கரூர்: பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா விழாவை முன்னிட்டு நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் மார்கழிமாத ஆருத்ரா தரிசன விழா நேற்று காலை, 10.30 மணி அளவில் நடந்தது. நிகழ்ச்சியையொட்டி கோவிலில் கல்யாணபசுபதீஸ்வரர் மற்றும் அலங்காரவள்ளி, சவுந்திரநாயகி அம்மனுக்கு திருக்கல்யாண நடந்தது. திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், தீபாராதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.