பொள்ளாச்சி: பொள்ளாச்சி கருப்பராயன் கோவிலில், காணும் பொங்கல் விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நேற்றுமுன்தினம் காணும் பொங்கல் விழாவையொட்டி, பொள்ளாச்சி – உடுமலை ரோட்டில் உள்ள கருப்பராய சுவாமி கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. கருப்பராய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும், குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டிருந்தன.