சின்னசேலம்: சின்னசேலம், ஆஞ்சநேயர் கோவிலில் 84ம் ஆண்டு விழா மற்றும் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. நிகழ்ச்சியையொட்டி, காலை 9:00 மணிக்கு 17 வகை அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனையும், தீபாராதனை காண்பித்து, அன்னதானம் வழங்கினர். தர்மகர்த்தா சீதாராமைய்யர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். சாமிக்கு வடைமாலை சாற்றி சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பித்தனர்.