Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பாவை பாடல் 23 திருப்பாவை பாடல் 25 திருப்பாவை பாடல் 25
முதல் பக்கம் » திருப்பாவை
திருப்பாவை பாடல் 24
எழுத்தின் அளவு:
திருப்பாவை பாடல் 24

பதிவு செய்த நாள்

09 ஜன
2016
02:01

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

பொருள்: மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

விளக்கம்: இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இதை போற்றிப் பாசுரம் என்பர். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.

 
மேலும் திருப்பாவை »
temple news
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்பமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்ஆற்றப் படைத்தான் மகனே! ... மேலும்
 
temple news

திருப்பாவை பாடல் 13 டிசம்பர் 28,2024

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனைகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்பிள்ளைகள் எல்லாரும் ... மேலும்
 
temple news

திருப்பாவை பாடல் 12 டிசம்பர் 27,2024

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலைவழியே நின்றுபால் சோரநனைத்தில்லம் சேறாக்கும் ... மேலும்
 
temple news

திருப்பாவை பாடல் 11 டிசம்பர் 25,2024

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்துசெற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்குற்றமொன்றில்லாத கோவலர் ... மேலும்
 
temple news

திருப்பாவை பாடல் 10 டிசம்பர் 24,2024

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar