பழநி,: பழநி மலைக்கோயில் உண்டியலில் 13 நாட்களில் ரூ. 2 கோடியே 12 லட்சத்து 72 ஆயிரம் கிடைத்துள்ளது. பழநி மலைக்கோயிலில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 385 கிராம், வெள்ளி 10 ஆயிரத்து 900 கிராம், வெளிநாட்டு கரன்சி 365 மற்றும் ரொக்கமாக ரூ. 2 கோடியே 12 லட்சத்து 72 ஆயிரத்து 789 கிடைத்துள்ளது. தங்கத்திலான வேல், திருமாங்கல்யம் மற்றும் வெள்ளியிலான தொட்டில், முருகன் சிலைகள் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம் மற்றும் கோயில் அலுவலர்கள், வங்கிப்பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.