Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அள்ளித்தருவான் வள்ளல் முருகன்! புகழ்ச்சிக்கு அடிமையாகாதீர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இதோ ஒரு புத்தாண்டு சிந்தனை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2015
03:12

சென்னையில் பெரும் மழை பெய்தது. மக்கள் பட்ட கஷ்டங்களுக்கு அளவே இல்லை. ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல், பல பாவங்களைச் செய்யும்போது, அவரது கோபத்துக்கு நாம் ஆளாக நேரிடும். அப்போது, அவர் முதன் முதலாக நம்மைச் சோதிப்பது இயற்கையைக் கொண்டு தான். ஆனால், அவரை முழுமையாக நம்பி, நம் செயல்பாடுகளை நல்லபடியாக அமைத்துக் கொண்டால் நிச்சயம் அவர் உதவுவார். இங்கிலாந்தைச் சேர்ந்த போதகர் ஜியார்ஜ் முல்லர், ஒரு கப்பலில் குவபெக் நகருக்கு சென்று கொண்டிருந்தார். குறிப்பிட்ட ஒரு நாளில் அந்த நகரை அடைய வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. ஆனால், செல்லும் வழியில் பனி மூட்டத்தால் கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. முல்லர் கேப்டனிடம் சென்று,“நீங்கள் கப்பலை கிளப்புங்கள். நான் சனிக்கிழமைக்குள் அங்கு இருந்தாக வேண்டும்,” என்று சொன்னார். கேப்டன் சிரித்தார். “நீங்கள் வெளியே போய் பாருங்கள். பனி மூட்டத்தில் கண்ணே தெரியவில்லை. இப்போதிருக்கும் சீதோஷ்ண நிலையைப் பார்த்தால் இன்னும் 10 மணி நேரத்திற்குள் கடலே உறைந்து போகும் அளவுக்கு குளிர் இருக்கிறது. எனவே நீங்கள் சொல்வது சாத்தியமில்லை,” என்றார். முல்லர் அவரிடம்,“நான் 57 ஆண்டு காலமாக இந்த வழியில் பயணித்து கொண்டிருக்கிறேன். ஒருமுறை கூட நான் சொன்ன நேரத்தில் போகத்தவறியது இல்லை. இப்போதும் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அதற்குரிய வழியை உண்டாக்குவார்,”என்று சொல்லி கேப்டனை அழைத்து கொண்டு ஒரு அறைக்குள் சென்றார். ஜெபிக்க ஆரம்பித்தார். இப்போதும் கேப்டன் அவரிடம்,“உங்கள் ஜெபத்தால் நேரம் தான் வீணாகும். பயன் ஏதும் இருக்கப்போவது இல்லை. இந்த கடல் பயணம் பற்றி அனைத்தும் நான் அறிவேன்,”என்றார். முல்லர் சற்றும் கவலைப்படாமல்,“நீங்கள் சொல்வது பற்றி எனக்கு கவலை இல்லை. ஏனெனில் எல்லா சுற்றுச்சூழல்களையும் தம்முடைய ஆளுகைக்குள் வைத்து நடத்தும், ஜீவனுள்ள ஆண்டவரை எனக்குத் தெரியும். நான் அவரை நம்பியே ஜெபிக்கிறேன்,”என சொல்லிவிட்டு தொடர்ந்து ஜெபித்தார். சற்று நேரத்தில் பனிமூட்டம் விலகியது. கேப்டன் ஆச்சரியப்பட்டார்.  நம்பிக்கையுடன் ஜெபித்தால் எல்லாமே சாத்தியம் என்பதை அறிந்து, தன் வாழ்க்கையிலும் இயேசுவை ஏற்றுக்கொண்டார். இந்த புத்தாண்டில் இருந்தாவது, நாத்திகமும், விதண்டாவாதமும் பேசுவதை விட்டுவிட்டு, நல்லதைச் செய்யவும், ஆண்டவரை நம்பவும், அவரது போதனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவும் உறுதியெடுப்போம்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar