சென்னை: திருவாதிரை திருவிழா சென்னையில் உள்ள சில சிவாலயங்களில் கொண்டாடப்பட்டது. விழா முன்னிட்டு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. திருவொற்றியூர் வடிவுடைஅம்மன் கோவில் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னை கோவிலில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.