மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2015 12:12
தளவாய்புரம்: சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயிலில் ஹரிஹரசுதன் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 14 வது ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. காலையில் விநாயகர், மாரியம்மன், ஐயப்பனுக்கு 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.ஐயப்ப பக்தர்கள் பஜனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.மாலையில் ஐயப்பன், சப்பரத்தில் வீதி <உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடை தில்லையம்பல சுவாமி தலைமையிலான பக்தர்கள் செய்திருந்தனர்.
*சேத்தூர் மேட்டுப்பட்டி ஐயப்ப சுவாமி கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. *சேத்தூர் எக்கலாதேவியம்மன் கோயிலில் மண்டல பூøஐ விழா கொண்டாடப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு யாகங்கள், பூøஐயும் நடந்தன. *சேத்தூர் திருக்கண்ணீஸ்வரர் கோயில் அருகே பஜனை மடத்தில் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா வந்தார். *சத்திரப்பட்டி அருகே வீ.புதூரில் உள்ள ஐயப்பன்கோயிலில் காலையில் கணபதி ஹோமத்துடன் பூøஐ தொடங்கியது. ஐயப்பனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. குருநாதர் சுந்தராஜ் வீட்டிலிருந்து ஆவரண பெட்டி கொண்டு செல்லப்பட்டது.பக்தர்கள் பால் குடம் எடுத்தனர். இதுபோல் சங்கரபாண்டியபுரம்,சமுசிகாபுரம் ஐயப்பன் கோயில்களிலும் மண்டல பூøஐ நடந்தது.