பதிவு செய்த நாள்
11
ஜன
2016
12:01
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ராஜராமர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா மற்றும் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. கிருஷ்ணகிரி ராசு வீதியில் அமைந்துள்ள ராஜராமர் கோவிலில், கடந்த, 9ம் தேதி அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், சுதர்சன ஹோமம், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நேற்று காலை மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சீதா ராமர் ஹோமம், லட்சுமி ஹோமம், அபய ஆஞ்சிநேயர் ஹோமம், கலச அபிஷேகம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து மண்டல பூஜை நிறைவு அலங்காரம், ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை சிறப்பு பூஜை, மகா மங்கள ஆரத்தி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.