கடம்பவனேஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2016 05:01
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் பிரசித்தி பெற்ற கல்யாணசுந்தரி கடம்பவனேஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ேஹமம், நவக்கிரகங்களுக்கு அபிஷேக தீபாராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரக மூல மந்திரம், ராகு, கேது மூல மந்திரம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் 12:00 மணிக்கு தம்பதியருடன் யோக நிலையில் உள்ள ராகு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.