தியாகதுருகத்தில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பு பூஜைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2016 12:01
தியாகதுருகம்: தியாகதுருகத்தில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தியாகதுருகம் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மூலவர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து வெண்ணை காப்பு மற்றும் உலர் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. வெற்றிலை, வடை மாலை சாற்றி அர்ச்சனைகள் நடந்தது. மகாதீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். அதேபோல் புக்குளம் திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள 21 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மலர் அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது.