ராமேஸ்வரம் கோயிலில் மாணவிகளுக்கு திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2016 11:01
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாணவிகளுக்கு திருப் பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நடந்தது. பள்ளி மாணவர்களிடம் ஆன்மிகம், நற்பண்புகள் வளர வேண்டி முக்கிய கோயில்களில் பள்ளி மாணவர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று ராமேஸ்வரம் திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் ஒப்புவித்தல் போட்டி நடந்தது. பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளி, விவேகானந்தர் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். கோயில் இணை ஆணையர் செல்வராஜ், மேலாளர் லெட்சுமி மாலா, பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கோயில் ஓதுவார், பள்ளி ஆசிரியர்கள் போட்டியை நடத்தினர். முதல் மூன்று இடத்தை பெற்ற மாணவிகளுக்கு பரிசு, பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.