பதிவு செய்த நாள்
18
ஜன
2016
12:01
ஓட்டேரி: மாட்டு பொங்கல் கொண்டாட்டமாக, 2,000 பசுக்களை அலங்கரித்து, அவற்றுக்கு விருப்பமான உணவு கொடுத்து, கோபூஜை நடந்தது. சென்னை ஓட்டேரி கொன்னுார் நெடுஞ்சாலையில், மெட்ராஸ் பிஞ்ச்ராபோல் கோசாலை உள்ளது. அதன் நிர்வாகம், 2,000 பசுக்களை பராமரித்து வருகிறது.நேற்று, மாட்டு பொங்கலை ஒட்டி, அங்குள்ள பசுக்கள் அலங்கரிக்கப்பட்டன. இதையடுத்து, சென்னை வைஷ்ணவ சமாஜ் ஆச்சாரியார் அஜய்கோஸ்வாமி தலைமையில் கோபூஜை நடந்தது.காலை, 10:30 முதல், 11:30 மணி வரையிலும், மாலை, 5:30 முதல், 6:30 மணி வரையிலும் கோ பூஜை நடந்தது.