புதுச்சேரி: கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமி ஏழாம் ஆண்டு ஆராதனை விழா பாக்கமுடையான்பட்டு பார்வதி திருமண மண்டபத்தில் நடந்தது இதையொட்டி, நாதஸ்வர தம்பதிகள் பழனிவேல், பிரபாவதி பழனிவேல் ஆகியோரின் சிறப்பு நாதஸ்வர தவில் இசை கச்சேரி நடந்தது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தவில் ஆசிரியர் துர்காராவ், காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான தவில் வித்வான் செந்தில்குமார் உள்ளிட்ட நாதஸ்வர வித்வான்கள் பலர் கலந்து கொண்டனர்.