சமய சாதிகளி லேனும்
நிருபாதி சுப்பிர வாரிதியின் மூழ்கும்
நிலைமையரே பிரமகுலம் நிகழ்த்திடவும் தகுமால்.
நல்லார் பிறர் குற்றம் நாடார்; நலந்தெளிந்து கல்லார் பிறர் குற்றம் காண்பர். ஆதலினாலே, இந்நூல் கண்நோக்குறும் அன்பர்கள் இதிலடங்கிய நன்னிலையுண்மையினை அனுபவம் பெற்று அஷ்ட மூர்த்தமாயும் சத்து சித்தானந்தமாயும் விளங்கும் பெரும்பொருளின் திருவருள் விலாசமுற்று, மார்க்கண்டர் மதியின் கலை சோடசமும் குறைவிலா நிலைபெற்று என்றும் 16 வயது பெற்றது போலச் சிரஞ்சீவிகளாய் இருப்பார்களென்று கருதி இங்ஙனம் செய்யக் கடவுளை யாம் பிரார்த்திக்கிறோம். கற்றதனால் தொல்லைவினை கட்டறுமோ? நல்ல குலம் பெற்றதனால் போமோ பிறவி நோய்? போகாது சாதி பேதம் சமய பேதம் பொருள் பேதமெனக் குதர்க்க மொழிகளைப் பாராட்டுவதை நீக்கி முன்னோர்கள் நின்ற நிலை ஈதென்றுணரும் சித்தசுத்தி பெற்ற மானிடப் பிறவிகளே பிறவியென யாவராலும் புகழப்படுவர்.
நூல்
குறள் வெண் செந்துறை வெண்பா :
அறிவான படம்நாலு வாலோ ஒன்றாம்
அப்பனே! ஐந்துதலை விரித்தே யாடும்
குறியான நாவதுவும் கூழை கூழை
குறித்துப்பார் கைவசமா யாகும் பாரே.
எண்சீர் விருத்தம்
1. பூதலத்தில் பலவிதமாய்ப் பேச லான
பெருமையினை ஒருவழியி லிருந்து பார்க்க
மாதலத்தி லறிவுடைய பிள்ளாய்! கேளாய்;
மகத்தான மேருகிரிச் சிகரந் தன்னில்
பாதலத்தும் மீதலத்தும் எங்கு மான
பரம்பொருளாயரும் பொருளாய்ப் பிரகா சிக்கும்
சீதமுறு மதியிரவி சுடரு மாகிப்
பொற்கொடிபோல் காந்தியுநும் பொருளு மாமே.
2. மெய்யான பொருளென்ன சோதி சோதி;
மேவி நின்ற தலமென்ன வன்னி வன்னி;
மெய்யான தலமென்ன அப்பு வப்பு;
மேகாந்த வெளியென்ன வாயு வாயு;
மெய்யான தெய்வமென்ன அண்ட மண்டம்
மேவிநின்ற இடமென்ன மண்ணு மண்ணு;
மெய்யான தெய்வமென்ன பஞ்ச கர்த்தாள்
மேவுசடாட் சரமுடிவி லமர்ந்த மூலம்
3. உரைத்திடவே ஓங்காரம் ஒன்றே கோணம்;
ஓங்குமதில் சுழியொன்று நடுயி ராகம்;
வரைத்திடவே யிகாரவட்டந் தனிலே வாசி
வளமாகத் தீர்ந்தபின்பு சுவாச முண்டாம்;
கரைத்திடவே யிடைகலைபிங் கலையு மாகிக்
கனத்தபரி வளையம்போல் சுழன்று பொங்கி
அரைத்திடவே சுழுமுனையால் ரேசகபூ ரகமாய்
அமர்ந்துநின்று சுவாசமது கும்ப கத்தில்
உரைத்திடவே ஒன்றுக்கொன் றுதவி யாகி
உகங்கோடி காலமதா யுறுதி யாச்சே.
4. உருதியென்ற ரேசகமும் வன்னி வன்னி
உண்மையென்ற பூரகமும் அப்பு வப்பு;
கருதியென்ன ரேசகத்தால் கும்பித் தக்கால்
கடுகிடென்று சுழன்றும்யிகாரம் புக்கும்
வருதியா யிந்தவகை மாசூட் சந்தான்
வளமாகச் சகலமுந்தா னடங்கிப் போச்சு;
மருகாமல் மாய்கைவிட்ட மாண்ப ருக்கு
மாசித்தந் தொழிலெல்லா மவர்க்கீ டாமே.
5. வாங்கவே நவக்கிரகம் தன்னால் மைந்தா!
வளமான அனுக்கிரகம் தன்னைக் காணாய்;
தாங்கவே அனுக்கிரகம் விந்து விந்து
தனதான நவக்கிரகம் நாதம் நாதம்
பாங்கவே முடியடிதான் அனுக்கிரக மாகும்
பரமான கற்பமது நவக்கிர கந்தான்
மாங்கவே அனுக்கிரகக் மிரவி யுச்சம்
மைந்தனே! நவக்கிரகம் பகல்தா னுச்சம்.
6. உச்சமென்ற வளர்பிறைக்கிவ் விதமாய் மைந்தா!
<உதகமென்ற தேய்பிறைக்கு நவக்கிரக முச்சம்
உச்சமென்ற தேய்பிறைக் கனுக்கிரகம் பெண்ணு;
உதகாதி நவக்கிரகம் ஆணு வாணு!
உச்சமென்ற வளர்பிறைக்கனுக் கிரகம் ஆணு:
உண்மையென்ற நவக்கிரகம் பெண்ணு பெண்ணு;
உச்சமென்ற அனுக்கிரகம் நவக்கிரகம் கூடும்
உண்மையெல்லா மரைநொடியி லுரைத்திட் டேனே.
7. ஈளையென்ற நோய்வந்தால் நாளைப் பார்த்தே
இறக்கிவிட உபாயத்தை இனிமேற் கேளாய்
சாளையென்ற கிழமையொடு நட்சத் திரமும்
சாருந்திதி மூன்றனையும் எண்ணிப்பார்த்து
வேளையென்று மிவன்பேரை வட்டத் திட்டு
விதித்தபிணி நாள்கட்சி யாக்கிக்கொண்டு
சாளையுமே வராமே லுருவே சேவி
தணிந்துவிடு மின்னமிது சைகை கேளே.
8. சைகையென்ன அவன்படுத்த நாள்செவ் வாயே.
தானான திங்களைமுன் தாக்கிச் சேவி.
மாய்கையென்ன செவ்வாயைக் கடைசி யாய்வை
மையற்ற வாரமுமப் படியே சேவி:
ஏய்கையென்ன மதியிரவி காரி வெள்ளி
ஏதுகுரு பந்திசெவ்வா யென்று சேவி;
வாய்கையவன் பிணிதணியு மேழா நாளில்
வாங்குமடா அதுநிற்க வேறே கேளே;
9. வேறென்னப் பரணிக்கு வருமுன் மின்னே
விளம்படா முன்மொழியி னுபாயம் போல;
கூறென்னக் கார்த்திகையை முன்னே கூறிக்
குதிரையின்பேர் பிறகுரோ கிணிதொட் டெண்ணு:
மாறென்னப் பரணிதன்னைத் தொடர்ந்தி டாதே;
மனையடுப்புக் கடையாகத் தரவே தாக்கு;
பேரென்ன மூதொன்ப துக்கு மிந்தப்
பிரயோகம் சேவிக்கப் பிணிகள் போமே.
10. பிணிபோமே திதிக்குமிந்தப் படியாம் அப்பா!
பிரயோக மந்திரத்தை இனிமேற் கேளு;
அணியணியாய் வாரம்நாள் நட்சத்தி ரங்கள்
அடுக்கடுக்கா நீயோதி அவன் நோய் நாமம்
தணியநசி நசியென்னக் கணக்கா லுள்ள
சாத்திரமே யுருவோதி விபூதி போடு
பணியென்னக் கொண்டபதி னைந்து பக்கம்
பத்திரண்டே ழுக்கும்நட் சத்ர மாமே.
11.ஆமப்பா நாளுக்கே யுருவென் னப்பா!
