Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கரனார் திருவுளம் மகிழ்ந்து ... அனுபூதி நிலை
முதல் பக்கம் » பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு
சிவானந்த போதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2015
04:12

காப்பு)        (நேரிசை வெண்பா

1. சிவானந்தபோதமாஞ் சித்திமுத்தி தந்து
பவானந்த மானவினை பாழாம் நவானந்த
ஈசனே தானாகும் என்வடிவுத் தாளிணையைப்
பாசமுடன் முன்றொழுவான் பார்.

2. தியாகரருள் போதஞ் சிவசுந் தரன் சொல்
தயாபரியென் றாய்வடிவந் தானும்செயாவெனவே
பொய்யா வினாயகனும் பொற்குருவாஞ் சண்முகனும்
அய்யாவு மென்னுள்ளே யாம்.

3. முத்திபெறு மென்னெஞ்சு மூர்க்கருட னேயிணங்கிச்
சித்தந் ததும்பிச் சிதறாமல் முத்தனாம்
பட்டினத்தார் சாட்சி பகுத்தறித லிந்நூலைத்
தொட்டவர்க்கு முண்டாஞ் சுகம்.

4. பணியுறுத்த லாகப் பரபோகங் கொண்டு
துணிவுறுத்த நெஞ்சுக்குச் சொல்லின் அணியாய்ப்
படபடென்னும் நெஞ்சம் பகருசிவா னந்தத்
திடமுறுவார் தாமே சிவம்.

5. சிங்கா தனமுடைய செல்வ அடியார்கள்
தங்காற் சிரமேற் றரித்திட்டேன் பொன்கால்
ஏற்றிப் புகழ்ந்தன்பா லிந்நூலென் புன்கவியால்
சாற்றத் துணிந்தேன் சரண்.

நூற்பயன்        (அறுசீர் விருத்தம்)

6. அறிவதனை மனங்கேட்கச் சிவானந்த போதத்தை அறிய நன்றாய்
நெறியுடைய மூக்தர்கள்தன் திருவடியிற் பணியவருள் நிலைக்கக்காட்டிக்
குறியுடனே அனுபவித்து வழியடைந்து கதிபெறவே கூறவென்றும்
பிரிவறவே வாழ்ந்துசிவப்பேரானந் தம்பெருகப் பேசு மிந்நூல்.

மாணிக்கவாசக சுவாமிகள் துதி:

7. நிறைந்தபரி பூரணமாய் நிற்குணமாய் நிர்மலமாய் நித்த னாகித்
துறந்தமன முடையோற்குந் துரியனுமாய் அதீதனுமாய்ச் சோதி யாகிக்
கறந்தமுலைப் பாலாகிப் பாலிலுள்ள ருசிகாட்டுங் கர்த்த னாகிச்
சிறந்தகுரு மாணிக்கச் சுவாமிகளை எம்முளத்திற் றொழுதல் செய்வாம்.

சமயாசாரியர் மூவர் துதி:

8. இசைக்குருகிப் பரந்தானே யெழுந்தருளி வேண்டியதோ ரின்பந்தந்து
மிசைக்குளவா யெதிர்த்தவரை மதித்திடாச் சிவசமய மேலாய்ச் செய்து
திசைக்குளவோர் புகழ்ந்தேத்தச் சிவாலயத்திற் றேவாரஞ் சிறக்க வோதிப்
பசைக்கருதி யருள்பெருகு மூவரிணை மலரடியிற் பணிகின் றேனே.

பசவண்ணர் அல்லமாப் பிரபு துதி:

9. பத்திநிலை தவறாமற் கிருபையுமே வழுவாமற் பாரின் மீதே
உத்திசிவ கணேசருக்குப் போதமுற்றுப் பூசைசெய்தே யுகந்து ஞானத்
தத்துவமே யுணர்ந்தசிவந் தானாகும் பசவண்ணர் சாட்சாத் கார
முத்திதரும் அல்லமாப் பிரபீச ரிருவர்தாள் முடிக்கொள் வோமே.

மருத்துமலைத் தேசிகர் துதி:

பன்னுறை சாத்திரங்கள் ஆகமங்கள் விரிந்தநூற் பலத்திற் சென்றே
உன்னுகின்ற மனத்தாலே பிறப்பிறப்பாம் நோய்பலவற் றுற்றி டாமற்
பொன்னுடைய அம்பலவர் கழல்பணியச் சிந்தையாற்றுப் பூசை செய்ய
என்னதென்றே எனையாண்ட மருத்துமலைத் தேசிகனருள் இறைஞ்சுவோமே.

நூல்:

அறிவுக்கும் மனத்துக்கும் வாக்குவாதம்

அறிவு கூறுதல்:

ஆன நெஞ்சமே! இமைப்பொழு தாகிலும் அலைவறுத் திருத்தாயோ?
போன நாளிலே நடந்தது மிருந்ததும் புதுமைக ளறியாயோ?
ஈன மாகிய கவலையை நீக்கியைம் பொறியினி லிணங்காமல்
தானமொத்துநான் சொல்மொழி கேட்டுநீ சரியென்று மகிழ்வாயே.

மனம்கேட்டல்: ஏதேது! விபரீதமாய் இருக்கிறதே! இமைப் பொழுதாகிலும் பிரியமாலிருந்த நீ இப்போதென்னை அன்னியமாகக் குறித்துச் சொற்படி கேட்கச் சொன்னதும் சந்தோஷமாயிற்று! ஆகிலும், உதவியான காரியமாக இருப்பிற் கேட்கவேண்டுந்தானே! ஆதலாற் சொல்க; என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

முக்திபெறும் அழகான நெஞ்சமே! பணியறுத்தல்மொழியக்கேள் நீ:
சத்துசித்தானத்தபரா பரமேநற் கதியென்றுஞ் சார்ந்தி டாமல்
முத்தர்களும் ஓதிவைத்த நூலதனை யாராய முனைந்தி டாமற்
பத்திநிலை நில்லாமற் சிந்தனையு மோயாமற் பார்ப்ப தென்னோ!

மனம் கேட்டல்: ஆயின் யாதோ பரத்தைச் சரவில்லையெனவும், நூலினுட் பொருளையறிந்து முனை கொள்ளவில்லையெனவும் பத்தி நிலையில் நிற்கவில்லை எனவும், சிந்தனைகளை அறுக்கவில்லையெனவும் சொல்கிறவற்றை எக்காலத்திலும் யானறியாதவனாய் இருக்கிறேன். இஃதந்தரங்கப் பாஷையாய் இருக்கின்றது. மாடு, மக்கள், பெண்டிர், சுற்றம், வாழ்நாள் முதலியனவே பொருளென்று உன்னியிருந்த எனக்கிப்போது திடீரென்று நான்கு வகையில் சிந்திக்கச் சொன்னாய். ஸ்பஷ்டமாகப் புலப்படுமாறு புகல்க. என்று மனங்கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

மாடும் மக்களுஞ் சுற்றமும் பெண்டிரும் மாளிகை யுடன்வாழ்வும்
நாடு ராச்சிய மாண்டிடும் புகழ்ச்சியும் நமவென்றே தேகத்தின்
ஊடு சென்றுநீ எனதுடல் யானென வுழன்றலுத் திடு நெஞ்சே!
வீடு விட்டுயி ரேகிடும் போதினில் வினைவழி நுழைந்தாயே.

மனம் கேட்டல்: தேகத்தினுள்ளே புகுந்து மாடு மக்கள் சுற்றம் பெண்டிர் உயர்வாழ்வு. தேசாதிபத்தியப் புகழ்ச்சி முதலியவை சதமென்று தேகம் நான் எனது என்று பாராட்டி உழலுகறாயென்றும். முடிவு காலத்தில் வினை வழியிலேயே உயிரை நுழைக்கிறாயென்றுஞ் சொல்லுகிறாய். நீ இது காறும் கூட இருந்தாயா இல்லையா? இதுகாறும் யாதும் புகலாதிருந்தவாறென்னை? இப்போது இங்ஙனஞ் சொல்லுதற்குக் காரணமென்னை? என்று மனங்கேட்க அறிவு கூறுகின்றது:

அறிவு கூறுதல் :

கேணீ நெஞ்சமே! உன்னிள வயதிலே கிடந்துளைந் தனைமுன்னாள்
வீணி லேபல செனனமு மெடுத்ததின் நீமேலிந் திடும்போதே
ஊணி லேனெனை யானறி யாமலே யுத்தமர் நோக்கத்தாற்
காணுமிப்படி மானிட தேகமும் கண்டதும் அறிவாயே.

மனம் கேட்டல்: அனேகம் தேகத்திற் பிறந்து பிறந்திறக்கின்றதாகவுஞ் சொன்னாய்: அவற்றுளிம்மானிட தேகம் அருமையாகப் பெரியோர் கிருபாநோக்கத்தாற் கிடைத்ததாகவுஞ் சொன்னாய்; அது தெரியும் படிக்குச் சொல் என மனம் கேட்க. அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

நாலுவகை யோனியிலும் எழுவகையின் தோற்றத்தும் ஈளினமாக
மேலுகந்த மானிடந்தா னெடுப்பவே அருமையாய் மெய்யனாகிப்
பாலுபோல் மனமுடைத்தாய்ப் புண்ணியமே மிகுந்துபவங் கீழாய்த் தள்ளி
நூலணர்வ தருமை நெஞ்சே! இருவினையி லொருவினையை நொறுக்கித் தானே;

மனம் கேட்டல்: ஆனால் மானிட தேகம் எடுப்பதருமையென்று சொன்னாய்: அதிலும் மெய்யனாகிக் கள்ளமற்றுப் பாவம் போக்கிப் புண்ணியம் மிகுந்து நூலுணர்வது அருமையென்றுங் காட்டுகிறாய். அப்படியானால் மானிட தேகத்திலேதானே பலவிதமாய் அருமையாகிய தேகமுண்டோ? என்று மனங் கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

மனிதரிலும் பறவையுண்டு விலங்குண்டு கல்லுண்டு மரமு முண்டு
மனிதரிலும் நீர்வாழுஞ் சாதியுண்ட னேககுல மனிதருண்டு ;
மனிதரிலும் மனிதருண்டு; வானவரு மனிவராய் வருவ துண்டு;
மனிதரிலே பிறப்பறுக்க வந்ததே அருமையென வகுத்தார் முன்னோர்.

மனம் கேட்டல்: ஆனால் தேகமெடுப்பது எவ்விதம் வினையென்பது ஒன்றோ இரண்டோ? இவற்றில் சகாய வினையெது? வினை வழியாய்த் தேகமெடுக்கிறது யாராலே? என்று மனங் கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

எழுவகையின் தோற்றமாய்க் கடந்தோறும் பலவிதமாய் இன்ப முற்றே
பழுதறவே தேகம்வரும் பேய்மனமே நீ செய்த பண்பினாலே;
உழிதருமிக் காலத்தும் ஒழியாம லிருவினையா லுகந்து நிற்கும்:
கழிதருமிவ் விருவினையி லொருவினையை நோக்குவது கடினந் தானே.

மனம் கேட்டல்: ஆனால், என்னாலே வினையுண்டாகிறது என்றும் வினையினாலே தேகமெடுக்கிறதென்றும் சொன்னாய். வினை வழியாய்ப் பலயோனி தோறும் எப்படிப் புகுந்து ஜனன மரணமுண்டாகின்றன? என்று மனங் கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

மனம்வாக்குக் காயத்தான் மருவுஞ் செய்கை
மலர்மணம்போ லுறுசன்ம மயக்கத் தாலே

இனமாக்கும் பிறவியினி லிழுத்துக் கொண்டே
எத்தனையோ சன்மத்தி லிறக்கச் செய்யும்

தனவாக்காய்ப் பிரமாவுஞ் சிருட்டி செய்யத்
தான்றானே வளர்ந்திந்தத் தரணி மீதே

இனமாக்கு வெம்பாசந் தன்னிற் சிக்கி
இறந்தார்கள் பிறந்தார்க ளின்னம் நெஞ்சே!

மனம் கேட்டல்: ஆனால், பிறந்தாலும் இறந்தாலும் வேதாகம சாத்திரச் சொற்படி நடந்தால், தேவேந்திர பதவி பிரமபட்ட முதலானவை அடையலாமென்று சொல்லுகிறார்களே? அது சுகமல்லவோ? என்று மனங் கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

முந்த சன்மமாம் புண்ணிய மிகுந்திடின் முக்கிய முண்டாகும்;
பிந்த சன்மமாம் பாவமே மிகுந்திடிற் பெரியதோர் துயராகும்:
அந்த ரண்டையு மறுத்திடி லொளிதரும் அரண்கழற் றுணையாகும்;
பந்த மானதோர் புராணமும் வேதமும் படைத்ததை யறிவாயே.

