திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2015 11:12
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. டிச.12ல் காப்புக்கட்டப்பட்டு, பகல் பத்து உற்சவம் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமாமணி மண்டபத்தில், உற்சவர் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணிக்கு ராஜ அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார். தொடர்ந்து இரவு 10.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் நம்மாழ்வாருக்கு அருள்புரிந்தார். திரளாக பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் ஏகாதசி மண்டபம் எழுந்தருளி, ஆழ்வாருக்கு மரியாதை நடந்தது. தொடர்ந்து பத்தி உலாத்துதல், அடுத்து தாயார் சன்னதி எழுந்தருளி, உபயநாச்சியாருடன் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. காப்புக்கட்டப்பட்டு இரவு பத்து உற்சவம் துவங்கியது. தினசரி இரவு பத்து உற்சவத்திற்காக மாலை 6.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் நம்மாழ்வாருக்கு காட்சி தருதல் நடைபெறும்.