Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆல்கொண்டமால் கோவில் திருவிழா ... நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் மார்கழி மாத விடையாற்றி உற்சவம்! நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணும் பொங்கல் கொண்டாட்டம் அலைமோதிய மக்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
காணும் பொங்கல் கொண்டாட்டம் அலைமோதிய மக்கள் கூட்டம்

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
10:01

தமிழகம் முழுவதும், நேற்று காணும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை முதல், கன்னியாகுமரி வரை, அனைத்து மாவட்டங்களிலும், கடற்கரை, பூங்காக்கள், படகு குழாம்கள், சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை நகரில், காலையில் இருந்தே மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வரத் துவங்கினர். திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து, வேன் மற்றும் கார்களில் பொதுமக்கள்வந்திருந்தனர். பிற்பகலுக்கு பின், மெரினா கடற்கரை முழுவதுமே மணல் பரப்பே தெரியாத அளவுக்கு மனித தலைகளாகவே காட்சி அளித்தது. காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்காக தங்கள் வீடுகளில் இருந்து, பலர் உணவு வகைகளை சமைத்து எடுத்து வந்திருந்தனர். அதை மணல் பரப்பில் அமர்ந்தபடியே அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். இதனால், நேற்று மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை திருவிழாக்கோலம் பூண்டது.சென்னை, கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவிலும் சிறுவர், சிறுமியர் கூட்டம் அதிகமாக இருந்தது. பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை கண்டு பரவசம் அடைந்தனர். கன்னியாகுமரி, ஊட்டி, கொடைக்கானல், முட்டுக்காடு, முதலியார்குப்பம் உள்ளிட்ட படகு குழாம்களில் படகு சவாரி செய்ய கூட்டம் குவிந்தது. அவசர உதவிக்காக, சுற்றுலா மையங்களில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.- நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar