பதிவு செய்த நாள்
06
ஜன
2016
12:01
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் நடந்த, படித்திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனத்தில், கலந்து கொண்ட பக்தர்கள், உண்டியல் களில், 53.93 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருத்தணி முருகன் கோவிலில், டிச., 31ம் தேதி, படித் திருவிழாவும், ஜன., 1ம் தேதி, ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடந்தன. 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், மலைக் கோவிலுக்கு வந்து, மூலவர் முருகப்பெருமானை தரிசித்தனர். அப்போது, பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கை, நேற்று முன்தினம், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி, வேலுார் உதவி ஆணையர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது. அதில், 53,93,839 ரூபாய் ரொக்கமும்; 235 கிராம் தங்கமும்; 2,947 கிராம் வெள்ளி பொருட்களும் இருந்தன. கடந்த ஆண்டு படித்திருவிழா மற்றும் புத்தாண்டு தரிசன காணிக்கையை விட இந்தாண்டு, 17 லட்சம் ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.