அப்படியேகிரகபலன் அதற்கு மாகும்;
போமப்பா திசைபலனப் படியே யாகும்
பொல்லாத நாள் போச்சுக் கோளும் போச்சு;
ஆமப்பா லக்கினத்தின் பதியா ரூடம்
நட்பாட்சி யுச்சமுரு நவக்ர காதி
ஏமப்பா சாபமது பிடியா தப்பா!
எடுபடுமே வியாதிமுத லெல்லாந் தானே.
12. எல்லாரு மறியவொரு மருந்து கேளு;
எந்தெந்த நோயாளி தனக்கும் செய்ய
வல்லான்மை யவன்படுத்த தலத்தின் மண்ணை
மருந்துடனே முன்சேர்த்து மாப்புக் கூட்டிக்
கொல்லானோ எமனையிந்த மண்ணை வாரிக்
கூறிட்ட வைத்தியனோ குருவாச் சப்பா!
பொல்லாத பேர்களுக்கு மிம்மார்க் கத்தைப்
புகலாதே பூராய குருவென் றெண்ணே.
13. எண்ணியே கைபார்க்கும் போது நீயும்
இரக்கவா னானக்காய் பிணிகொண் டோனை
நண்ணியே யவன் தலையில் நடுவே தீயை
நாட்டியதி லாறிட்டு நாசி மூச்சால்
நுண்ணியே மூச்சடக்கி யுருஞ்சிப் போடு
உனக்குவரும் நாயச்சலிர்க்கும் முபாயம் கேளு;
தண்ணீரிலே சுரதிநசி யென்று மூழ்கித்
தானபா னஞ்செய்து தீர்த்து கோள்ளே.
14. தீர்த்தமதி லாடிநீ நவக்ர காதி
செபம்செய்து முப்பதுநா ழிகைக்குள் ளாக
வேர்த்துவிடு முன்தேக காந்தல் போகும்
வீபூதியிலே சதுரமிட்டுப் பிறையும் போடு;
பார்த்திருக்கும் போதல்லோ தானும் நல்ல
பண்டிதன்மா ருபாயமது பார்மேல் செய்வர்;
கோத்திரத்தி லுனக்குவெகு புண்ய முண்டாய்
உலகருக்கு மிதுவயணங் கொண்டு செய்யே.
15. கொண்டுவா நிதமுமிந்தப் படிதண் ணீரில்
குறியிட்டு முச்சிரங்கைக் கங்கை நீரை
உண்டுவா பூதியங் கையிற் கீறி
யூட்டினமே யுணக்குவர மாட்டா தப்பா!
முண்டுவா ரவரவரைச் சினேகி யாதே;
முகூர்த்தமிட்ட ஏழாநாள் சீயைச் சேரு;
பண்டுபார் பெரியோரை யடுத்துக் காத்துப்
பரிகாரி பரிபாகி யர்வாய் தானே.
பிரமண் விண்டு ருத்திரர் மகேசர் சதாசிவமான பஞ்ச மூர்த்திகள் மூலாதார கணபதியோடு ஆறு ஆதாரங்களிருப்பதாக மறை கூறுகின்றது. மண், நீர், அக்கினி, காற்று, ஆகாயம் சர்வ நால்வகை யோனி வடிவச்சீவர்களுக்கும் ஆதாரமாயிருப்பன், அனைவருக்கும் நாசியில் உஸ்வாச நிஸ்வாசமாய் உலவிவரும் இடைகலை பிங்கலையாகச் சுழுமுனை ஆதாரத்தில் மாறி நடந்துவரும் சத்தி சிவ சந்திர சூரியரெனும் சுவாசமான வாசியானது நாளொன்றுக்கு 2,11,000 600 சுவாசமாய் நடந்து வருகின்றது. அப்படி நடந்து வருவது மனமாகவும் வாசியாகவுமிருப்பதில் நாள் ஒன்றிற்கு 12 வட்டமாகவும் சந்திர பாகத்திலும் சூரிய பாகத்திலும் ஐம்பூதப் பிரிவாய்ப் பிரிந்து கட்டுகின்றது. இப்படிக் கலையில் நடக்கும் ஐம்பூதங்கள் அந்தக் கரண வியாபாரத்தால் அறிவைத் தோற்றுவிக்காமல் ஆயுளையும் க்ஷீணப்படுத்தி, நரை திரை மூப்பை எளிதில் உற்பவம் செய்து விடுகின்றன.
16. சத்தியென்ற வடிவேதிங் கொளியாய் நிற்கும்
சாதகமாம் சிவமேதிங் கொளியாய் நிற்கும்
வெத்தியென்ற வொளிவெளியுளொன்றிற் றானால்
வேதாந்தஞ் சித்தாந்த மிரண்டு மொன்றாய்
முத்தியென்ற வடிவாகத் தோற்றும் பாரு?
மூதண்ட ரூபமென்கே சரியுமாகும்.
வெத்தியென்ற விந்தையெல்லாம் வெனியாய்ப் போகும்
வேதமென்ற முடிவுதனைப் புகன்றிட் டேனே.
17. ரூபமென்றால் ரூபமல்ல; பச்சை யல்ல;
உத்தமனே! மஞ்சளல்ல; வெள்ளை யல்ல;
ரூபமென்றால் கறுப்பல்ல; புகை மேக மல்ல;
ஊன்றிப்பார் மனமிதனி லின்ன தென்று;
ரூபமென்றால் அடியல்ல; முடியுமல்ல;
ஓகோகோ சிவரூபம் நன்றாய்த் தோன்றும்;
ரூபமென்றால் விளக்கொளியின் பிரகா சம்போல்
உண்மையிதை யறிந்தவனே தலைவ னாமே;
18. பாரி டங்க ளுள்ளதும் பரந்த வான முள்ளதும்
ஓரி டம்மு மன்றியே ஒன்றி நின்ற தொன்றடா
ஆரி டம்மு மன்றியே அசுத்து ளும்பு றத்துளும்
சீரி டங்கள் கண்டவர் சிவன்தெரிந்த ஞானியே!
19. பாரப்பா! பிராணனெனும் பிராண வாயு
பத்தியுடன் தானியங்கும் வகையைக் கேளு;
நேரப்பா; நடனரவி சுழியிற் றோன்றி
நின்றுசுத்தி நொடியிற்சிம் மெனவி றங்கிச்
சாரப்பா ஓமெனவே மூலா தாரம்;
சார்ந்திருந்து நாபியிலே ஆவென் றொட்டிக்
காரப்பா சாவென்கதிர் மதியிற் சென்று
கபாலத்தைச் சுற்றிநடு நாசி காணே.
பிராண வாயுவானது தச வாயுவாய்த் தசவிதத் தொழிலை நடத்தி முடிவில் பிராண வாயுவாய் நிற்கும். மன அசைவால் பிராணாதி வாயுகளுதிப்பு; மன அசைவிலாதிருந்தால், வாயுக்களுக்குத் தொழிலில்லை; மனமாகிய வாசியே மனம் மனமானது சலம் கனல் வாயு இம் மூன்றும் கூடியது.
தானான மூலமுத லாறுவீடும்
சாக்கிரத்தின் கோட்டையிலே சார்ந்து நிற்கும்
கோனான பஞ்சகர்த்தா ளிருக்குமிடம்
என்று இவ்வனுபவங்களை மேலோர் கூறியிருப்பதும் காண்க.
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டிக்
கருவிக ளொடுக்குங் கருத்தறி வித்தே
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி.
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டிக்
குண்டலி யதனிற் கூடிய வசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலா லெழுப்பும் கருத்தறி விக்க.
என ஔவையார் கணபதியைப் பிரார்த்திப்பதால் சென்னமெடுத்த ஒவ்வொருவரும் மேற்கண்ட அனுபவத்தைச் சுருதி குருவால் சுவானுபவம் பெற்று வாழ்வதே நற்பயனாகும்.
20) வகையான வாசியது மனமும் கண்ணும்
மயங்காதே சிவாயமென்று புலம்பி டாதே;
பகையாதே அட்சரங்கள் ஐம்பத் தொன்றும்
பரிபாடை யாயுரைத்த நாம பேதம்;
திகையாதே நாமமென்றட் சரங்க ளென்றும்
செபியாதே யறிவுகெட்ட மனித ரைப்போல்
நகையாதே மானிடர்பல் சாதி யென்று
நம்பாதே நல்வழியின் காலைப் பாரே.
21) திரிமூர்த்தி தேவர்முதல் மனித ரோடு
சிவயோகம் பெற்றிருந்த மார்க்கந் தன்னைப்
பிரியமுட னெனைத்தொழுது கேட்ட பிள்ளாய்!
பிங்கலையு மிடைகலையும் மாறும் போதங்
கறிவான சுழுமுனையில் மனத்தை வைத்தே
அசையாம் லொருமனமாய்க் காக்கும் போது
குறியான சிவயோகம் சித்தி யாச்சு;
கோடி சென்மம் சித்திரைப்போல் வாழ லாமே.
எட்டுத் திசையும் பதினாறு கோணமு வெங்குமொன்றாய் முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம் கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர் கருத்தில்வையார் பட்டப் பகலை யிரவென்று கூறிடும் பாதகரே
இரேசகம் வன்னி, பூரகம், அப்பு; பிராண வாயு அமிசம் வாசி; தச நாடிகள் இருதயத்தினசைவு; அறிவு; நேத்திரக் கருமணி ஒளிவு; நாசி மூலமாய் வெளிக் கழிவது; விடம் பொருந்திய சூரிய கலை ஆகாய சந்திர கிரகணங்கள் முன்னிலையில் அமுதம் உள் புகுவது சந்திரகலையென்றும் உள் செல்லும் சுவாசந்தோறும் அமுதம் உள் புகுவது சந்திரகலையென்றும் உள் செல்லும் சுவாசந்தோறும் அமுதம் உள்சென்று உதிரத்தில் கலந்து உதிர சுத்தியும் செய்து சீவனுக்கு ஆகாரமாயிருக்கின்றன. இவ்வமுத பலத்தால் தவசிகள் தேகத்தைப் போஷித்து நெடுங்காலமிருப்பதாக மதியமுதம் உட்கொள்ளும்படி செப்பியிருக்கின்றனர். கைலாயமென்னும் சுழுமுனை வீட்டில் ஓங்காரித்துக் கொண்டு தலையெழுத்தாக இருப்பது உணர்வு, அவை அசைவற நிற்கில் சிவமாம் அசைவுறில், சீவனாம், மூச்சாகவும், பேச்சாகவும் சப்திப்பது சத்தி; இவையே பேசுமெழுத்துப் பேசாவெழுத்தெனப் புகல்வன; பேசுமெழுத்து மனம் பேசாவெழுத்து வாசி; சாகா வேகா தலைபோகப் புணர்ப்பென மறை கூறும் வாசியாகிய வாயுவையும் ஆகாய வெளியையும் ஆவியாகிய வன்னியையும், எச்சமய மகான்களும் அடைய வேண்டும்.
கால் என்பது, பிருதிவி: தலையென்பது ஆகாயம் மத்தி அப்பு, உடல், வாயு; உயிர், அக்கினி அறிவு மயமாய் நின்றன.
22. தானாகித் தான்முடிந்த சூட்சந் தன்னைத்
தரணிதனி லறியாமல் தான்தா னென்றே
ஊனாகி நின்றதிரு உடலைக் காணான்
உடலில்நின்ற அட்சரத்தி னுறுதி காணான்
ஆணாகி நின்றதிரு வாசி காணான்
அமர்ந்துநின்ற வாசிதரு நயனங் காணான்
வானாகி நின்றவடி முடியுங் காணான்
மதிகெட்டு விதியழிந்து மாளு வானே.
ஆகாய ரவியினிடத்து உஷ்ணக் கிரணமும் மழைக்கிரணமும் பனிக் கிரணமும் உண்டாகியது போல், அறிவினிடத்தில் இடைகலை பிங்கலை சுழுமுனையென்று மூன்று கிரணமுமுண்டாயின.
மணி மந்திர ஔஷத பரிகாரமாகிய மூன்றில், சரமாகிய வாசியின் லக்ஷியம் தெரிந்து, அவ்வனுபவத்திலிருந்து பிணியாளன் வியாதியை நேத்திரத்தால் கண்டு, வாசியினால் ஆகருஷ்ணம் செய்வதே மணி மந்திர பரிகாரமாகும். ஔஷதாதிகளால் வியாதியை நிவர்த்திப்பதாயிருந்தாலும் வைத்தியனுக்கும் மற்றவர்களுக்கும் சர அப்பியாசம் வேண்டியிருப்பதால், அதற்குரிய அனுபவிகளையடைந்து, இரேசக பூரக கும்பகம் இன்னவை என்றுணர்ந்து அடைதலே நன்மார்க்க நிலையாகும்.