மனம் கேட்டல்: ஆனால் மும்மூர்த்திகள் பட்டமாய் இருந்தாலும் தேவேந்திர புகழ்ச்சி பெற்றாலும் பின்னும் பூலோகத்திலே பிறப்பதுண்டோ? என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

வாழும் மாலயன் உருத்திரன் இந்திரன் வானவ ரானாலும்
சூழும் மாயுகம் பிரளயந் தன்னிலுஞ் சுகமுடன் வாழ்ந்தாலும்
தாழு மானதொல் லுலகில்வந் துறுவர்கள் தரணியோ புகழ்ந்தேத்த
வீழும் நெஞ்சமே! அரனடி சேர்ந்திடில் வினைக்குழி யழுந்தாயே.

மனம் கேட்டல்: ஆனால், வேதாகம புராணங்கள் உண்டாக்கி வைத்தார்? அவற்றாலே என்ன பிரயோஜனம்? என்று மனம் கேட்க, அறிவு கூறுகின்றது;

அறிவு கூறுதல்:

நரசன் மந்தனை யெடுத்துமப் பவத்தினில் நழுவிடா திவ்வணமே
திரம தாகவே யீசனுத் தரவினிற் செய்வர்புண்ணியமென்றே
வரமு டைத்தநல் வியாசருஞ் செய்தனர் வழங்கிடு மதனாலே
பரவ டியையுறு முத்தர்க ளிருவினைப் பற்றறப் பார்த்தாரே.

மனம் கேட்டல் : ஆனால் ஒருவர் செய்கிற பாவ புண்ணியம் ஒருவருக்கு உண்டென்கிறது எவ்விதம்? என்று மனங் கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

ஒருவர்செய்த பாவபுண்ய மொருவ ருக்கிங்
குண்டென்று சொல்லுகின்ற வூமை நெஞ்சே!

தருகுமவ ரவருயிர்க்குத் துணையார்? சொல்வாய்:
தந்தைதாய் பெண்டுபிள்ளை துணையு மாமோ!

வருகுமந்த வியாதிகளும் வினைதா னல்லோ?
மக்கள் பெண்டு தந்தைதாய் வாங்கிக் கொண்டு

திருகுமவர் பின்னொருவர்க் கீந்த துண்டோ?
திருட்டாந்தங் கண்டுநீ தெளிந்தி டாயே.

மனம் கேட்டல்: அப்படியானால்; புராணங்களிலே ஒருவர் செய்த பாவபுண்ணியம் மற்றொருவருக்கு உண்டென்று பொய் சொல்ல வேண்டியதென்ன? என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது:

அறிவு கூறுதல்:

பாசபந்த மானதொரு மூடர்க் கிந்தப்
பற்றுதல்வை யாவிட்டால் நம்ப மாட்டார்:

ஆசைகொண்டு செய்யார்கள் விகாதஞ் செய்வார்:
அதனாலே பொருத்தம்வைத்துச் சொன்ன தல்லால்

நேசமிது போலவே பகைத்தார் பாருள்
நீங்கினால் வேறுகதி நிலத்தோர்க் குண்டோ?

மோசமிது நம்பாதே நெஞ்சே கேளாய்.
முனைந்தவர்க்குச் செய்தபலன் முடியுந் தானே.

மனம் கேட்டல்: ஆனால் ஒருவர்க்கொருவர் நன்மை தீமைக் கூட்டுறவில்லையே? அப்படியிருக்க ஒரு குடும்பத்திலேயுள்ள பந்து ஜனங்கள் ஒருவர்க்கொருவர் பிறவற்றிற்கு இடங்கொடாமல் உள்ளுக்குள்ளே அநேக விகற்பத்தோடு மனம் பேதித்து வாழ்கிறார்களே! எந்தப் பற்றுதலைக் கொண்டு ஒன்று போல் இருக்கிறார்கள்? என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

பெண்ணாலும் பொன்னாலும் பூமி யாலும்
பெருக்கவே யிச்சைகொண் டொன்றுக் கொன்று

தின்னார்க ளுறவாடிச் செத்தா ரல்லாற்
சேர்ந்துமன மொன்றாகிச் சிறந்திட் டாரோ?

கண்ணாலே பார்த்துநீ சுகங்கண் டாயோ?
கவலைக்கே யாளாகிக் கருத்தி ழந்து

புண்ணாகிப் பிறப்பிறப்பிற் புகுந்திட்ட டாய்நீ
பூமலர்த்தாள் துணையென்று புகழ்வாய் நெஞ்சே!

மனம் கேட்டல்: ஆனால், வினை வழியே உயிர் இத்தேகத்தை விட்டு இனிமேல் தேகமெடுக்கிறது எந்தத் தேகமோ அதைத் தெரியும்படி இத்தேகத்தை விடும்போது யாதொரு குறிண்டோ? என்று மனங்கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்        நேரிசை வெண்பா:

தேகந் தனிற்பொறியுஞ் சீராம் புலன் கரணம்
ஆகந் துறக்குமப்போ தந்நேரம் போகந்தான்
எவ்விடத்துச் சென்றதோ ஏங்குங் கடவடிவம்
அவ்விடத்தை நன்றா யறி.

மனம் கேட்டல்: ஆனால் வினைப்பயனுமறிந்தேன்; இந்த அருமையாகிய மானிட தேகம் வந்ததும் அறிந்தேன். வேதாகம புராண சாத்திரங்களது கட்டுப்பாடுமறிந்தேன்; பிறப்பு  இறப்பென்கிற விவரமுமறிந்தேன்; வினை வழியே தேகமெடுக்கிறதென்னும் விபரத்தையும் என்னால் வினையுண்டாகிறதென்பதையும் அறிந்தேன்! ஒருவருக்கு  ஒருவர் நன்மை தீமை உதவியில்லையென்பது மறிந்தேன். ஒரு குடும்பத்திலே பல மக்கள் ஒருங்கு கூடிவாழ்கிற பந்தத்தையும் அறிந்தேன். எல்லாமுள்ளபடி ஒத்துக்கொண்டேன்; அரனது திருவடி நிழலை அடைகிறதே சுகமென்று ஆசை கொண்டேன். இத்தனை நாளாக என்னை நம்பியிருந்த குடும்பத்தாரெல்லாரும் இளைஞர்களாய் இருக்கிறபடியினாலே அவர்களை விட்டு விட்டால் வேறு கதியின்றி அவர்கள். வருந்துவார்களாதலால் அவர்கள் பக்குவ கால பரியந்தமிருந்து காக்கவேண்டுமென்று பரிதாபப்படுகின்றமையால், அதற்கொரு வபணஞ்சொல்லுக என்ற மனம் கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:             எண்சீர் விருத்தம்:

அவரெல்லாம் இருக்கவிப்போ துன்னை யேமன்
அழைத்துவிடி லியாதுசெய்வாய் அழகு நெஞ்சே!

இவர்களுக்குப் பிழைக்கும்வகை திரும்பி வந்தே
ஏதுவாய் முடிப்பதுண்டோ? எண்ணிப் பாராய்:

தவறிநீ கடம்விட்டுப் போகும் போது
தாம்கூட மாண்டாரோ பிழைப்பில் லாமல்?

அவரவர்க்குச் சிவன்றுணையென் றெண்ணி டாமல்
ஐயத்தா லிப்படியே அலைவுற் றாயே!

மனம் கேட்டல்: ஆனால், அறியலானேன், இனிமேற் பாசபந்தத்தில் வீழ்வேனோ? திருவடியை அடையாமல் இருப்பேனோ? ஆனால், இன்னுங் கொஞ்சகாலம் பொறுத்துத்தான் திருவடியை அடைவதற்கு ஏது பண்ணிக் கொள்ளக் கூடாதோ? இப்போதுதானே துணிந்துகொள்ள வேண்டுமோ? என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது;

அறிவு கூறுதல்:

காயமன வாக்குதான் தளர்ந்தபோது
கருத்தழிந்தே யுறுதியற்றுப் பாசம் மீறி

நேயமந்த மாய்கையினிற் பற்றிக் கொண்டால்
நெற்றிக்கண் படைத்தவர் தாம் நிலைப்பிப் பாரோ?

மாயபந்த மானவிந்தக் காயந்தானும்
வல்லமையோ? எத்தனைநாள் வாழு மோசொல்

காயமது நிலையல்ல வென்று முன்னோர்
கண்ணினொளி மழுங்குமுன்னே கதியுற் றாரே.

மனம் கேட்டல்: அப்படியானால் சாலவும் அச்சங் கொண்டேன்: இனித்திருவடி அடைவதற்குப் போந்த வழி சொல் என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:            நேரிசை வெண்பா:

முந்துபரி பூரணமாய் முத்தி யடைந்தவர்கள்
சிந்தைமகிழ்ந் தோதுஞ்சிவ நூலை உந்தியுந்திப்

பார்த்தறிநீ நன்றாய்ப் பகுத்துப் பகுத்து நெஞ்சே!
சேர்த்தறிநீ யென்வசத்திற் செல்.

மனம் கேட்டல்: அப்படியே சொல்லுகிற சில நூல்களைப் பார்த்தேன்: திருவள்ளுவ நாயனார் முப்பால் வைத்துக் குறள் சொன்னதிலே.

துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வா னென்பான் துணை

என்று சொற்றனர் அஃதென்னகொல்? என் மனம் வினாவ அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:            அறுசீர் விருத்தம்:

யாவர் இருக்கும் நிலையதனை அவர்க்கே அதனி னிலையமர
மூவர் முதலாம் ரிடியோர்க்கும் முழுக்கத் துறந்தோர் காமியர்க்குந்

தேவ ரீர்க்குந் திறமுதலாய்ச் சிறக்கக் காட்டுங் கண்ணொளி போல்
நாவி லிருந்தே அஞ்சனமாய் நவின்ற மொழியென் னாயகமே.

மனம் கேட்டல்: ஆனால் முத்தி நிலையை மாத்திரம் தனிமையிற் பேசுகின்ற நூல் தான் எவ்விதமாகச் சொல்லும்? என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:            நேரிசை வெண்பா:

தேகம் எடுத்ததுவுஞ் சிந்தை யுடைத்ததுவும்
போகசமு சாரத்திற் புக்கதுவும் - தாகமது
கொண்டு தவிர்த்ததுவுங் கூறுங் கனவெனவே
கண்டுசொல்லும் நூலதனைக் காண்.

மனம் கேட்டல்: ஆனால் அந்த நூலும் பார்த்தேன் அதிலுள்ள பொருளைச் சங்கையற இப்படியிருக்குமென்று தெரிந்து கொண்டாற் போதுமோ? என்று அதிவினயத்துடன் மனம் கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

அறிவுக்கே சாட்சிகொண்டு நூலைப் பேசி
அங்கத்தைத் தானழித்தே அகத்தை நோக்கி

குறிவைத்த படியிருந்து மெய்யைப் பொய்யாக்
குற்றமென்றே பொய்யைத்தான் பொய்யாய்க்கண்டு

நெறியுற்றே இருவினையும் நீக்கிப் போட்டு
நேசமுடன் ஈசனுடன் பாசம் வைத்துப்

பிறிவற்றே ஒன்றாகி வாழ லாகும்
பேதித்துப் போகாதே பேணிக் கூடே.

மனம் கேட்டல்: அந்தப்படி தானே அனுபவிக்கிறதா. அல்லது மற்றொருவருடைய சகாயமும் வேண்டியிருக்குமா? என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

புகர்ச்சமய மாகின்ற பலசமயந் தன்னிலே புகுந்தி டாமல்
அகச்சமய மாகின்ற சிவசமயத்திச் சைக்கே யகப்பட் டால்நீ
மிகப் பெரிதாம் புத்தியை நீ படைத்திருந்தும் பெரியோரை மேவிடாமல்
தகப்படவே பிறவியென்ற நோய்க்குள்ளே சிக்கித்தான் தளர்வதேனோர்?

மனம் கேட்டல்: ஆனால், பெரியவர்களைச் சாரவும் வேண்டுமோ? என்று மனங்கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

பெரியோரைச் சாராமல் அவர்களுக்கே அன்பு செய்து பேசி டாமல்
துரியமா மதீதத்தில் சிவபூசை செய்யாமல் சுற்றிச் சுற்றி
அரியனுங் காணாத பரமசிவ மென்றதையு மறிந்தி டாமல்
சரியென்று வினைப்பயனுங் கொண்டதுவே கோலமாய்ச் சாதித்தாயே.

மனம் கேட்டல்: ஆனால், தெளிந்த பெரியவர்களுக்கு ஜகத்திலே பிரயோஜனமில்லையே! அவர்கள் எவ்விடத்தில் இருப்பார்களோ! அவர்களைக் கண்டு தரிசிக்கலாமோ? என்று மனங்கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

தெளிந்த துறவி இகந்தனிலே தேகப் பிராரத் துவப்படிக்குப்
பொழிந்தே கரணக் தனுபோகப் புவனத்திருந்து மெச்செயலும்
ஒழிந்து சிந்தை தெளிவுற்றே ஒன்றே சிவமென் றிருப்பார்கள்
இழந்த பேரும் அவரைக்கொண் டேறு வார்கள். இகத்தோரே.

மனம் கேட்டல்: ஆனால், இகத்தில் சஞ்சரிக்கிறதனால் பெரியவர்களுக்கு இடர் வாராதோ? என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

கருவி யகன்றிவ் வுலகத்தைக் கனவென் றிருக்கக் கருத்ததனுள்
உருவைக் கண்டொப் புவமையற்றே யுள்ளும் புறம்பு மொன்றாகிக்

குருவைப் பணிந்து பூரணத்தில் குலாவு மடியார் சகந்தனிலே
மருவப் பொருந்தி வாழ்ந்தாலும் மாசற்றிருப் பார்வல்லவரே.

மனம் கேட்டல்: ஆனால் விபரீதம் மிகுந்து வந்ததானால் அதை நீக்கிக் கொள்ள வல்லமையுண்டோ? என்று மனம் கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

முந்த இருந்த அஞ்ஞான மூடமான சத்தியையும்
பந்த மறவே தணிந்துபரா பரனைத் தினமுங் கைக்கொண்டு
சிந்தை தெளிந்தே குருபரனைச் சிவமென் றெண்ணுந் துணிவதனால்
தொந்தம் அறுத்துச் சிவானந்தச் சோதி யதுவாய்ச் சுகிப்பாரே.

மனம் கேட்டல்: அப்பேர்ப்பட்ட பெரியவர்கள் எந்தச் சாதியாயிருந்தாலும் தொண்டுபடலாகுமோ? என்று மனம் கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல் :

சாதி பேதந் தனைக்குறித்துத் தயங்கி மயங்கித் தளராதே
சாதி யாவ தெவரறிவர்? சருவ வுடலு மொன்றாச்சே!
சாதி யாவ ரெவரென்னில் தன்னையறிந்து சிவமான
சாதி பெரிய சாதியென்று சாற்றும் மனறகள் சத்தியமே!

மனம் கேட்டல்: ஆனால் பெரியவர்களைச் சாதி பிரித்துச் சொல்லுகிறதனாலே குற்றுமுண்டோ? என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

ஞானம் பதியா இழிகுலத்தோர் நாட்டிப் பிரித்தே சாதி தன்னை
ஈனசாதி யாரென்றே இகழ்ந்தார் முத்தர் பத்தரையும்
ஆன பெரியோர் தங்களையும் அவரி லொன்றாய்க் குறித்துக் கொண்
டீன முரைத்தே யருநரகி லிழிந்து போனா ரிகத்தோரே.

மனம் கேட்டல்: இப்பேர்ப்பட்ட பெரியவர்கள் ஜகத்தோர் இகழத்தக்கவராகத் திரிவானேன்? ஜகத்தோரிகழுவானேன்? இதனால் யாருக்குத் துன்பம் யாருக்கு இன்பம்? என்று மனம் கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:        எண்சீர் விருத்தம்:

பெரியோரைப் பித்தரென வுலகத் தோர்கள்
பேயரென்ன இகழ்வதென்ன பிரித்துக் கேளாய்:

திரிவார்க ளிச்சைபடி சகத்தோர் பார்த்துத்
தீவினையும் நல்வினையும் திரட்டிக் கொள்வார்;

சரியாச்சென் றிருவினையு மொழித்துப் போட்டுச்
சச்சிதா னந்தமென்ற பதத்திற் சார்ந்து

துரியாதீ தப்பொருளைப் பெற்று மந்தச்
சுயஞ்சோதி யாகியே சுகமுற் றாரே.

மனம் கேட்டல்: ஆனால் பெரியவர்கள் இருவினையும் ஜகத்தோருக்கு ஒப்பித்துச் சுகம் பெற்றார்களே! அவர்களை இகழ்ந்த உலகத்தாரென்ன லாபம் பெற்றார்கள்? என்று மனங்கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

பெரியோரை இகழ்ந்தவர்கள் பெற்ற லாபம்
பேசக்கேள் நெஞ்சமே! பெருமையாகப்

பரியேறிப் போனவன்றான் தீயில் வீழ்ந்து
பதைத்துப்போய் அடிவயிற்றில் நெருப்பைக் கூட்டி

நரிவாயில் பொருள்பறிக்கு மின்பம் போல்
நகைத்திகழ்ந்தே எரிவாயின் நரகம் புக்கு.

விரிவான எழுநரகில் விழுந்தி ளைத்து
மெலிந்திடுவா ரென்றுமறை வீசுந் தானே.

மனம் கேட்டல்: ஆனால் பெரியவர்கள் மகத்துவம் இப்படியென்றும் அறியலானேன் அப்படிப்பட்ட மகாத்துமாக்கள் தெரிசனங் கண்டு கொள்ளுதற்கு மார்க்கமுண்டோ? என்று மனம் கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:         அறுசீர் விருத்தம்:

குற்ற மேதுங் குறியாமல் குணமும் பலவாய் விரியாமல்
ஒத்துப் பொறிகள் புலனைந்தும் உறவாய் நீயு முகந்திதனைப்
பத்தும் பதன் மாகத்தான் பட்சம் மிகவும் வைத்துரைத்தாற்
சித்த மதனைச் சிவமாக்குஞ் சிவா னந்த போதமிதே.

மனம் கேட்டல்: ஆனால், எவர்களிடத்திலும் சாத்திரத்தின் கேள்வி கேட்டுத் தெரியும்படி செய்து கொள்ளுகிறது. தானோ, அவர்களாக்கினைக்கு உட்பட்டுத் தொண்டுபண்ண வேண்டுமா? என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:             எண்சீர் விருத்தம்

ஐயமின்றி யுடல்பொருளும் ஆவி மூன்றும்
ஆண்டவனே யுன்னவென் றளித்துப் பின்னும்

துய்யகுரு நாதனுக்கே அடிமை யாகிச்
சொன்னபடி கேட்பதற்கே தொண்டானாகி

மெய்யென்றே அவர்மனமுங் களிக்கும் மட்டும்
வேண்டினதோர் சோதனைக்கு மிதத்தி டாமல்

செய்யதிரு மலரடியிற் காத்தி ருந்தாற்
செவியதனி லுபதேசம் செய்வார் தாமே.

மனம் கேட்டல்: ஆனால் வெகு பிரயாசையாய் இருக்கும்போல இருக்கிறதே! சாத்திரக் கேள்வி மாத்திரங்கேட்டுக்கொண்டு புத்தியினாலே. அனுபவித்து முத்தியடைக்கூடாதோ? குரு சமூகத்தில் தொண்டு பட்டு தான் முத்தியடைய வேண்டுமோ? என்று மனம் கேட்க அறிய கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

இருவினையுஞ் சமமடைந்தே யெழுந்து வந்த
என்குருவாம் மாணிக்க ஈச னார்க்கும்

குருவடிவாய் அம்பலவ ருபதே சித்த
குறிப்பைத்தான் அறியாயோ குருட்டு நெஞ்சே!

மருவுமிந்த வுடலுக்கு ளுடலைக் காட்டி
வாக்குக்கு வாக்கருளி மனமு மொத்துத்

திருவடியில் அடையகுரு முகூர்த்தம் அல்லாற்
சிவானந்த போதமுந்தான் தெளிந்தி டாதே.

மனம் கேட்டல்: அப்படியானால் ஞானாசாரியரிடத்தில் அனுக்கிரகம் பெற்றுக் கொண்டால் போதாதோ? சாத்திரமும் பார்க்க வேண்டுமோ? என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது.

சேறுபோல் தளதளென அலைபூ மிக்குள்
திடமான கம்பத்தை நாட்டி னக்கால்

மாறுகொண்டு விழுந்திடுமென் றதனாற் சுற்றி
மணற்கல்லைக் கெட்டித்து முறைக்கு மாபோல்

கூறுகின்ற சாத்திரத்தின் சாட்சி தந்து
குலைந்திடாத் திடமுற்றுக் குறித்து நின்று

வீறுகொண்டு நெஞ்சே! நீ அனுப வித்தால்
மெய்ஞ்ஞான வீடதனில் விளங்கு வாயே.

மனம் கேட்டல்: ஆனால், சாத்திரம் தெரியாத பேர்கள் சற்குருவினிடம் உபதேசம் பெற்றுச் சாதித்து அனுபவமடைந்த பேர்கள் பெற்ற காட்சி நூலிலுள்ள பொருளுக்கு ஒத்துக் கொள்ளுமோ? என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

உறுதிகொண்ட பிள்ளையென்றால் ஆசான் வைத்து
உபதேசங் கேட்டளவி லுறுதி கொண்டே

இருதயத்தில் நாட்டினது நழுவி டாமல்
எப்போதும் குருபத்தி தவறி டாமல்

மறுகவலை சாராம லூன்றப் பெற்றால்
வழங்குநூல் பேசுகின்ற வன்மைக் கொக்கும்

கிருபைதரும் முத்தியே அடைய லாகும்
கிட்டினவாக் கேதுகுறை? கேடில் நெஞ்சே!

மனம் கேட்டல்: ஆனால் ஞானானுபவம் ஒருவர் பெற்றிருந்தால் பெறாதவர்கள் அந்த அனுபவத்தைச் சொல்லென்றும் காட்டென்றும் சொன்னால், அவர்களுக்கு ஒத்துக் கொள்ளும்படி சொல்லலாமோ? அப்படி இப்படியென்றுங் காட்டலாமோ? ஆகிலும் மெய்ப்பொருளின் பிரகாசத்தைப் பேசினால், மனமொத்துக் களிப்பார்களோ? என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

ஒருவர்தின வொருவர்சொரிந் துற்ற போதே.
உற்றவர்க்கோ சொரிந்தவர்க்கோ வுற்றுப் பாராய்.

மருவுமந்தச் சொப்பனத்திற் கண்ட காட்சி
மகிழ்ந்தவர்க்கோ கண்டவர்க்கோ மதித்துப் பாராய்.

உருசியுடன் அறுசுவைகொண் டுண்ட வர்க்கோ
உவகையுடன் கண்டவர்க்கோ வூன்றிப் பாராய்.

தெரிசனமுங் கண்டுசிந்தை யற்ற பேர்க்குச்
சிவஞானம் அவரவர்க்கே தெளியுந் தானே.

மனம் கேட்டல்: ஆனால் மெய்ப்பொருளினுடைய பிரகாசம் அவரவர்கள் கண்டு களிக்கப்பட்டதுதானோ? என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

நீதானே அறிந்தல்லோ நிலைக்க வேண்டும்?
நிட்டூரர் சொல்லுகின்ற நெறியிற் சென்றால்

போதாது போதாது பொந்துக் குள்ளே
புலியிருக்கு மென்னவதிற் புகுந்து பார்த்தால்

வேதாள மென்றதொரு மயக்கந் தீரும்
மெய்யடியார் மனங்களிக்க மேவி வாழ்வாய்

வாதாடி முத்தர்களை விட்டி டாதே.
மனமே! நீ யுள்ளபடி வணங்குவாயே.

மனம் கேட்டல்: ஆனால் தனித்தனியே சுகமடைவதாய் இருக்க பெரியவர்கள் ஒருவரோடொருவர் கூடிக்கொண்டு ஆனந்தம் மிகுந்து உறவாடுகிறார்களே! அஃதெவ்விதக் காரணம் பற்றி? என மனம் கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

மறப்பான மூன்றுடலும் இழந்த முத்தர்
மனவெளியாம் பெருவெளியில் மருவ லாலே

துறப்பான ஆகாச மொன்றாந் தன்னில்
சூரியன்றன் பிரகாசத் தோற்றம் போலச்

சிறப்பாகத் தேகத்தி லிருந்த முத்தர்
திருட்டியினாற் கலந்தொன்றாய்த் தியானிப் பார்கள்:

மறைப்பான தில்லைநெஞ்சே! கண்ம ணிக்குள்
வன்னியொளி மருவுமந்த வண்மை பாரே.

