Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம்: ... தி.மலை கோவிலில் விபூதி பிரசாதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று முதல் தமிழக கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு!
எழுத்தின் அளவு:
இன்று முதல் தமிழக கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு!

பதிவு செய்த நாள்

01 ஜன
2016
12:01

மதுரை: தமிழக கோயில்களில் இன்று முதல் ஆடைக்கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது. கடந்த டிசம்பர் 2ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட உத்தரவில், கோயில்களில் வழிபட செல்பவர்கள் ஆன்மிக நெறிகளுக்கு உட்பட்டு ஆடைக்கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அரைக்கால் டவுசர், மினி ஸ்கர்ட், மிடி, ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், குட்டை ஜீன்ஸ் அணியக்கூடாது. ஆண்கள் பாரம்பரிய வேட்டி, பைஜாமா, துண்டு, பேண்ட், சட்டை, அணியலாம். அரைகுறை ஆடையுடன் வரும் பயணிகளை போலீசார் கண்காணித்து அறிவுறுத்த வேண்டும். இந்த உத்தரவை வரும் ஜனவரி முதல் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளது.இதனை தொடர்ந்து இந்த உத்தரவு இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது.இது குறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆடைக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டு பயணிகள் மட்டும் அரைகுறை ஆடையுடன் வருகின்றனர். அவர்களுக்கு இன்று முதல் கோயில் நிர்வாகம் சார்பில் பூஜை பொருட்கள் வழங்கும் இடத்தில் வேட்டி வழங்கப்படுகிறது. இந்த வேட்டிகளை அணிந்து வழிபாடு முடிந்த பின்னர், திரும்ப ஒப்படைக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லட்சக்கணக்கான ரூபாய் செலவில், தங்களின் கனவு வீட்டை கட்டுவோரை பார்த்துள்ளோம் ஆனால், சன்ன மல்லப்பா ... மேலும்
 
temple news
பெங்களூரு: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மலை மஹாதேஸ்வரா மலையில் இன்று திருவிழா நடைபெறவுள்ளது. அதற்காக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 7ம் நாள் சிவராத்திரி விழா யொட்டி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் ... மேலும்
 
temple news
அவிநாசி: மஹா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மகா சிவராத்திரியையொட்டி, பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் மாணிக்கவாசகரின் திருவாசகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar