திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் தினமும் நடக்கிறது. இதையொட்டி கோவை மாவட்டம் சவுரிபாளையம் தென்னக சைவசமய பேரவை சார்பில் 63 நாயன்மார்கள் ஊர்வலம் நடந்தது. நாயன்மார்கள் அமர்ந்த தேர் மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டு நான்கு வீதிகள் வழியாக சென்றது. வாசலில் கோலமிட்டு நாயன்மார்களை வணங்கினர். தேவஸ்தான செயல்அலுவலர் சந்திரசேகர் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.