மனம் கேட்டல்: ஆனால் சாத்திரம் சரியை. கிரியை, யோகம், ஞானமென்று, சாற்றுகின்றதே! அவற்றுள் முன் சொல்லிய முத்தொழிலும் செய்து முடிந்த பின்னரன்றோ ஞானம் அறிய வேண்டும்? அப்போதன்றோ ஞானசாரியர் கிருபாகடாட்சம் வேண்டும்? என்று மனம் கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

சரியை முதல் முத்தொழிலுச் செய்கின் றோர்கள்
சாயுச்சிய முத்திரையைப் பணிய வேண்டும்.

உருசியுடன் அமுதளித்துப் பாத பூசை
உண்மையுட னுபசாரஞ் செய்ய வேண்டும்

பரிசைகொண்டு சோதித்து நிந்தை சொல்லிப்
பகைத்துவிடின் நசித்திடுவர்; பலனோ பாழாம்

விரிவுகொண்டு மயங்காதே உற்றுப் பாராய்:
வீணருடன் கேள்விவிட்டு மெய்யைப் பாரே.

மனம் கேட்டல்: ஆனால் அவ்வளவு மகத்துவம் இருக்கிறபடியினாலே அம்முத்தொழிலினது இலாபமுஞ்சுளுவிலே முடித்துக் கொள்ளலாகாதோ? என மனம் கேட்க, அறிவு கூறுகின்றது;

அறிவு கூறுதல்:

சாயுச்சிய முத்திரையை அடுத்துக் காத்துச்
சங்கையற்றுத் திருவுளத்துப் பாங்குக் கொத்தால்

நீயுச்சிய மாகவென்று கிருபை நோக்கில்
நேரான முத்தொழிலி னிலாபம் நேர்ந்து

மாயுச்சிய மாகவே அம்ப லத்தான்
மலரடிக்கே அன்பாகச் செல்வாய் நெஞ்சே!

பாயுச்சிய மாகவே பெற்றோ ருண்டு
பராபரத்தை அடைந்ததன் பண்பிஃதாமே.

மனம் கேட்டல்: ஆனால் இத்தகைய அனுபவத்தை இல்லறத்தினின்று பெற்றுளார் எவரேனுமுண்டுகொல்லோ? அன்றேல் துறவறம் பூண்டு, சந்நியாசியாய்ப் பற்பல விரத வைராக்கியமும் சர்வ சங்க நிவர்த்தியுஞ் செய்து, ஜெகத் சஞ்சாரத்தை விட்டகன்று ஆரணிய சஞ்சாரமுற்று வருபவர்களின் ஞானமென்னும் அறிவுப் பிரகாசமாகிய ஸ்பஷ்டப்பட்டுளரோ? இவர்களிலுந் தன் மனத்துட்குடிகொண்ட அஞ்ஞானாந்தகாரத்தையோட்டும் வன்மையிலராகி. மூடராதலுமுண்டோ? என்று மனம் கேட்க, அறிய கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

சன்னியாசி யானவருள் மூட ருண்டு
சமுசாரஞ் செய்பவருள் ஞானி யுண்டு

முன்னாலே ஏதுவாம் பிராரத் வங்கள்
மூட்டிவிட்டு ஞானிக்கு முறைதப் பாது

பின்னாலே இருவினையுந் தொடரச் செய்து
பெற்றிடுவார் ஆசான்றன் கிருபை கொண்டு

பின்னாபின் னங்களா லென்றெண்ணாதே
பெருஞ்சோதி முத்திரையைப் பேணிக் கூடே.

மனம் கேட்டல்: ஆனால், இல்லறத்திலேயிருந்தும் ஞானம் பெற்றுக் கொள்ளலாமென்கிறது. சுளுவாய் இருக்கிறதே! உலகத்திலுள்ள பலரும் ஞானாசிரியரிடத்து அனுக்கிரகம் பெற்றுக் கொண்டு முத்தியை அடைவது அருமையாயிருக்கிறதே! அதிலென்ன பிரயாசை? என்று மனம் கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

யாவர்களும் பெரியோரை அடுத்துக் காத்தே
அவரடிக்கே பணிந்துமிக அன்பு செய்தே

ஆவலுடன் பன்னிரண்டு வருடங் காத்தும்
அப்போது பக்குவத்தை அறச்சோ தித்துத்

தேவர்முதல் மூவர்களுந் தேடிக் காணாத
திருவடியும் முடிநடுவுந் தெரிசிக் கத்தான்

நாவதனா லுபதேசஞ் செய்வார் நெஞ்சே!
நல்லறிவால் வெகு பூசை நவின்ற தாமே.

மனம் கேட்டல்: ஆனால் புண்ணியம் மிகுந்தது, சிவாசார பத்தி,நேயம், சிவார்ச்சனை வெகுகாலஞ் செய்து, பின்னே நல்லறிவு பிரகாசித்திருக்கும் பேர்களுக்குப் பெரியவர்கள் தரிசனம் கிட்டும். அப்பேர்ப்பட்டவர்கள் ஆசான் திருவுளத்துப் பாங்குக் கொத்து நடந்து பரகதியடைவார்கள் என்று சொன்னதும் அறியலானேன் ஆகிலும் பெரியவர்களை அடுத்து; அவர்கள் திருவுளத்துக்குப் பாங்குபோல நடந்து, தீக்ஷையும் பெற்றுக்கொண்டு, சாத்திரத்திலுள்ள பூட்டை அனுபவத்துக்கும் ஒப்பும்படி தெரியவுங் கேள்விப்பட்டுக் கொண்டு ஆசாரியாரைக் கவனியாமல், மதங்கொண்டு ஆசாரியர் திருவடி சூட்ட மகிழ்ச்சியில்லாமலும், பூரண தீக்ஷையாகாமலும், தட்டிப் போகிறதுண்டோ? என்று மனங் கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

அடியருக்குத் தொண்டாவ தருமை நெஞ்சே!
அவரவர்க்கு விட்டகுறை அடுத்த காலம்

பிடியாம லிருப்பாரோ? தொட்டுக் கொள்வார்
பேதைமைக ளாலுகப் பிணக்கு வந்து

குடியாகும் அதனாலே நழுவிப் போவார்
குற்றமறச் சற்குருவைக் குறிக்கச் சொல்லும்

விடியாத காலத்தி லிருளே யாகும்
விடிந்த பின்பு கண்ணுக்கு வெளிச்ச மாமே.

மனம் கேட்டல்: நீ உலக விபரீதம் வருகிறதாகவும் அதனாலே ஆசானை விட்டு நழுவும்போது ஆசானைக் குற்றமாகக் குறித்துக்கொண்டு போகிறதாகவும் சொன்னாய் அறியலானேன். ஆகிலும் இவ்வளவிலே நழுவினாலும் இன்னொரு தேகம் புண்ணியம் மிகுந்த மானிடமாயெடுத்து சடுதியிலே விட்டகுறை முடியும்படி ஞானி சாத்திரியார் கிருபையடைந்து முத்தியடைவார்களோ? என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

இவ்வளவுந் தொட்டேகும் போது மீண்டும்
இகபோக விபரீதம் வந்தா லுந்தான்

அவ்வளவுந் தான்குருவின் திருவுளத்துக்
கன்புதவ றாமலே அகன்றா னாகில்

தெவ்வளவாய் விட்டகுறை தாக்குஞ் சேர்க்குந்
தேசிகனைக் குற்றமென்னில் தெளிந்து மேலாம்

நல்வளவா யிழிந்துவிடும் பின்னு மந்த
ஞானகுருத் துரோகமுற்று நரகெய் வோர.

மனம் கேட்டல்: ஆனால் ஞானாசாரியரிடத்தில் ஒத்தாற்போலிருந்து தெரிந்துகொண்டு ஞானகுருத் துரோகி தானே தான் தெளிந்தவன் போலப் பேசுகிறானே: உலகத்தார்களுஞ் சில பேர்கள் அதைக் கேட்டு மயங்கி ஒத்து வணங்குகிறார்களே! அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன இலாபங் கிடைக்கும்? என்று மனங் கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

புலித்தோலைப் பசுவுரித்துப் போர்த்துக் கொண்டு
புலியென்றாற் புலியாமோ? இன்னங் கேளாய்

பலிப்பாகப் பெண்போலப் புருடன் வேடம்
பகட்டினால் அவனுருவம்பாவை யாமோ?

சலிப்பான நரகத்தில் வீழு மாண்பர்
சற்குருவின் றன்னிடத்திற் கற்றுக் கொண்டு

நலிப்பாகப் புலிப்பாயு மியல்பு போல
நானிலத்தோர் வணங்கினதா லீன மாச்சே.

மனம் கேட்டல்: ஆனால் அவன்றானுங் குருத் துரோகியானபடியினாலே எவ்வளவு தெளிவாய்ப் பேசினாலும் முத்தி விலக்கனென்பது சரியே. அவன் நிச்சயவானென்று நேசிக்கறவர்கட்கு என்ன இலாபம்? என்று மனம் கேட்க, அறிவு கூறுகின்றது;

அறிவு கூறுதல்:

மரப்பசுவின் முலையதனிற் பாலுண் டாமோ?
மலடிக்குச் சுதனுடைய மகிழ்ச்சி யுண்டோ?

துரத்தறியாத் தண்ணீர்ப்பாம் பதன்த லையில்
துலங்குமணி யிரத்தினமுந் தோன்று மோசொல்

பரத்தினுடை நிலையதனைக் குருமுன் பாகப்
பதியாத மூடனையே பணிந்த தாலே

விருத்தமே யல்லாம லுதவி செய்ய
மெய்ஞ்ஞான முண்டாமோ? விளம்பு நெஞ்சே!

மனம் கேட்டல்: ஆனால், அறியலானேன், பெண்டிர்க்கு ஞானம் யாராதென்றும் புருடர்க்கு மாத்திரம் ஞானமுண்டென்றும் கூறுதல் எதனாலே? அது விளங்குமாறு சொல்க. என்று மனம் கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

அஞ்சுகின்ற பெண்ணென்றும் ஆணென் றுந்தான்
அஞ்சுபஞ்ச பூதத்திற் பிரிந்த துண்டோ?

நெஞ்சிலுள்ள வஞ்சகங்கள் வேறு முண்டோ?
நிறம்வேறோ குணம் வேறோ. நேசம் வேறோ?

மிஞ்சுகின்ற உயிர் தானாண் பெண்ணென் றுண்டோ?
மெய்கண்ட நூலதிலே பிரித்த துண்டோ?

சஞ்சலத்தாற் சொற்கேட்டு மயங்கி டாதே.
சங்கையற முன்னூலைச் சார்ந்து பாரே.

மனம் கேட்டல்: ஆனால் பேதைமையென்பது மாதர்க்கு அணிகலம் என்று ஔவையார் கூறியதென்கொல்? என்று மனம் வினவ அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவொன் றேயாம்;
ஆனாலும் பேதைகுணம் பெண்ணுக் குண்டு

வீணுக்கே எடுத்தசன்மம் அனந்தங் கோடி
விவேகமுத்தி யடைந்தவர்கள் அவரு ளுண்டு

ஊணுக்குத் தேடியுண்டே உறங்கிச் செத்த
உலுத்தருண்டு புருடரி லேயனந்தங் கோடி:

தாணுக்கே ஏகசரா சரந்தாம் நெஞ்சே!
சற்குருவுக் கப்படியே சார்ந்து பாரே.

மனம் கேட்டல்: ஆனால் அதுவுமறியலானேன் நான் கேட்ட சங்கைக்கிச் சரியென்னும்படி சமாதானங் கூறி நன்றாக அருமையாய்த் தெளிவுடனே யார் சொல்லப் போகிறார்கள்? இனிமேல் நடக்க வேண்டுவதென்ன? என்று குதூகலங்கொண்டு மனம் கேட்க, அறிவு கூறுகின்றது;

அறிவு கூறுதல்:

இன்னமின்னம் பிறவிதனில் பிறத்தல் நன்றோ?
இனிமேலும் பிறவாம லிருக்கை நன்றோ?