சரியை கிரியை யோக ஞானமாவன; மன்னுயிரும் தன்னுயிர் போல எண்ணுவது சரியை; மனு நீதியும் குரு மொழியும் தப்பாதிருப்பது கிரியை, ஒன்றாமே அலையும் மனமொடுங்குவது யோகம்; எப்போதும் தற்பரமாய் நின்றதுவே ஞானம்.
நான்கு பதமாவன: கடவுள் சிருஷ்டித்த உலகில் வசிப்பதே சாலோக பதம்: கடவுளை எதிரிட்டுப் போற்றி வாழ்தலே சாமீப பதம்: குரோதாதி குணங்களை நீக்கிச் சத்துவ குணமாயிருப்பதே சாரூப பதம்: துவித பாவனை நீக்கி, ஆத்தும விசாரணை செய்து, கடவுளோடு இரண்டறக் கூடி அது தானாய். தானதுவாய் நிற்பதே சாயுச்சிய பதமாகும்.
அஷ்ட கர்மமாவன. பிராணாயாமத்தால் வாசியை வசப்படுத்திக் கடவுள் திருவருள் மீது மோகித்து நித்திரையை நீக்கிக் கண் பார்வையைப் பகிர்முகப்படுத்தாமல் ஐம்பொறிகளை வித்து வேஷித்து நானெனும் அகங்காரத்தைப் பேதித்தும் பூரணத்தில் மனத்தை ஐக்கியஞ் செய்து, சஞ்சித வினைகளை மாரணம் செய்வதாகும்.
அஷ்டாங்க யோகமாவன: காமமாகிய இச்சையைத் தோன்றாமற் செய்து, தக்க ஆதனத்திலிருந்து, நாம் ரூபத்தை நாடும் மனத்தை இருதயாம்பரத்திலிருத்தி புறவிடயங்களை நீக்கி விகற்பமில்லாமல் தத்சொரூபத்தை நாடி வெளி ஒலி தானே தானாய் ஒத்து நிருவி கற்பமாகுதலாம்.
அணிமாதி சித்தியின் விவரம் அணிமா குஷ்மகாரண மகாகரண சரீரமென்பதில் மகாகரண சரீரமாய். அணுவிலசைவாக நுழைவது; மஹிமா, விஸ்வ ரூபமாய்த் தோன்றல்; ஹரிமா அதிக பளுவாயிருத்தல்; லஹிமா தக்கையைப்போல் இலேசாய்க் காட்டல், பிராப்தி, இரவி மதியோரை வசப்படுதல், பிரகாமியம் பிறர் காயத்தில் நுழைந்து நினைத்தவரிடம் அக்கணமே தோன்றல் ஈசத்துவம், பஞ்சகிர்த்தியத் தொழிலை நடத்துதல்; வசித்துவம், அண்டர் முதலிய அனைவரையும் தன் வசமாய் இருக்கச்செய்தல்.
தேகமைந்தின் விவரம்: அவை இருள் தேகம் மருள் தேகம், சுத்த தேகம் பிரணவ தேகம், ஞான தேகம் என்பன.
இருள் தேகமாவது ஸ்தூல தேகத்தில் அபானத்தில் மல குற்றம். நாவில் நாடிக் குற்றம் கண்டத்தில் கபக் குற்றம் மேல் மூலத்தில் திரைக் குற்றம். மனத்தில் ஆணவ மலம் பொருந்தி நானெனும் அக்கியான குற்றமாவது.
மருள் தேகமாவது, மாயா சம்பந்தமாய்த், தனக்கு வருவது தெரியாமல் அகங்காரங் கொள்வது.
சுத்த தேகமாவது கருவி கரணாதிகளிறந்து அறிவு அருள் வடிவாய்ப் பார்வைக்குத் தேகம் தோற்றுவது.
பிரணவ தேகமாவது, தேகம் தோற்றினும் கைக்குப் புலப்படாததும் நிழல் சாயை இல்லாததுமாம்.
