மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2016 11:01
புதுச்சேரி: புத்தாண்டை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவர் தங்க வசத்தில் அருள் பாலித்தார். உற்சவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. சர்வ தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதால் தனிநபர் அர்ச்சனை, சிறப்பு பூஜை, சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகிறது. மதியம் 2 முதல் 3 மணி வரை நடை சாத்தப்படுகிறது. பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் நடை திறந்து இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இத்தகவலை கோவில் நிர்வாக அதிகாரி கருணாகரன் தெரிவித்தார்.