உன்னுகின்ற நினைவேது, கருத்தங் கேதோ?
ஓதுகின்ற வாக்கேது செவிதா னேது?

பன்னுகின்ற கலையேது பண்தா னெங்கே?
பாடுகின்ற சத்தந்தான் தொனித்த தெங்கே?

முன்னிலையாய் ஞானகுரு மொழிந்த தேது!
முத்திநெறி யாய் மனமே முனைந்து பாரே.

மனம் கேட்டல்: ஆனால் எவ்விதத்திலேயும் பார்க்குமளவில் இந்தக் குடும்பச் சேற்றில் உழைத்துக் கொள்ளுகிறதும் அதற்கொத்தாசையாய் உலகத்தார் சொல்லை விசுவாசமாய் ஒத்துக்கொள்ளுகிறதும் துக்கமேயொழிய, உள்ளபடி குடும்பத்தார் என் மேல் பிரியமாயிருக்கிறதேயில்லை. எப்படியெனில் நான் சில நாள் சம்பாதனையில்லாமலும் தேக சவுக்கியமில்லாமலும்  ரோகஸ்தனாய் இருக்கும்போது சர்வத்திர பேர்களும் என்மேல் மனம் சலிப்புற்றிருந்தது கண்டேன்; ஏவல் பணிவிடையில் வெறுப்பானதுங் கண்டேன்; சாலவும் பிரஞ்ஞை தப்பியிருக்கும்போது பெண்டு பிள்ளைகளை எதிர்வீட்டார் ஆஸ்தியைக் கேட்கச் சொன்னதுங் கண்டேன்; அவரவர்களழும்போது ஒப்பாரி சொல்லி அழுகிற வயணமுங் கண்டேன்; எல்லாம் பொருளை இச்சித்திருப்பதென்பதையும் அறியலானேன்; எனக்கு உரிமையான பேர் ஒருவரையும் காணேன்; அல்லது சில நாளுழைத்து மக்கள் முதலாகிய பேர் சம்பாதிக்கச் சாமர்த்தியம் வருந்தனையும் உழைத்துப் போட்டு அதன் பின் சும்மா இருப்போமென்றாலும் என்னிச்சைப்படி நடக்கமாட்டாது. அதுவுமறியலானேன். ஆகையால் சத்துருவாகிய இந்தப் பேய்க் கூட்டங்களை விட்டுக் காயம் தளராமுன் சிவன்றிருவடி அடைவதற்கு நீ சொன்னபடி சத்தியமாய் நடப்பேன்; என்று மனஞ் சொல்ல அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்        அறுசீர் விருத்தம்:

பொன்னின் நெஞ்சமே! சொற்படி கேட்கவும் பொருந்தியே நன்றாக
இன்ன மின்னமும் பேதைமை கொள்வையே? இல்லறந் தனைவிட்டுத்
தன்னைத் தானறி யாமலுஞ் சிவனடி சார்வது மிழந்தக்கால்
பின்னம் பின்னமாய் இரண்டுங்கெட்டானென்றே பேதைமை கொள்வாயோ?

மனம் கேட்டல்: இதனால் நான் தெளிந்த விதத்திலே பேதைமை என்பதிருக்குமிடங் காணேன் சர்வபணியுமறுத்து விட்டேன். ஆனால் தெளிவாய்க் கேட்பதற்குத் தெரியும்படி செய்யுமுதலி வேண்டும் என்று மனங் கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

சுத்த நெஞ்சமே! சற்குரு மலரடி தொழவகை கேட்பாயேல்
பத்த னாகியே மானாபி மானமும் பற்றற விட்டேநீ
குற்ற மேதுமற் றெவ்விடங் காண்கினுங் கூறுடற் களிப்புற்றுப்
பற்று மாகியே திருவடி கதியெனப் பண்புடன் பணிவாயே.

மனம் கேட்டல்: ஆனால் மானாபிமானம் விட்டு, குருவை எவ்விடங் காண்கினும் மனோவாக்குக் காயம் ஒத்து அன்பு களிகூர்ந்து எண்சாண் தேகத்தை இரு கையாக்கி, நன்மலரை அவர் திருவடிக்குச் சார்த்தி தீர்க்க தண்டம் பண்ணச் சொன்னாய்; அதிற் சந்தேகமில்லை; இவ்வளவும் இழந்து நான் இதற்கு அஞ்சுவேனோ? அப்படியே செய்வேன். ஆனால் அதிகமாக உலகத்தார் இகழத் தக்கவராகக் குரு மிகுந்த அசங்கிய ரூபமாயிருந்தால் நான்  பணியுமளவிலே நிந்திப்பார்களே! அல்லது அவ்வாறிருக்கினும் அப்படித்தான் செய்தல் முறைமையோ? என்று மனங் கேட்க, அறிய கூறுகின்றது;



அறிவு கூறுதல்:            எண்சீர் விருத்தம்:

குவலயத்தோர் சொல்கின்ற கேள்வி யாலே
கூசுகின்ற நெஞ்சமே கூறக் கேளாய்:

அவலமாங் கடலுக்கு ளாழு மாண்பர்
அபிமானம் வந்துன்னை அண்டிற் றானால்

சவலையாய் நழுவிடுவாய் முத்தி மார்க்கந்
தான்கிடைப்ப தருமையதைச் சார்ந்தே நீதான்

சிவனடியை யடைவதற்குச் சற்கு ருத்தாள்
திருவுளத்துக் கொத்தவழி செல்லு வாயே.

மனம் கேட்டல்: ஆனால் சற்குருவின் திருவடியில் சரணஞ் செய்வதற்கு மார்க்கமுண்டோ? என்று மனங் கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

ஓம்நமசி வாயவென்ற அட்ச ரத்தை
உச்சிகண் புருவம்வாய் மூக்கு நாசி

தாமதங்க ளில்லாமல் மூக்கா லுந்தான்
சற்குருவின் றிருவடியில் தான ழுத்தி

நேமமா யிப்படிஞ் செய்வதுந்தான்
நேரான சரணத்தின் தீட்சை யாகும்.

ஆம்பின்னே யென்றெண்ணி யிருந்தி டாதே
ஐயனுள்ளங் களித்திடவே யாசை வைப்பாய்.

மனம் கேட்டல்: ஆனால் சரண தீட்சையுமறிந்தேன்; செய்யவுந் துணிந்தேன்; கருத்தில் செய்யும்படி குறித்தால் போதாதோ? காயத்தினாலும் மிகுதியாய் வணங்கிக்கொள்ள வேண்டுமோ? என்று மனங் கேட்க, அறிவு கூறுகின்றது;

அறிவு கூறுதல்:

காயமன வாக்கினால் அடைந்த கன்மம்
காயமன வாக்கினாற் கடக்க வேண்டும்.

காயமன வாக்கினா லொன்றொ ளித்தால்
கடமெடுக்க ஏதுவாய் கண்டு பாராய்:

நேயமுள ஐம்புலனாற் சூழ்ந்த துன்பம்
நீக்குதற்கு முறையிதுதான் நிலைத்துப் பார்நீ:

மாயவித்தை யாமென்று நழு விடாதே
வஞ்சகத்தை நீவிட்டு வணங்கு வாயே.

மனம் கேட்டல்: ஆனால் அப்படியே செய்கிறேன் இன்னஞ் சற்குரு திருவுளத்துக்குப் பாங்காய் நடக்கும் மார்க்கங்கள் சொல்லுக என்று மனங் கேட்க, அறிவு கூறுகின்றது:

அறிவு கூறுதல்:

வஞ்சனைபொய் சூதுகப டங்கள் நீக்கி
மானவபி மானமுதற் பெருமை நீக்கி

அஞ்சுகின்ற கோபமாங் காரம் நீக்கி
ஆசையதைப் பாதியடி யோடே நீக்கித்

துஞ்சவே சோதித்துப் பார்த்தா லுந்தான்
துணிவாகித் திருவடியே கதியென் றெண்ணித்

தஞ்சமென்றே ஐயனது நிழல்போற் காத்துச்
சரணத்தி னேவல்செய்து தழைத்தி டாயே.

மனம் கேட்டல்: அப்படியே தொண்டு செய்கிறதற்கும் ஆளானேன்; எத்தொழிலுமில்லாமல் சர்வ ஆசையுமிழந்து, நிரந்தரமாய் இருக்கிற பெரியவர்களிடத்தில் தொண்டுபட்டிருந்தால், வயிற்றுப்பசிக்கு அன்னம் வேண்டியிருக்குமே! அதற்கென்ன வயணம்? என்று மனம் கேட்க, அறிவு கூறுகின்றது:

அறிவு கூறுதல்:         அறுசீர் விருத்தம்:

இச்சையுடன் எத்தனை நாள் இவ்வுலகில் வாழ்ந்தாலும் இடரே சொல்வார்
நச்சைவரு மிதனாலே தெளிவுற்ற மனமென்று நல்லோர் சொல்வார்:
கச்சடியை விட்டுவிடு; முப்பொருளை ஓர் பொருளாய்த் தனித்துப் பாராய்;
பிச்சையென்ன வீசாரமென்ன? தலைமேலே சுமந்துவரப் பெருமா னுண்டே

மனம் கேட்டல்:  அப்படியிருக்கச் சிவ சொரூபத்தைப் பெற்றிருக்கின்ற பேர்கள் ஆசாரத்துக்காகப் பல விதங்களான தொழில் செய்கிறதும் சித்துகள் வித்தைகள் செய்கிறதும் , பொய் சொல்லுகிறதும், சிவ சின்ன வேடத்தைக் கபடமாகத்
தரித்துக் கொள்ளுகிறதும் என்ன? என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

ஆனைமுதல் எறும்புகடைக் கமுதளித்துக் காக்குமொரு வரனேயல் லால்
சேனைவித மாகவிந்த மானிடர்கள் செய்வதெல்லாஞ் செகத்தின் மாயை:
ஊனைமுதல் சுமந்தவரார்? உண்டபின்பு களித்துவரார்? உற்றுப் பார்க்கில்
தேனையுண்டு ருசிகண்ட திருடனைத்தான் கண்டவர்க்குத் தெரியுந் தானே

மனம் கேட்டல்: ஆனால் அறியலானேன்; பெரியவர்களிடத்தில் பக்தி வைராக்கியத்துடனே நிமிடநேரமாகிலும் பிரியாமல் சரணடைந்து ஏவலுஞ் செய்து கொண்டிருக்கிறவர்களுக்கு எந்தப் பதவி கிட்டும்? என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது;

அறிவு கூறுதல்:

ஆசான் கிருபை மிகுந்ததனால் அந்த வுடல்போய் மறுவுடலில்
கூசா திருந்துந் தன்னண்டைக் குறைவொன் றில்லா நிறைவாகத்
தேசா நேசர் சூழ்ந்திருக்கத் திருவோலக்கஞ் சேவிக்க
ஈசா வென்றே மறைபோற்ற எய்தும் பரம பதம் நெஞ்சே!

மனம் கேட்டல்: ஆனால் நிழல் போலப் பிரியாமல் சரணத்து ஏலலுஞ் சலியாமற் செய்கிறேன்; ஐயோ எத்தனை பிறவியோ எடுத்து வந்து நொந்திருக்கிற நான், இன்னுமொரு பிறவி பிறப்பேனோ! முழுதும் பிறவாமலிருக்கிற மார்க்கம் உண்டோ? அதைச் சொல்லுக என்று மனங்கேட்க அறிவு கூறுகின்றது:

அறிவுகூறுதல்:            எண்சீர் விருத்தம்:

உடல்பொருளும் ஆவியுஞ்சற் குருநா தற்கே
உண்மையுடன் உதகத்தால் தாரை வார்த்து

நடமாடு மிம் மூன்று மெனவென் றெண்ணி
நாயகனாஞ் சீவனையே யடிமை யாக்கு:

திடவாக்குத் தவறாமல் நிலைத்து நெஞ்சே!
தேகந்தா னொழியளவும் உதவி செய்தால்

படமாடும் அரவத்தை அணிந்த ஈசன்
பதம்பெறுவாய் உள்ளபடி பகர்ந்திட்டேனே.

மனம் கேட்டல்: ஆனால் நல்லதாயிற்று! இது வரைக்கும் நானே உடல் பொருள் ஆவி மூன்றுக்கு முடையவனென்று நீ சொன்னபடி கேட்டுச் சருவ சங்கையுமிழந்து நிருவிகாரியாய் என்ன கதியென்று கேட்குமளவிலே சீவனுண்டென்றும் சீவனுக்கு உடல் பொருளாவி சொந்தமென்றும், அவற்றைக் குருவுக்குத் தத்தஞ் செய்து சீவனை அடிமையாக்கி ஆசான் சொற்படி நடந்து சீவேசனாகிறதாய்ச் சொன்னாய் மகாசந்தோஷமாயிற்று! அப்படியே சீடன் முத்தியடைகிறதனால், நானித்தனை பிரயாசைப்பட வேண்டியதென்ன? நான் நீ யார்? இவ்வளவு நான் சந்தேகமற்றுத் தெளிவு கொண்ட இலாபமென்னவாகப் போகிறது? என்று கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

சீவனே நீயாகும்: அறிவும் நீயாம்:
சிவன்றானே நீயாகும்; பரமும் நீயாம்:

தாவுகின்ற செயலுடனே மனமென் றுன்னைச்
சாற்றியதோர் நாமமாஞ் சர்வ சங்கை.

மேவவே மொழிகிறது முனதால் நெஞ்சே!
மெல்லமெல்லச் சொற்படியே மேவி னக்கால்

நாவதனிற் பிரிக்கின்ற பேத மற்று
நாம் சிவமாய் வாழலாம் நாடிப் பாரே.

மனம் கேட்டால்: ஆனால் அறியலானேன் இனி உடல் பொருளாவி மூன்றும் குருவுக்குத் தத்தம் பண்ணிச் சொன்னாய்; இந்த மூன்றையுந் தெரியப்படுத்துக; என்று மனம் கேட்க அறிவு கூறுகின்றது:

அறிவு கூறுதல்:

உடலென்றாற் சடாதார உடலே யாகும்;
உயிரான் பிராணனே யாவி யாகும்:

திடமாக இரண்டையுந்தா னெனதென் றுற்ற
சீவனே சிற்றம்பலப் பொருள தாகும்;

அடைவாக இம்மூன்றுங் கொடுத்துத் தன்னை
அடிமையெனச் சத்தியமா யிருந்தால் நெஞ்சே!

இடமான கதிபெறவே உபதேசிப்பார்:
இப்படியே குருபதத்தில் இட்டம் வையே.

மனம் கேட்டல்: அப்படியே செய்யலுற்றேன்: இனித் தீட்சையென்பதும் நூலென்பதும், குருசொல்லென்பதும் சாதகமென்பதும் முத்தி வீடு என்பதும் தெரியச்சொல்லுக: என்று மனம் கேட்க, அறிவு கூறுகின்றது:

அறிவு கூறுதல்:

தீக்கையது நூலாகும்: நூல்வி ளக்காம்:
திறமான சற்குருசொல் உபயமாகும்:

தாக்குகின்ற சாதகந்தா னேணியாகும்:
சபையென்ற வெளிதானே வீட தாகும்:

மார்க்கமென்ற திதுநெஞ்சே! முன்னோர் கூட
வாழ்ந்தவரும் இப்படியே மருவிப் பாராய்:

நோக்கையிலே இதிலொன்று நழுவிற் றானால்
நொந்துநொந்து பிறவினியில் நுழைக்கும் பாரே.

மனம் கேட்டல்: எல்லாம் உள்ளபடியென்றும் அறிந்து கொண்டேன். இனிமேல் சற்குருவினுடைய திருவுளம் மகிழ்ந்து நான் கடைத்தேறும் பொருட்டு உபதேஞ் செய்யும்படி சொல்லுக. என்று மனங்கேட்க, அறிவு கூறுகின்றது.

அறிவு கூறுதல்:

அப்படியே செய்விப்போம் அழகு நெஞ்சே!
ஆசான்றன் திருவடிக்கே அன்ப தாக

எப்படியா கிலுமுன்னை மாயை கிட்டி
இதம்போலாம் சென்னமதற் கிடங்கொ டாதே

(**)டிபோல் வந்ததொரு செனனம் நீங்கிச்
சிவானந்த போதகமாய்த் தெளிவாய் நீயும்:

மைப்படியுங் கண்ணியங்கன் குருவாய் வந்து
வாதனையைத் தீர்த்திடுவான் வணங்கு வாயே.

பொதுக் கவனிப்பு: இது வரையிலுஞ் சீவனைப் பின்னிட்டு மனத்தை முன்னிட்டு, சற்குருவைப் பின்னிட்டு அறிவு முன்னிட்டுக் கொண்டு மனத்தினுடைய பணியறுத்துச் சற்குரு கடாட்சம் பெற்றுக் கொள்ளும் வகை கூறினது. இனி மனத்தைப் பின்னிட்டு ஜீவனை முன்னிட்டு ஜீவனுக்குள் மனமொடுங்கி முத்தியடையத் தக்கதாக அறிவைச் சிவனுக்குப் போதித்து நீ நானென்று இரண்டில்லாத பரிபூரணமாய் ஆக்கும் பொருட்டுச் சீவனுக்குக் குருசிவானந்தம் போதிக்கும் மார்க்கம் கூறுகின்றது.

ஜீவன் சொல்லுதல்:        எண்சீர் விருத்தம்:

ஆதியே !  அந்தமே! அருமையான
அருட்க டலே! ஐயனே! அகண்ட முற்ற

சோதியே! சொரூபமே! சுகத்தைக் காட்டும்
சுத்தனே! சித்தனே! சுயம்பிற் பொங்கும்

பாதியே! பரமனே! பாரின் மீதே
பரம்போகச் சுந்தரமா யெழுந்து வந்த

நீதியே! என்னுடைய பிறவி நீக்கு
நிச்சயமே திருவடிக்குச் சரணென் றேனே.

குரு சொல்லுதல்:

தீக்கைமுறை யாகவே சரணஞ் செய்த
செல்வனே! ஞானமென்ற தீரம் பெற்றுப்

பாக்கியமாய் மெய்ப்பொருளைக் கொள்ள வேண்டிப்
பாரினிலே வெகுபேர்கள் பதைத்து வந்தார்

பாக்கியத்தாற் சிதறினார் சிலராம் பேர்கள்:
பாழ்மனத்தாற் சிதறினார் சங்கை யுற்றே

சங்கையது விட்டாற்போல் தொண்டு பட்டுச்
சாத்திரத்தின் பூட்டுகளைத் தெரிந்து கொண்டு

மங்களமாய்த் தீட்சைதனைப் பெற்று நன்றாய்
வையகத்தின் சுழலினிலே மயங்கிச் சென்று

பங்கமாய் அபிமானத் தொழிலே செய்து
பதுங்கினார் குருமுகத்துக் காகா மற்றான்

திங்களனி சடையார்தம் பாதஞ் சேராத்
தீவினையில் மெலிந்திட்டார் சிலராம் பேர்கள்

அப்படியே நீநழுவித் தடத்தை விட்டே
அம்பலத்திற் கேகாமற் காலன் பாசந்

தப்பவகை யறியாமற் பிறவி தன்னிற்
சாருவையோ நிலைகொண்டு சாதிப் பாயோ?

ஒப்பவே யுடற்பொருளுமாவி மூன்றும்
உதகத்தால் தாரைவிட்டே யுனைநா னென்று

செப்பவுந்தா னாவிழந்தே அடிமை யாகிச்
சிந்தையற்றுச் சிவமாகி வாழ்க நீயே.

ஜீவன் சொல்லுதல்:

பாக்கியங்கள் பெறவேண்டிக் குருவ டிக்குப்
பதறியே வந்ததொரு பாரி லுள்ளோர்

வாக்கினால் மனத்தாலுஞ் சாத கத்தின்
வருத்தத்தாற் சிதறினபே ராரா ரையா!

நோக்கினதிற் றவறாமற் பிடித்து முத்தி
நுண்ணறிவாற் பூரணத்தை அடைந்த தாரோ?

தாக்கிய தோர் மைந்தர்களை யறியச் சொல்லும்
தயாபரனே குருமூர்த்தி சொல்வாய் நாதா!

குரு சொல்லுதல்:

எத்தனையோ மைந்தர்களைப் பெற்றே னப்பா!
எடுத்துரைப்பேன் மதலையே இன்பமாகப்

பத்திவை ராக்கியமும் நழுவி டாமல்
பாரிலுள்ளோர் தங்களுக்குச் சொந்த மாக

முத்திபெற மனக்கண்ணும் பிரகா சித்து
மூதறிவால் தத்துவத்தை முழுது மாளச்

சத்துசித்தா னந்தமுமாய்ப் பூரணத்தைச்
சார்ந்திட்டான் குழந்தையென்ற தங்கந் தானே.

ஆமென்றே வந்தவர்க ளின்ன முண்டிங்
கவரவர்க்குத் தீட்சைவைத்தோம் அன்ப தாக

ஓமென்ற முத்திநெறிக் கொவ்வு வாரோ!
ஓதுங்கியே பதுங்கியே யோடு வாரோ!

நாமென்ற அகங்கொண்டு நழுவிப் போறார்
நாதனையே தூடித்து நலம்பெ றாமல்

போமென்றே தள்ளவில்லை அவர்கள் தாமே
பொல்லாங்கைக் குறித்தல்லலோ போய்விட்டாரே.

நிலைக்கவென்று வந்தவரில் தவறிப் போன
நெஞ்சினரைச் சொல்லக்கேள் நினைவாய் நீயும்:

முலைகருதிக் கைப்பிடித்துப் பாலுண் ணாமல்
மூடத்தால் நானென்னு மகந்தை யுற்றுக்

கலைகருதி நில்லாமல் சாதிக் காமல்
கற்றபொருள் போதுமென்றே பெருமை கொண்டு

கொலைகளவாம் வஞ்சகத்தை விடாமற் றானே
குலைந்திடான் வைத்யலிங்கன் குரூரன் றானே.

ஜீவன் சொல்லுதல்:

அப்பனே! மைந்தர்கள் தம் திறத்தைக் கேட்டேன்
அறிந்திட்டேன் முத்திபெற்றோர்க் கடியேன்றானே.

செப்பமாஞ் சரணங்கள் கோடி செய்தேன்:
சிதறினவர் பால்மனமுஞ் செல்ல ஒட்டேன்:

கொப்பெனவே எனையாள இங்கு வந்த
கொற்றவனே! உனைப்போலத் துலக்கங் காணேன்:

இப்பொழுதே யடிமை கொண்டு காக்க வேண்டி
இரங்கியே யருள்புரிவாய் என்றன் கோவே!

அறிவாள னாகியே பணிய றுத்தே
அச்சங்க ளெல்லாந்தான் அறுத்துப் போட்டுக்

குறியாள னாகவே துணிந்து வந்த
கொடும்பாவி ஏனையாளக் கூச்ச மென்னோ?

தறியாள னாகிநின்ற வுலகத் தேதான்
சங்கையது வந்தாலுந் தாள மாட்டேன்:

முறியாள வந்தகுரு நாதா! உன்றன்
முகிழ்மலர்த்தாள் கதியென்று முனைந்திட் டேனே.

குரு சொல்லுதல்:

நிலமதனைச் சலத்தினாற் சுத்தி செய்து
நிராமயமாய்க் கணபதியை நாட்டி வைத்துப்

பலமுடைய சோதிமலர் சார்த்தி மிக்க
பரிவான புகைதூபங் காட்டிப் பின்னுந்

தலமுடைய வெளியதனை நிவேத னஞ்செய்
சரணஞ்செய் என்மகனே! உபதே சிப்போம்.

பிலமுடனே இடம்வலமாய்ச் சுற்றி வந்து
பெருவிரலைப் பற்றிக்கொள் பேரின் பத்தே.

அன்புடனே யுடல்பொருளும் ஆவி மூன்றும்
அறுதியாய் அளித்துவிட்டு நீதா னையா!

தென்புடனே அடிமையெனச் சத்தி யஞ்செய்:
கிதறாமல் நில்லப்பா! தீட்சை வைப்போம்.

பின்புன்றன் செவிதானே யோனி யாகப்
பேசுமென்ற னாவுதா னிலிங்க மாச்சே:

இன்பமுடன் அணுபோகத் திருக்க வென்றே
இருசெவியி லுபதேச மேற்று வேனே.

