நெல்லிக்குப்பம்: எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனுார் பத்மதள நாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. கணபதி ேஹாமம் நவகிரக ேஹாமம் ருத்ர யாகங்கள் நடந்தது. ராகுவும், கேதுவும் சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.