ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடைமேடு, ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் மார்கழி மாத அதிகாலை சிறப்பு அலங்கார பூஜை நடந்து வருகிறது. மார்கழி மாதம் முழுவதும் பூஜை நடக்கிறது. தினமும் காலை, 4.30, மணிக்கு மூலவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அன்றைய நாள் நட்சத்திரம் மற்றும் திதி அர்ச்சனை, தீபாராதனை நடக்கிறது,