கோவை: ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஐயப்ப சேவா நண்பர்கள் குழு’ சார்பில், சாய்பாபா காலனி, எட்டாவது வீதி, முத்துமாரியம்மன் கோவிலில், நான்காம் ஆண்டு விளக்குபூஜை நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரித்த, ஐயப்பசுவாமி, பக்தர்கள் சூழ, ஊர்வலமாக, சாய்பாபா காலனி, முத்துமாரியம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு, கே.கே.புதுார் வழியாக, என்.எஸ்.ஆர்., ரோட்டை அடைந்தது. கலெக்டர் சிவக்குமார் வீதி, கருப்புசாமி வீதி வழியாக மீண்டும் முத்துமாரியம்மன் கோவிலை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் வழிநெடுக சுவாமியை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.