Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தை அமாவாசைக்கு காசி யாத்திரை ... கெங்கவராக நதீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரியில் மூன்று கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2016
12:01

புதுச்சேரி: புதுச்சேரியில் வரதராஜபெருமாள், வில்லியனுார் திருக்காமீஸ்வரர், திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் ஆகிய மூன்று கோவில்கள் கும்பாபிஷேகம் நாளை (20ம் தேதி) நடக்கிறது. புதுச்சேரியில் பழமை வாய்ந்த கோவில்களில் காந்தி வீதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலும் ஒன்று. சிறப்புகளை பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலுக்கு 1998 ம் ஆண்டு சம்ப்ரோஷணம் நடந்தது. தற்போது, ரூ. 4 கோடி செலவில் திருப்பணிகள் முடிந்து, வரும் 20ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. திருக்காமீஸ்வரர் கோவில்: வில்லியனுாரில், 11ம் நுாற்றாண்டில் தர்மபால சோழனால் கட்டிய வரலாற்றுச் சிறப்புடைய, கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் ரூ. 11.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 2012ம் ஆண்டு டிசம்பரில் கும்பாபிஷேக திருப்பணி துவங்கியது. மூலவர் விமானம் மற்றும் முருகர், விநாயகர் சன்னதிகளின் விமானங்கள் புதுப்பிப்பு, 36 அடி உயர புதிய கொடி மரம், திருக்காமீஸ்வரர் மூலவர் சன்னதிக்கு எதிரிலும், அம்பாள் சன்னதி எதிரில், 27 அடி உயரத்தில் மற்றொரு கொடி மரமும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகள் முடிந்து, வரும் 20ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர்: வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில், ஸ்ரீ காமாட்சி, ஸ்ரீ மீனாட்சி உடனுறை கெங்கவராக நதீஸ்வரர் ஆலயம் உள்ளது. காசியை விட வீசம் அதிகம் என்ற சிறப்புடைய இத்தலத்தில், அகத்திய பெருமான் திருகரங்களால் 3000 ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் இருப்பதும், ராகு, கேது பூஜித்த தலம் என பல்வேறு சிறப்புகளை பெற்றது. பழமையான இக்கோவில் திருப்பணிகள் முடிந்து, நாளை 20ம் தேதி காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள், கும்பாபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மாசி மகம் பௌர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் ஒரு புண்ணிய நாளாகும். மாசி ... மேலும்
 
temple news
ஈரான் இஸ்ரேல் போரில் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் மற்றும் நெடுங்காலம் பதிகம் ஆகிவற்றை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar