மேட்டுப்பாளையம் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2016 11:01
புதுச்சத்திரம்: மேட்டுப்பாளையம் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் அங்காளம்மன் கோவிலில் மாதம் தோறும் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடப்பது வழக்கம். இந்த மாதம் ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. அதனையொட்டி அன்று மாலை 6:00 மணிக்கு பால், தயிர், நெய், குங்குமம், தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனை நடந்தது.