பதிவு செய்த நாள்
06
ஜன
2016
12:01
ஆர்.கே.பேட்டை : மண்டலாபிஷேக நிறைவை ஒட்டி நடந்த உற்சவத்தில், லட்சுமி நாராயண பெருமாள், சேஷ வாகனத்தில் வீதிஉலா வந்தார். ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுார் அஷ்ட லட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், கடந்த நவ., 18ம் தேதி நடந்தது. அதில், ராஜகோபுரம், மூலவர் விமானம் மற்றும் அஷ்டலட்சுமி சன்னிதிகளுக்கு, பஞ்சவர்ணம் தீட்டப்பட்டு, பொலிவூட்டப்பட்டன. மறுநாள் அதிகாலை, கருட வாகனத்தில் உற்சவர் வீதியுலா எழுந்தருளினார். தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடந்து வந்தது. நேற்று முன்தினம், மண்டல அபிஷேகம் நிறைவு பெற்றது. அதில், காலை, 10:00 மணிக்கு, கோவிலில் சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் நாராயண பெருமாள், சேஷ வாகனத்தில் வீதியுலா எழுந்தருளினார்.