Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயில் உண்டியல் வசூல் ரூ.2.12 ... சபரிமலையில் நெய் அபிஷேகம் நிறைவு இன்று குருதி பூஜை! சபரிமலையில் நெய் அபிஷேகம் நிறைவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதயாத்திரை பக்தர்களுக்கு மூலிகை மசாஜ்
எழுத்தின் அளவு:
பாதயாத்திரை பக்தர்களுக்கு மூலிகை மசாஜ்

பதிவு செய்த நாள்

20 ஜன
2016
12:01

சாணார்பட்டி: நத்தம், சாணார்பட்டி வழியாக செல்லும் பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு பல அமைப்புகள் சார்பில் இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.  நேற்று சாணார்பட்டியில் கடலுõர் மாவட்டம் ஊத்தங்கால் பகுதியை சேர்ந்த போகர் சித்த வைத்திய சாலை சார்பில் மூலிகை எண்ணெய் கொண்டு பாதங்களில் தடவி பக்தர்களுக்கு இலவச மசாஜ் செய்தனர்.  ஊத்தாங்காலை சேர்ந்த இளங்கோவன் இந்த வைத்திய சாலையை நடத்தி வருகிறார். கடந்த 35 ஆண்டுகளாக பழநிக்கு பாதயாத்திரை செல்லும் இவர் ஆரம்பத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று இந்த சேவையை வழங்கினார்.  கடந்த 5 ஆண்டுகளாக தன்னுடன் ஒரு குழுவை அழைத்துக்கொண்டு சேவை செய்து வருகிறார்.  சிவகங்கை மாவட்டம் சொக்கலிங்கபுரம், சாணார்பட்டி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் ஒவ்வொரு நாள் தங்கி சேவை செய்கின்றனர்.  இது குறித்து இளங்கோவன் கூறியதாவது: காட்டுச்சோம்பு, ஓமம், கற்பூரம், நல்லெண்ணெய் ஆகியவற்றை கொண்டு மூலிகை எண்ணெய் தயார் செய்கிறோம். குன்றக்குடியில் இருந்து பாதயாத்திரை செல்வது வழக்கம். கால் வலியுடன் செல்லும் பக்தர்களுக்கு வலி நிவாரண சேவை அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தானாகவே ஏற்பட்டது. இதன் மூலம் ஒருவித திருப்தி கிடைக்கிறது என்றார்.  இதே போல் திண்டுக்ல் மாவட்ட பூஜாரிகள் சங்கம் சார்பில் நிலவேம்பு  கஷாயம், சீரக குடிநீர், நீர்மோர் வழங்கும் முகாம் நடந்தது.  மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் துவக்கி வைத்தார். கிழக்கு மாவட்ட அமைப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar