பதிவு செய்த நாள்
19
ஜன
2016
12:01
கோவை : இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில், தை அமாவாசையை முன்னிட்டு காசிக்கு சிறப்பு தனி ரயில் இயக்கப்படுகிறது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் அறிக்கை:தை அமாவாசையை முன்னிட்டு, காசிக்கு சிறப்பு தனி ரயில் இயக்கப்படுகிறது. பிப்., 3ம் தேதி சிறப்பு ரயில் மதுரையிலிருந்து புறப்படுகிறது. திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை, பெரம்பூர் வழியாக புரி ஜெகநாதர் கோனார்க் சூரிய நாராயண கோவில் செல்கிறது. கயாவில், தை அமாவாசையன்று முன்னோர்களுக்கான மரியாதை செலுத்துதல், காசியில் கங்கா ஸ்நானம் மற்றும் அலகாபாத் திருவேணி சங்கமத்தில் நீராடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணத்திட்டம், 10 நாட்களை கொண்டது. இதற்கு நபர் ஒன்றுக்கு, படுக்கை வசதிக்கு, 8,320 ரூபாயும், மூன்றடுக்கு ’ஏசி’ வசதிக்கு, 11 ஆயிரத்து, 440 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ரயில் சுற்றுலா குறித்த விபரங்கள், முன்பதிவுக்கு கோவை ரயில்வே ஸ்டேஷனை, 9003140655, 9003140718 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.