ஊட்டி: காந்தள் காசிவிஸ்வநாதர் கோவிலில் ஜன., 1, 108 சங்காபிஷேகம், ஆலய முன்னேற்ற சங்கத்தின், 29வது ஆண்டு விழாவும் நடந்தது. காலை 7:00 மணிக்கு, கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, ஆலய முன்னேற்ற சங்கம், சேவா சங்கம், மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.