மகாராஷ்டிரா துல்ஜாபூரில் உள்ள பவானி கோயில் மிகவும் புகழ்வாய்ந்தது. ஆதிசக்தி பார்வதியாக அவதரித்து சிவபெருமானைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன் இங்கு பவானியாக கோயில் கொண்டால் என ஸ்கந்த புராணம் கூறுகிறது. தேவி பவானி, வீரசிவாஜிக்கு சக்திமிக்க வாளைக் கொடுத்தருளியது இத்தலத்தில் தான். துல்ஜாபூர் என்ற ஊரின் பெயராலேயே இந்த அம்மன் துல்ஜா பவானி என அழைக்கப்படுகிறாள். மூல விக்ரகம் கறுத்த சாளக்கிராமக் கல்லாலும் சலவைக் கல்லாலும் செதுக்கியது. இங்கு நடைபெறும் நவராத்திரி விழா பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் பவானி அம்மன் காட்சி தருவாள். தக் கட்டத்தில் நீராடி வழிபட்டு பிதுர் கடன் செய்தால் இறைவன் அதனை ஏற்றுக்கொண்டு அருள் தருவார். தஞ்சை திருக்காட்டுப்பள்ளி பாதையில் இத்தலம் அமைந்துள்ளது.