ஜீவன் சொல்லுதல்:

அப்படியே பஞ்சசத்தி பூசை செய்தேன்:
அழகாகச் சரணம்பிர காரஞ் செய்தேன்:

செப்பினதோர் பெருவிரலைப் பற்றிக் கொண்டேன்:
தேகமுடன் பொருளாவி தத்தந் தந்தேன்:

ஒப்பதுவா யானுமே யடிமை யானேன்:
உலமுழுகத் தடைவரினும் அசையா நிற்பேன்:

தற்பரனே! தீட்சைசெய்வாய் கருணை வைத்துச்
சற்குருவே! திருவடியிற் சரணென் றேனே.

குரு சொல்லுதல்:        அறுசீர் விருத்தம்:

ஞான மென்பதில் நால்வகை யுண்டவை நாமுரைத் திடக்கேளாய்:
தான முற்றனர் சரியையுங் கிரியையுஞ் சாருமே சிவயோகம்
மோன முற்றமெய்ஞ் ஞானமே நான்கதா முடிவதைப் பெறுவாயே.
ஈன மற்றவென் மைந்தனே! உன்னுடை இன்பமே துரைப்பாயே.

ஜீவன் சொல்லுதல்:

தேசிகா! இந்த நால்வகை யென்றவை தெரியவும் உரைத் திட்டால்
மோச மாயின்ப முற்றிருப் பதுதனை மொழிந்திடுகெனக் கேட்பேன்:

ஆசை யற்றதா யிருந்திடி லுழைத்திட அதிசயங் கொள்வேனான்:
நேச முற்றதிற் பத்தியே யுரைத்திடில் நிலைத்திடு மையாவே!

குரு சொல்லுதல்:

அங்க சுத்தியும் ஆலயந் தொழுவது சஞ்ரியையென் றறைவார்கள்.
மங்க ளத்துடன் அட்டமா சித்தியும் வரையுஞ்சக் கரபூசை
பொங்க மானது கிரியையாம்: வாயுவைப் புரண்டிடா திழுத்திட்டுத்
தங்கி நின்றதோர் யோகமென் றிதனையே சாற்றிடும் மறைதானே
ஞான மேதெனக் கேட்டிடின் தத்துவம் நானென வுணர்ந்திந்த
ஊனை நானென வுரைத்திதை யகன்றுபின்னொழிவறத் தனைக் கண்டு
மானம் வெட்கமுந் துக்கமுங் கவலையும் வஞ்சனை தான்போக்கி
ஈன மற்றுநான் சிவமெனத் துணிந்தது மிழந்தது முடிவாமே.

ஜீவன் கேட்கக் குரு சொல்லுதல்:

இந்த நாளினில் இன்பமுற் றிருக்கையி லிச்சடம் விழுந்திட்டால்
தொந்த மானதோர் பலனென்ன? தெரிந்திடச் சொல்லுவாய் குருமூர்த்தி

சொந்த மாகவே கேள்மக னே! மதன் சுகமதை யறிவிப்போம்:
தந்த னங்களாய் விடாமலே கேட்பது சரியென் மகிழ்ந்தேனே.

சரியையென்பது குறைவறச் செய்துமே தன்கடம் விழுந்திட்டால்
கிரியை செய்யவே எடுத்திடுங் கடமது கிரியையும் முடிந்தேகில்

உரிசை யாகிய யோகமே செய்யவு முடலெடுத் துழைக்குங்காண்:
பரிகொள் யோகமு முற்றவு முடிந்துடற் பாரினி லுருவாமே.

ஞான மேபெற எடுத்திடும் அவ்வுடல் நழுவிடா துரைத்திட்டால்
ஈனமாகிய சென்னமும் போக்கிடும் ஈசனே தானாகி

வான முற்றதோர் சச்சிதா னந்தமாய் வாக்குரைக் கெட்டாத
மோனமுற்றுதான் எங்குமாய் நிறைந்தது முத்தியென் றுணர்வாயே.

ஜீவன் சொல்லுதல்:

அப்பனே! எனை அடிமையாய்க் கொண்டவோர் அழகுள்ள குருமூர்த்தி
தப்ப வேகதி வேறெனக் கில்லைநின் றாளது கதியென்றே
ஒப்ப வேசிவஞானமும் உணர்ந்திடி லுகந்ததி லூன்றிக் கொண்
டிப்ப வேபர வீடதி லேகுவன் ஈசனே! அருள்வாயே.

குரு சொல்லுதல்:

தத்துவ மேயுடல் தானெனு மானது தன்னை யறிந்திடு நீ:
சித்தது வாகிப் பிராணனி ரானதில் திரண்டதைக் கண்டிடுநீ:

கற்றுமே காணாக் கண்மணி யானதைக் கண்டு தெளிந்திடுநீ:
முற்று சிவானந்த போதக மானது முத்தியுமிதுதானே.

அறிவுபோ தகமென்ற நூலைப் பாராய்
அதற்குமுன்னே உடலறியும் விளக்கம் பாராய்:

பிறிவின்றி மேவின்றி மறைப்பு மின்றிப்
பேரின்ப அமுதமழை பெய்த நூல்தான்

நெறிகொண்ட அந்நூலை நினைந்து பாராய்:
நிலைக்கவே அப்படியே தீட்சை வைப்போம்:

பொறிவிட்டுச் சபைபுகுவாய் புக்கோ வில்லை:
பெரும்பொருளைக் கைக்கொண்டு பிழைத்துக் கொள்ளே.

ஜீவன் சொல்லுதல்:

அப்படியே போதித்த முத்தி பெற்றேன்:
அரியயனுங் காணாத வடிவுங் கண்டேன்:

தப்பியே யிளைக்காமற் பிழைத்துக் கொண்டேன்:
சஞ்சலத்தை இழந்துநான் சுகத்தைப் பெற்றேன்:

ஒப்புவமை சொல்லவொரு வரையுங் காணேன்:
உனைப்போலே தெளிவுரைக்குக் குருவுங் காணேன்:

செப்பவே நாவிழந்தேன் பரமா னந்தத்
தீவிதிலே சேர்ந்திட்டேன் வாழ்ந்திட் டேனே.

ஞானியென்ற பெயர்களையே கண்டு கொள்ள
நல்லதொரு கண்பெற்றேன்: பேச வென்றால்

ஈனமறச் சொற்கற்றேன்: சிரவ ணத்தால்:
ஏகாந்த பரகவனம் எய்த லானேன்:

மானமற்ற அடியருடனாசை கொண்டேன்:
மருவுமுடல் குருவுக்கே வணங்கிப் பெற்றேன்:

தானமுற்றேன் சிவானந்தந் தனிலே நின்றேன்:
சச்சிதா னந்தமென்றே தழைத்திட் டேனே.

வாழ்வுமுதற் சம்பத்தை மதித்தி டாமல்
மலைமேலே ஏறினதோர் பறவை யானேன்;

தாழ்வுகளாய் உலகோர் சொல் நிந்தை யெல்லாம்
சகாயமென்றே எண்ணிச்சந் தோட மானேன்.

வீழ்வுதரு நரகிலுள்ள மாண்பர்க் கெல்லாம்
விழாம லேமனிதர் மேலு மானேன்:

ஏழுலகும் மேலேழும் நானே யானேன்:
ஏகாந்தத் தீவினிலே இறங்கி னேனே.

குரு சொல்லுதல்:

மைந்தனே! உனைப்போல ஓடி மெள்ள
வாதனையே தீர்ந்துமதி மயங்கி டாமல்

பந்தமறுத் தேபின்பு குருவைத் தேடிப்
பரமாகி வாழ்ந்தவர்க ளுண்டோ அப்பா!

சிந்தையற்ற பெரியோரை வணங்கிக் கொள்வாய்
சிவஞானி தன்னுடனே நேசஞ் செய்தே.

என்றன்னைப் பெற்றவனே! அப்பா! அப்பா!
எடுத்தணைத்தே அம்பரத்தில் இருப்போம் யாமே.

ஜீவன் சொல்லுதல்:        நேரிசை வெண்பா:

மறந்தேனோர் வார்த்தை மகிழ்ஞான மூர்த்தி!
துறந்தே னினித்தெரியச் சொல்வாய் சிறந்திலகு

பத்திசெய் வோர்க்குப் பலனே ததைக்கெடுக்கும்
குத்திரருக் கென்ன குணம்?

குரு சொல்லுதல்:        எழுசீர் விருத்தம்:

எண்ணிலாத் தவங்கள் யாகங்கள் செயினும் ஈசுவர விண்ணுவா லயங்கள்
பண்ணுலாங் கவிதை பாடினும் அனேகம் பாரினில் வருபல னேது?

கண்ணுலா வியநற் சுருதிமெய்ப் பொருளைக் கண்டர னடியவர் தமக்கிங்
குண்ணலா மமுத மளித்தவ னடையும் பலனுரைக் கவுமுடியாதே.

வேதமா கம சாத்திரபுரா ணங்கள் விரிந்தநூ லறிந்திடா விந்து
நாதமே யுருவாம் அத்விதா னந்த ஞானமே பெற்றிட வேண்டி

ஓதவல் லவர்சத் துச்சித்தா னந்த முற்றநல் லடியவர் தமக்குப்
பாதபூ சனைகளடங்கலுஞ் செய்தார் பலனெம துரைக்கடங் காதே.

            கட்டளைக் கலித்துறை

அன்ன மளிப்பவ ரைக் கலைப் பார்இவ் அவனிமிசை
இன்ன லவர்க்குப் புரிவார் நினைப்பார் இகழ்ந்திடுவார்
மன்னவ ராயிருந்தே மரிப் பாரை மறலியினி
என்னென்ன வேதனை செய்வான் முடிவி லியம்பரிதே.

சிவனருள் பெற்றுயர் மேலோர் தமக்குஞ் சிவனையுன்னித்
தவஞ்செய்அன் பர்க்குஞ் சிவவேடம் பூண்டிடு தன்னியர்க்கும்
உவந்தே பணிபுரி வார்மே லுலகவ ருண்மையதாய்
அவஞ்செய் தவரை யிகழ்வோ ரடைவர் அருநரகே.

பெரியோர்க்குத் தொண்டுசெய் வாரைத் தடுத்திடும் பேதையரும்
சரியா நடுநிலை சார்ந்தவர்க்கு அல்லல் சமைப்பவரும்
பரிவான தீட்சைகொண் டாரை மறிக்கும் அப் பாதகரும்
எரிவாய் நரகத்தி லெண்ணில் துயரி லிருப்பரன்றே.

        நேரிசை வெண்பா

இந்நூலைப் பார்ப்போர் எடுப்போர் படிப்பவர்
நன்னூ லெனமனத்தி னாடுவோர் பொன்னூற்

படியேறித் தாண்டிப் பவசாக ரத்தைக்
கடவுளர்க்கு முன்னிற்பர் காண்.

சந்தேக மாதிகளைச் சாராம லே அகற்றிப்
பந்தபா சங்களைப் பாழாக்கும் இந்த நூல்
எந்தநா ளும்மழியா தேகாந்த வீடதனைச்
சொந்தமாக் கும்மெனவே சொல்.

        தரவு கொச்சம்

அரனங் கிரிவாழி! அம்பிகைதாள் வாழி!
பெருமான் பதம்வாழி! பின்னைசர ணம்வாழி!
பரமேட்டி யடிவாழி! பாரதிபா தம் வாழி!
கரிமுகவன் கழல்வாழி! கந்தனடி வாழியவே!

வான்வழி! வானையளி மாத வரும்வாழி!
கோன்வாழி! குருவாழி! குவலயத் தோர்வாழி!
ஆன்வாழி! அமரர்முத லிருடிசித் தர் வாழி!
நான்நீ யெனலகற்று நாதாக்கள் வாழியவே!

குருஞான சம்பந்த சுவாமிகள்

சிவபோக சாரம்

1. அடிகள் வணக்கம்)        (நேரிசை வெண்பா

1. சித்திதரும் நாதன் தென்கமலை வாழ்நாதன்
பத்திதரு நாதன் பரநாதன் -  முத்திப்
பெருநாதன் ஞானப் பிரகாசன் உண்மை
தருநாதன் நங்குருநாதன்

2. அருவும் உருவும் அருவுருவும் அல்லா
ஒருவன் உயிர்க்குயிராய் ஓங்கித் - திருவார்
கமலைவரு ஞானபிர காசனென வந்தே
அமலபதந் தந்தெனையாண் டான்.

3. ஆரறிவார் நீதிவழி ஆரறிவார் சித்திமுத்தி
ஆரறிவார் நற்றவங்கள் அன்பனைத்தும் பாரெவர்க்கும்
கத்தன் கமலையில்வாழ் ஞானபிர காசனெனும்
அத்தனென்போல் வந்திலனா னால்?

