பதிவு செய்த நாள்
25
டிச
2015
10:12
திருப்பூர்: வஞ்சிபாளையம் ஆர்.எஸ்.,முருகம்பாளையம், ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர். வஞ்சிபாளையம் ஆர்.எஸ்., அருகே உள்ள முருகம்பாளையம், ஸ்ரீமாகாளியம்மன் கோவில், பொங்கல் திருவிழா, 22ல், பொட்டு சாமிக்கு பொங்கல் வைத்து, ஊர் சுற்றி சோறு எறிதல், கும்பம் அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, அதிகாலை, 4:00க்கு, பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு ஊர்வலம், வாண வேடிக்கை நடந்தது. வெள்ளி காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மன் எழுந்தருளியுள்ள மெரமனை மற்றும் வேல் வாங்கி, கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, ஸ்ரீமாகாளியம்மன் சேவா அறக்கட்டளை, திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று மதியம், 12:00க்கு, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.