Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு மகா ... ஆருத்ரா தரிசனம்: சந்தனம் கலைத்தார் உத்தரகோசமங்கை மரகத நடராஜர்! ஆருத்ரா தரிசனம்: சந்தனம் கலைத்தார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகின் முதல் நடராஜர் கோயிலில் திருவாதிரை தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 டிச
2015
03:12

திருநெல்வேலி: திருநெல்வேலி செப்பறை அழகியகூத்தர் கோயிலில் திருவாதிரை தேரோட்டம் விமரிசையாக நடந்தது. தமிழகத்தில் நடராஜர் ஆருத்ரா தரிசன தாண்டமாடிய பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபை திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் ராஜவல்லிபுரம் அருகே செப்பறையில் அமைந்துள்ளது.

Default Image
Next News

செப்பறை என்பது செப்பு தகடுகளால் வேயப்பட்ட தலமாகும். உலகின் முதல் நடராஜமூர்த்தி கோயில் கொண்டுள்ள தலமாகக் கருதப்படுகிறது. சுற்றிலும் விவசாய நிலங்கள் சூழ்ந்த, குடியிருப்புபகுதிகளே இல்லாத ஏகாந்தமான வயல்வெளியில் அமைந்துள்ளது இக்கோயில். இங்கு மகாவிஷ்ணு, அக்னி பகவான், அகஸ்தியர், வாமதேவரிஷி, மணப்படை வீடு மன்னன் ஆகியோருக்கு சிவபெருமான் நடனக் காட்சி அளித்தது சிறப்புடையது. இங்கு அமைந்துள்ள நடராஜர் சிலைதான், சிவாலயங்களில், முதன்முதலாக வடிவமைக்கப்பட்ட நடராஜர் சிலை என ஸ்தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள அழகியகூத்தர் பெருமானுக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரைத் திருவிழா நடக்கிறது. டிசம்பர் 17ம் தேதி காலையில் விழாகொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அழகியகூத்தர் தேருக்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. கோயிலைச் சுற்றியுள்ள ரத வீதிகளில் வலம் வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு பூஜை, மஹா தீபாராதனை நடைபெற்றது.இதில், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar