ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் முத்து மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத 108 திருவிளக்கு பூஜை விழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கோவில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ரவிசுந்தர சிவாச்சாரியார் பூஜையை நடத்தி வைத்தார்.