பதிவு செய்த நாள்
02
ஜன
2016
12:01
திருப்பதி:ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, ஜன, 1 ஏழுமலையானை தரிசிக்க, திருமலையில் பக்தர்கள் குவிந்தனர். நள்ளிரவு முதல், தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்காக, வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தை, தேவஸ்தானம் ரத்து செய்தது. ஜன, 1 காலை, அபிஷேக சேவை தவிர்த்து, அனைத்து ஆர்ஜித சேவைகளும், ரத்து செய்யப்பட்டன. காலை, 6:30 மணி முதல், தர்ம தரிசனம் துவங்கியது. அதிக பக்தர்கள் வருகையால், டிச., 31ல், உண்டியல் மூலம், மூன்று கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. சென்னை, தி.நகரில், திருமலை தேவஸ்தானத்தின் ஏழுமலையான் கோவில் உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு, இந்த கோவிலிலும், ஏராளமான பக்தர்கள், அதிகாலை, 3:00 மணி முதல் சுவாமி தரிசனம் செய்தனர்.