ஞான தேகமாவது கண்ணுக்குத் தோற்றாமல் அறிவிற்குப் புலப்படுவது.
திருக்கு திருசியமாவன: நாமரூப பிரபஞ்சம் இந்திரியங்களுக்கு விஷயம் இந்திரியம், கரணங்களுக்கு விஷயம்; கரணங்கள் சீவனுக்கு விஷயம் சீவன், சீவ சாட்சிக்கு விஷயம்: சீவ சாட்சி விவேக ஞானத்திற்கு விஷயம்; விவேக ஞானம் பரிபூரண சைதன்னியமென்னும் அறிவொன்றுக்கும் விஷயமாகாது. இந்தச் சொரூப நிலையே தானென்றுணர்ந்து அதுவாய் விளங்குவர் ஞானியர்.
ஞானிகள் தேக சித்தியாதற்குத் தச தீட்சை விவரம்:
முதல் தீட்சையில் ரோம துவாரங்கள் வழியாகக் கெட்ட நீர்கள் வியர்வையாய்க் கசியும்; இரண்டாவதில் முத்தோஷமாகிய வாத பித்த சிலேத்தும தோஷம் நீங்கும். மூன்றாவதில் பழைய கெட்ட உதிரங்கள் கசியும்; நாலாவதில் சர்ப்பம் தோலுரிப்பது போலச் சரீரத்தில் தோலுரியும்; ஐந்தாவதில் சட்டை கழன்று தேகம் போன்றது சிவந்த நிறமாகப் பஞ்ச மூர்த்திகள் கோரியதைத் தருவார்கள்; ஆறாவதில் சட்டை கழன்று, சுழுமுனை வாசல் திறந்து, துரதிருஷ்டி தெரியும். ஏழாவதில் சட்டை வெளுப்பாய்க் கழன்று, தேகம் தீபம்போலப் பிரகாசிக்கும்; எட்டாவதில் சடத்தை உயரத்தூக்கும் இலாகிரியுமாகும்; கூடு விட்டு கூடு பாயும். ஒன்பதாவதில் தேகம் சூரியப் பிரகாசமாய் அஷ்டமா சித்தியும் கைவல்யமாய்த் தேவர் ஏவல் புரிவர்; பத்தாவதில் தேகம் தீபம்போலப் பிரகாசித்து தேகத்தை வெட்டக் கத்தியோடும்; சொரூப சித்தியாம், அண்டத்தில் மவுனம் நரை திரை மூப்புப் பிணி மரணம் ஏற்படா.
தவசிகளுக்கு ஆதார் வாசி வாசி என்பது பிராண வாயு: இதைக் கொண்டு சகல சித்திகளையும் பெற்றனர். சுடரான சுழுமுனையில் சந்திரன் சேரில், பஞ்ச பூதமும் அறிவும் ஒடுங்கும்; இரவி சேரில் ஐம்புலனும் அறிவும் பெருகும். இரவி மதி ஒன்றாய்க் கூடிச் சுழுமுனையிடம் ஒடுங்கில், அறிவும் தச வாயுவும் ஒடுங்கும் வாசி நடு நிலையிலும் மூலத்திலும் நாசியிலும், கண்டத்திலும் சுழியிடமும் சதா நிற்கப் பெற்றவர்கள் தாம் மெய்ஞ் ஞானிகள்.
சாகாக் காலையும் வேகாத் தலையையும் மணியாடும் கோணத்தையும் ஆசான் முன்னிலையில் தெரிந்து மும்மூலமாகிய உந்திமார்பு நெற்றிக்கண்ணிடமிருப்பர். அமாவாசை அன்னந்தண்ணீரிறங்குமிடம். பருவம் அன்னரசம் பிரிக்குமிடம், நாதமென்பது தீமனம் விந்தென்பது வாசி தீயானது வாசிமீதேறி விளையாடும். சாகாக்கால் வாசி வாயு வேகாத்தலை ஆகாசவெளிபோகாப்புனர் ஆவியான வன்னி ஆக மூன்றும் கூடியது. நாதமென்றும் பசந்தமண்ணும் தண்ணீருமான இரண்டும் விந்துவென்றும் விளங்கும்.