4. அரியயற்கு முன்னாள் அடிமுடியுங் காணாப்
பெரியவனே வந்து பிறந்து - துரியம்
பெருக்கின்றான் ஞானப் பிரகாச னாகி
இருக்கின்றா னாரூரில் இன்று.

5. கண்டேனிப் பாசங் கழிந்தேன் அமுதைமுகந்
துண்டேன் சுகானந்தத்துள்ளிருந்தேன் வண்டிமிர்காத்
தேனைப் பொழிகமலைச் செங்கமலப் பொற்பாத
ஞானபிர காசனையே நான்.

6. உள்ளிருந்தே என்று முணர்த்துகினுங் கண்டிலரென்
றுள்ளும் புறம்புமா வோமென்று மெள்ள
நரகுருவாய் ஆரூரில் வந்தான் நமையாண்
டருள்புரிஞா னப்பிரகாசன்.

7. இருளுதயம் நீக்கும் இரவியைப்போல் என்னுள்
அருளுதயம் நன்றாய் அருளி மருளுதயம்
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமுஞ்
சாற்றியஞா னப்பிரகா சன்.

8. ஒழியாத பேரின்பத் துள்ளாய் உலகில்
விழியா திருந்திடவே அழியாத
பூரணா! செங்கமலப் பொற்பாதா! தென்கமலை
ஆரணா! நாயேற் கருள்.

9. தேடுந் திரவியமுஞ் சிற்றறிவும் பற்றுதலுங்
கூடும்பொய் யென்றருளிற் கூட்டினான் நாடறிய
ஞானப்ர காசனுயர் நற்கமலை மாநகர் வாழ்
வானப் பிறையணிந்த மன்.

10. காண்பதும் பொய் கேட்பதும்பொய் காரியம்போ லேயிதமாய்ப்
பூண்பதும்பொய் எவ்விடத்தும் போகமும்பொய் மாண்பாகத்
தோற்றியின்ப வெள்ளமாய்த் துன்னியென்னுட் சம்பந்தன்
வீற்றிருப்ப தொன்றுமே மெய்.

2. பெறுதற்கருமை

1. ஒருமையுடன் ஈசனருள் ஓங்கியென்றுந் தூங்கல்
அருமை அருமை அருமை! பெருமையிடும்
ஆங்காரம் கோபம் அபிமானம் ஆசைவினை
நீங்காத போதுதா னே.

2. தன்பெருமை எண்ணாமை தற்போத மேயுறத்தன்
மின்பெருமை யாஞ்சகத்தை வேண்டாமை தன்பால்
உடலைத் தினம்பழித்தல் ஓங்கிசிவந் தோன்றல்
நடலைப் பிறப்பொழியும் நாள்.

3. உரையிறந்தால் உன்னும் உணவிறந்தால் மாயைத்
திரையிறந்தாற் காண்கின்ற தேவை- வரைபெருக
வாசிப் பதும்நாவால் வாழ்த்துவதும் நாடகமாய்ப்
பூசிப் பதுஞ்சுத்தப் பொய்.

4.பரம ரகசியத்தைப் பாழான வாயால்
இரவுபகல் எந்நேர மின்றிக் குரனெரியக்
கூப்பிட்டுங் காணுமோ கோழைமட நெஞ்சமே! மால்
பூப்பிட்டுங் காணாப் பொருள்?

5. ஒரு கோடி ஆகமங்கள் எல்லாம் உணர்ந்தும்
பெருகுதவஞ் சித்தியெல்லாம் பெற்றும்-குருவருளால்
வைத்த படியிருக்க மாட்டாத மாந்தர்க்குச்
சித்தசல னம்மாந் தினம்.

6. அன்புமிக உண்டாய் அதிலே விவேகமுண்டாய்த்
துன்ப வினையைத் துடைப்பதுண்டாய் - இன்பம்
தரும்பூ ரணத்துக்கே தாகமுண்டாய் ஓடி
வருங்கா ரணர்க்குண்மை வை.

3. அறியும் பகுதி

1. உருவை அருவை ஒளியை வெளியை
இருளைச் சிவமென்றி ராதே மருளைப்
பிறந்தறிவிற் கண்டிதனைப் பின்னமற் எங்குஞ்
செறிந்தபொருள் தானே சிவம்.

2. அகமாதிகண்ட அறிவாகி எங்குஞ்
சுகமாகி யின்பச் சுகமாய்ச் சுகாதீதத்
தானந்த வெள்ளம் அதுவாய் சுகத்தையகன்
றானந்த மாதியிலா தான்.

3. இந்தனத்தில் அங்கி எரியுறுநீர் தேனிரதங்
கந்தமலர்ப் போதுவான் காலொளிகண் சந்ததமும்
அத்துவிதம் ஆவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய்
முத்தியிலே நிற்கும் முறை.

4. ஆறாறு தத்துவமும் ஆணவமும் நீங்கியுயிர்
வேறாக நின்றவிடஞ்சொல்லின் மாறா
இருளாய பாவனையற் றெங்குமாய் நின்ற
பொருளேகா ணீயே புணர்.

5. நனவாதி அந்தத்தில் நாடுசுகந் தன்னைக்
கனவாதி அந்தத்திற் கண்டு நனவாதி
தோற்றிடும்போ தாந்தச் சுகரூபங் கண்டவர்கள்
மாற்றிடுவ ரென்றும் மலம்.

6. தத்துவங்கள் எண்ணித் தலையெடுத்துக் கொள்ளாதே
சத்துவங்க ளேதென்னிற் சாற்றக்கேள்: மெத்துஞ்
சுகாரம்ப மாஞ்சிவத்திற் றோயாத மாயா
விகாரங்கள் தத்துவமா மே.

7. ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்
நீறாக முத்திநிலை நிற்போர்க்குப் பேறாகப்
பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியிற் சித்தியிலே
ஓர்விருத்தப் பாதிபோ தும்.

4. உபதேச விளக்கம்

1. பரவிமனம் போகாப் பரத்தடைய நாளும்
இரவுபகல் அற்ற இடத்தே திரமாக
நில்லென்றான் கண்டவெல்லாம் நேதிபண்ணி மும்மலமும்
கொல்லென்றான் ஞான குரு.

2. காயங் கரண முதல் நான்கிற்குங் காரணந்தான்
ஆயவிருள் மாயை அதுவென்றால் தூயபொருட்
போதனே! செங்கமலப் பொற்பாத னே! எனைநீ
ஏதென்று சொல்லா யினி.

3. என்னை யறிவென்றான் என்னறிவில் ஆனந்தத்
தன்னைச் சிவமென்றான் சந்ததமும் என்னையுன்னைப்
பாரா மறைத்ததுவே பாசமென்றான் இம்மூன்றும்
ஆராய்ந் தவர்முத்த ராம்.

4. எங்கும் இருக்கும் அறிவுநீ: ஏகமாய்
அங்கங் குணர்த்தும் அறிவுநாம் பொங்கும்
மலமறைத்தல் மாயை: மயக்கல் விகாரப்
பலமனைத்துங் கன்மமலம் பார்.

5. செங்கமலப் பொற்பாதன் சீர்பாத வல்லபங்கள்
நங்கமலை வாழ்கிளியே! நாடிக்கேள் சங்கையிலாத்
தத்துவத்தைக் காட்டியதிற் றத்துவத்தைக் காட்டியருட்
டத்துவத்தைக் காட்டியது தான்.

6. தேக செறிகமலைச் செங்கமலப் பொற்பாதன்
பேசுதமிழ் ஞானப் பிரகாசன் பாசவினை
வாட்டினான் மீட்டுநான் வாரா வகையருளைக்
காட்டினான் கூட்டினான் காண்.

7. நானிங்காய் நீயங்காய் நாட்டமற வைத்ததற் பின்
நானெங்கே நீயெங்கே நாதாவே வானெங்கும்
ஒன்றாகி நின்ற உணர்வுநீ: உன்னறிவில்
நன்றாகத் தோன்றுசுகம் நான்.

8. அலைவற் றிருந்த அறிவுநீ ஆங்கே
நிலைபெற் றிருந்தசுக ஞேய மலைவற்
றிருந்ததுகண் டாயே இருந்தபடி யத்தோ
டிருந்துவிடெப் போதும் இனி.

9. அகத்தை இழந்தருளாய் அவ்விடத்தே தோன்றுஞ்
சுகத்தில் அழுந்திவிடச் சொன்னான் மகத்தான
சிற்பரனா ரூர் தனில்வாழ் செங்கமலப் பொற்பாதா!
தற்பரஞானப் பிரகா சன்.

10. கிட்டாத ஈசனுனைக் கிட்டி அருள்புரிந்த
நிட்டாநு பூதி நிலையிலே முட்டா
திருவன்னி சேர்ந்துமாற் றேறியபொன் போல
வருமின்பப் பூரணமா வை.

11. அநாதிசுக ரூபி அரனடிக்கீழ் என்றும்
அநாதி சுகரூபி ஆன்மா அநாதி
இருந்தமலம் போக்கி இறையருளி னாலே
இருந்தபடி யேகண் டிரு.

12. இற்றை வரைக்கர ணத்தோ டிணங்கினையே
இவற்றைவரைச் சென்ம மெடுத்தனையே இற்றைவரைத்
துன்பவெள்ளத் துள்ளே துளைந்தனையே ஈதறநல்
லின்பவெள்ளத் துள்ளே இரு.

13. தேகாதி நானல்ல என்றிருந்தால் சித்தமயல்
போகாத தென்னையோ புண்ணியார் தேகாதி
தன்னளவே அம்மயக்கஞ் சத்தியமாய் எப்பொழுதும்
உள்ளளவே இல்லை உணர்.

14. ஆறாறு தத்துவநீ அன்றென் றறிந்தனையே
ஆறாறுங் கண்டறிவ னாயினையே மாறாமல்
உன்னறிவில் ஆனந்தத் தோங்கினையே ஓராமல்
நின்னறிவை விட்டதுவாய் நில்.

15. மாதா பிதா சுற்றம் என்று மயங்கினையே
நீதான் தனுவாகி நின்றனையே ஈதெல்லாம்
பொய்யென் றறிந்தனையே பூரணா னந்தவெள்ளம்
மெய்யென் றறிந்தனையே மெய்.

16. மனையில்வரு போகத்தின் மாதர்மக்கள் பாச
வினையில் அழுந்தி விடாதே உனையிழந்து
காணாமற் கண்டானைக் காட்சி அறக்கலந்து
பூணாமல் எப்பொழுதும் பூண்.

17. சுத்தவத்தை நாடியிடுஞ் சுத்த இராப்பகலா
மெத்தவத்தை நாடி விடுவையேற் சுத்தவத்தை
தானா யிரண்டுந் தவிர்த்த சிவானந்த
வானாவை நீயே மதி.

18. சுத்தநிலம் உன்றனக்குச் சொல்லக்கேள்: தொல்லைவினை
தத்துவங்கள் ஆறாறுந் தாம்பெருகக்-கத்திடுவர்
எல்லாம் இழந்த இடமே அதுவாக
நில்லாய் அதுவே நிலை.

19.நெருப்பென்றால் வாய்சுடுமோ? நெய்பால்தேன் கட்டிக்
கருப்பென்றாற் றித்தியா காணீ விருப்பமுடன்
நீபிரம மென்றக்கால் நீபிரமம் ஆயினையோ
நீபிரமஞ் சற்குருவா நில்.

20. ஆர்க்குந் தெரியாத ஆனந்த இன்பவெள்ளம்
மேற்கொண்டு கொண்டு விடுகுதில்லை யார்க்குந்
தெரியாப் பரபிரமஞ் சேர்த்தாய் உனக்குச்
சரியார் சிதம்பர நாதா!

 
மேலும் பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு »
temple news
நினைமின் மனனே! நினைமின் மனனேசிவபெரு மானைச் செம்பொனம் பலவனைநினைமின் மனனே! நினைமின் மனனே!அலகைத் தேரின் ... மேலும்
 
5. திருமால் பயந்த திசைமுகன் அமைத்துவரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்துமலைமகள் கோமான் மலர் அடி ... மேலும்
 

திரு ஏகம்ப மாலை நவம்பர் 06,2015

(திருக்கச்சி ஏகாம்பரநாதரைத் துதித்துப் பாடிய மாலை)1. அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் ... மேலும்
 

திருத் தில்லை நவம்பர் 06,2015

1. காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் ... மேலும்
 
temple news
1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar