அகத்திய மகரிஷிக்கு 1008 அஷ்ட அதிக சகஸ்ர கும்ப கலசாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2015 10:12
திண்டுக்கல்: குருமுனி எனப்புகழ் பெற்ற அகத்திய மகரிஷிக்கு வருகிற டிச. 29 அன்று ஜெயந்திவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் திண்டுக்கல் அருகே தென் கயிலாயம் எனப்புகழ் பெற்ற சிறுமலை வெள்ளிமலை அடிவார தியானப்பாறை அருகில் எழுந்தருளியுள்ள அகத்திய மகரிஷிக்கு அவரது ஜென்ம நட்சத்திரமான மார்கழி ஆயில்ய நட்சத்திர 3ம் பாதத்தில் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டும் அகத்திய மகரிஷிக்கு வருகிற டிச. 29 அன்று ஜெயந்திவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறது. விழாவை ஒட்டி காலை 8.30 மணிக்கு மேல் மணிக்கு கோபூஜையும், மகா யாகமும் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து அகத்திய மகரிஷிக்கு 1008 அஷ்ட அதிக சகஸ்ர கும்ப கலசாபிஷேகமும் நடைபெற இருக்கிறது. அதை பக்தர்கள் தங்களது கரங்களாலேயே அகத்தியருக்கு அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பாகும். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு, காலையிலிருந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர், வெள்ளியங்கிரி ஆண்டவர் அன்னதாக்குழுவும், திண்டுக்கல் ஸ்ரீஅகத்தியர் பெருமாள் வெள்ளிமலை கோயில் டிரஸ்டும் இணைந்து செய்கிறது.