பதிவு செய்த நாள்
10
ஆக
2011
11:08
ஊட்டி : ஊட்டி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது.மதியம் 2.00 மணிக்கு சிறப்பு அர்ச்சனையுடன் துவங்கிய பூஜையை குன்னூர் சாரதா பிரம்ம வித்யா கேந்திரம் சன்யாசினி குருபிரியானந்தா துவக்கி வைத்தார். பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாச்சல அடிகளார் தலைமை வகித்தார். திருப்பூர் தபோவன ஆசிரம ஸ்வாமினி குகப்பிரியா, சேலம் ஸ்ரீவித்யா தர்ம டிரஸ்ட் யோகினி சிவாம்பா சரஸ்வதி, பாரதிய கோவம்சா ரட்சகன் சம்வரதன் பிரசார் சமிதி சுவாமி ஆத்மானந்தா, வி.எச்.பி., மாநில இணை பொது செயலாளர் குமரன் உட்பட பலர் பேசினர். 1008 பேர் பங்கேற்று திருவிளக்கேற்றி வழிபட்டனர்.பெண்கள் ஒற்றுமையாக இருத்தல்; இந்துமதத்தை காப்பாற்றுதல்; மதம் மாறக்கூடாது என்பன போன்ற உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன. இதில், நந்திகவுடர், ஹரிஹரகிருஷ்ணன், அட்டாரி நஞ்சன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விஷ்வ ஹிந்து பரிஷத் தர்ம பிரசார் சமிதி ராமகிருஷ்ணன், சுப்ரமணிய கவுசிக், மரகதம், மோகினி, மாதன் மற்றும் அனைத்து மகளிர் அமைப்பினர் செய்திருந்தனர்.