மதுரை: மதுரை-மேலுார் சாலையிலுள்ள சித்த மருத்துவமனையில் இருந்து இடதுபுறம் செல்லும் ரோட்டில் ஏ.பி. டவுன் ஷிப் அயிலாங்குடி லட்சுமி வராகர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் வருஷாபிஷேக விழா ஜன.,21ல் நடக்கிறது. காலை 8.00 மணிக்கு வராகப் பெருமாளுக்கு சங்கல்ப புண்யாக வாசனம், கும்ப ஸ்தாபனம், திவ்யபிரபந்த பாராயணம், திருமஞ்சனம், அலங்காரம் நடக்கும். பகல் 12.15 மணிக்கு எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் பேசுகிறார்.